கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

0
193

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த காயை தவறாமல் சாப்பிட வேண்டும்!

அதிக அளவு ஞாபக சக்தி இருக்க வேண்டும் என்றால் நம் உணவில்வெண்டைக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த போலிக் அமிலமானது மிகவும் முக்கியமானதாகும்.

வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்தாக உள்ளது. தவிர மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியவையாக உள்ளது.

பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டு.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் உண்டாகும் நாள்!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! நிதி அனுகூலமாக உள்ள நாள்!