தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை – திமுக இரட்டை முகம் குற்றச்சாட்டு

Police action against sanitation workers in Tamil Nadu – DMK double-faced accusation

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் நிரந்தர பணிக்கான உரிமைக்காக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் திடீர் நடவடிக்கை மேற்கொண்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் திடீர் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த எச்சரிக்கையும் இன்றி போலீசார் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். பெண்கள், வயதானவர்கள், நீண்ட காலமாக தினக்கூலியாக பணியாற்றியவர்கள் என அனைவரும் பலவந்தமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். சோர்வால் விழுந்து போன பணியாளர்கள், போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் … Read more

இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (Q1) வளர்ச்சி! எதிர்பார்ப்புகளை மீறிய உயர்வு

India's first quarter (Q1) growth data for the financial year 2025-26

இந்தியாவின் GDP 7.8% உயர்வு, எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளளது. இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (ஜூன் 30, 2025 முடிவடைந்த காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி கண்டுள்ளது என்று ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிபுணர்கள் 6.5%–7% வளர்ச்சியை மட்டுமே கணித்திருந்த நிலையில், இது அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறியுள்ளது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் 6.5% வளர்ச்சியும், முந்தைய காலாண்டில் (Q4 FY25) 7.4% வளர்ச்சியும் … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம். 2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம். RailOne – ஒரே ஆப்பில் … Read more

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

Northern State youth arrested for smuggling drugs including gutka

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட … Read more

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Protest against sale of shares of Tamil Nadu rural banks

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது … Read more

இயற்கையாக வீட்டை குளிர்ச்சியாக்கும் ஹை டெக் பெயிண்ட் 

High-tech paint that naturally cools the house

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. இது நீர் … Read more

மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

Can a human survive after death? Announcement made by a German company! Fee 2 crores

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது. செலவு எவ்வளவு? இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் … Read more

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

Teacher eloped with college student! College administration shocked by affair!

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more

நான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Palanisamy Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர … Read more

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமை மீட்பு பயணம்: அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் … Read more