டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!

0
81

 

டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்..

 

டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

சமையலறையின் அத்தியாவசிய பொருள்களில் முக்கிய ஒரு பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகின்றது. ஒரு சிலர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். மற்றும் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

 

இந்த தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஒரு சில பகுதிகளில் தள்ளுபடி விலையிலும் சலுகை விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ தக்காளியின் விலை 259 ரூபாயை தொட்டுள்ளது.

 

டெல்லியில் கடந்த 14ம் தேதி முதல் தக்காளி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சீராக இருந்து வந்த தக்காளியின் விலை தற்பொழுது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டு வந்த பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது. டெல்லியில் பல இடங்களில் சராசரியாக ஒரு கிலோ தக்காளியானது 203 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே சமயம் அரசின் அன்னை பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக அன்னை பண்ணை கடைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் “காலநிலை மாறுபாடுகள் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் மொத்த விலையும் தக்காளியின் சில்லரை விலையும் கடுமையாக அதிகரித்து வருகின்றது” என்று கூறினார்.

 

ஆசியாவின் மிகப் பெரிய சந்தை என்று அழைக்கப்படும் டெல்லி ஆசாத்பூர் காய்களி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இது குறித்து ஆசாத்பூர் தக்காளி சங்கத்தலைவர் அசோக் கவுசிக் அவர்கள் “கனமழை பெய்து வருவதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. எனினும் அடுத்த 10 நாட்களில் இந்த நிலை மாறும் அல்லது மேம்படும்” என்றார்.

 

ஆசாத்பூர் சந்தை விற்பனையாளர்கள் “நேற்று(ஆகஸ்ட்2) ஆசாத்பூர் சந்தைக்கு 15 சதவீதம் தக்காளி மட்டுமே வந்துள்ளது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து 6 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது” என்று கூறினர்.