ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! இந்த இடத்தில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
நாட்டில் பல்வேறு போக்குவரத்து வழிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூர பயணங்களுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதிகின்றனர்.
எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான புதிய புதிய சலுகைகளை தினமும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு இடையில் வாரம்தோறும் இயக்கப்பட்டு வருகின்ற சிறப்பு ரயிலானது ஆகஸ்ட் மாதம் 23 முதல் ரனியலில் நின்று விட்டு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு ரயிலானது இனிமேல் ஆகஸ்ட் 23 முதல் ரனியலில் சரியாக ஒரு நிமிடத்திற்கு நின்று விட்டு பிறகு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ரயில் சரியாக 4.22 மணிக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்போல, ஒவ்வொரு வாரமும் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 24 முதல் அடுத்து செப்டம்பர் ஏழாம் தேதி வரை ரனியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் அதிகாலை 5.43 மணி அளவில் வந்து சரியாக ஒரு நிமிடத்திற்கு ரனியலில் நின்று பிறகு செல்லும் என்று அறிவிக்கபட்டுள்ளது.