பழிக்கு பழியாக கொலை முயற்சி! கூலிப்படையின் கொட்டம் அடக்கிய காவல் துறை.!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் முதல் கம்பம் செல்லும் வழியில் கடந்த 7.6.22 உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவில் வசித்து வந்த துரைராஜ் மகன் சுரேஷ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் கே.புதூரில் பணத்திற்காக ஆட்களை வைத்து ராஜா என்பவரை கொலை செய்ததற்காக பழிக்கு பழி என்று பழி வாங்கும் நோக்கத்துடன் கம்பம் பகுதியில் தங்கியிருந்து திட்டம் போட்டு கொலை செய்தே ஆகவேண்டும் என்ற பழிவாங்கும் நோக்கில் சுரேஷ் யை வழி மறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த பல குற்ற பின்னணி மற்றும் பல கொள்ளை கஞ்சா கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த மதுரை செல்லூர் மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் நாகராஜ் மற்றும் ராஜா மகன் ரஞ்சித்குமார் ஆகியோரைப் பிடிக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்கள் உத்தரவின்படி தேனி மாவட்ட சைபர் கிரைம் குழுவின் உதவியுடன் உத்தமபாளையம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் தலைமையில் தனிப்படை குழு அமைத்தனர்.
மதுரையில் பல பகுதிகளில் சல்லடை போட்டு தேடி குற்றவாளிகளை மதுரையில் பதுங்கி இருந்தவர்களை உத்தமபாளையம் காவல் துறையினர் குழு காவல் ஆய்வாளர் க.சிலைமணி அவர்கள் தலைமையில் மிகத் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உத்தமபாளையம் காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைகள் படி உத்தமபாளையம் பகுதியில் காவல் துறையின் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டக்குறியது தற்போது நடைபெற்ற கொலை,கொள்ளை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்தது குறித்து உத்தமபாளையம் பொதுமக்களும் தன்னார்வலர்களும் காவல் துறையை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.