ஒரே சேவைக்கு மூன்று வழிகளில் கட்டணமா? எந்த வகையில் நியாயம்? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஒரே சேவைக்கு மக்களிடமிருந்து மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்கலாமா என்று பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அறிவித்த நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் … Read more

அதிமுகவின் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்

Lakshmanan

அதிமுகவின் முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவருமான லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார். கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இதில் முதன்மையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக திமுகவில் அதிருப்தியில் இருந்த வி.பி துரைசாமி,தற்போதைய சட்டமன்ற … Read more

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

சுலபமாக இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல கட்டங்களாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரி திறக்கபடுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும்  மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு … Read more

கொடுத்த வாக்குறுதியை மீறி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப்பாதை … Read more

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr.Ramadoss

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை … Read more

கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு … Read more

மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்

PMK Struggle Against Sand Quarry in Cuddalore

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்த மணல் குவாரியை பாமகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற கிராமத்தில் பாயும் மணிமுத்தாறில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பாக மாநில சுற்றுசுழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்று, மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையத்தின் வாயிலாக ஓர் ஆண்டிற்கான ஒப்பந்தத்துடன் அங்கு அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு, இன்று காலை அதனை ஆரம்பித்தனர். இந்த பகுதியில் பாயும் … Read more

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம் சமீபத்தில் திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக திமுகவின் எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலையடுத்து அவரை திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கி அக்கட்சியின் … Read more

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசால் இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம் சமீபத்தில் வெளியான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ பி எஸ் பதவிகளுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்ணை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட மதிப்பெண் குறைவாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுகவின் மக்களவை உறுப்பினரான … Read more

அரசியலுக்காக இப்படியா? ரவுடியை கூட விட்டு வைக்காமல் தூக்கிய பாஜக

Kamalalayam-News4 Tamil Online Tamil News

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இந்நிலையில் வடசென்னையை கலக்கிய மாஜி ரவுடியான கல்வெட்டு ரவி என்பவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை … Read more