அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!
மருத்துவ தாவரங்களில் ஒன்றான நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான கேன்சரை குணப்படுத்தக்கூடிய சக்தி நித்தியகல்யாணிக்கு உள்ளது.
மேலும் முகத்தில் உள்ள பருக்கள் உடம்பில் இருக்கக்கூடிய மருக்கள் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த தாவரத்திற்கு உள்ளது. இதை டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலில் நித்திய கல்யாணியின் இலையையும் பூவையும் பறித்து இரண்டு முறை நன்றாக தண்ணீரில் கழுவி விட வேண்டும். இப்போது 7 லிருந்து 10 இலையை எடுத்து இஞ்சி இடிக்கும் உரலில் நன்றாக இடித்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்றாக இடித்த பிறகு வடிகட்டியில் வடித்து தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இதை டயாபடீஸ் உள்ளவர்கள் 4 லிருந்து 5ml தினமும் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு செய்ய பிடிக்காதவர்கள் தினமும் இரண்டு நித்திய கல்யாணி இலைகளை நன்றாக மென்று விட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீரை குடித்துக் கொள்ளலாம்.
மேலும் இந்தச் செடியின் வேர் உயர் ரத்த அழுத்தத்திற்கு மிகவும் பயன்படுகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த செடியின் வேரை நன்றாக மென்று சாப்பிட்டு வர உடனடியாக குணமாகும். அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, முகத்தில் பருக்கள், வடுக்கள், கரும்புள்ளிகள் உள்ளவர்கள் இந்த செடியின் இலையை நன்றாக இடித்து அதன் சாறை எடுத்து முகத்திலோ, படர்தாமரை, சொரிசிறங்கு இருக்கும் இடத்திலோ தேய்த்துவர படிப்படியாக குணமாகும்.
இதெல்லாம் மட்டுமின்றி சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இந்த இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக செய்து வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறும்.