இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

Anup Chandra Pandey

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மூன்று பேர் கொண்ட குழு அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த … Read more

3 மின்சார நிறுவனங்களை வாங்குகிறது டாட்டா! மத்திய அரசு அனுமதி!

power grid

ஒடிசா மாநிலத்தில் மின்சாரம் விநியோகிக்கும் மூன்று நிறுவனங்களின் பங்குகளை டாட்டா நிறுவனம் பெறுவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெஸ்டர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா, சதர்ன் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஓடிசா மற்றும் சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி சப்ளை கம்பெனி ஆஃப் ஒடிசா ஆகிய 3 நிறுவனங்களின் தலா 51% பங்குகளை டாட்டா பவர் கம்பெனி பெறுவதற்கு போட்டியில் சட்டம் 2002, பிரிவு 31 (1) இன் கீழ் இந்திய போட்டியில் ஆணையகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மின்சாரச் சட்டம் 2003, பிரிவு 20 இன் கீழ் ஒடிசா மின்சார ஒழுங்குமுறை … Read more

கொரோனா பாதித்த பெண் தப்பியோடி காய்கறி விற்றதால் அதிர்ச்சி!

Telangana covid affected woman sell vegetable

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று காய்கறி விற்பனை செய்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் மிரியாலகுடா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், காய்கறிகளை வாங்குவதற்காக அங்குள்ள சந்தைக்கு சென்றார். அப்போது கொரோனா  வைரஸ் தொற்று பாதிப்புக்கு நேற்று சிகிச்சை பெற்ற பெண், மறுநாளே காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரித்து மருத்துவனை செல்லுமாறு அந்த … Read more

மீண்டும் வருகிறது ஐபிஎல் கிரிக்கெட்! பிசிசிஐ தகவல்!

IPL

ஐபிஎல் கிரிக்கெட் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. மே 2ஆம் தேதி வரை மொத்தம் 29 போட்டிகள் நடை பெற்றன. ஆனால் வீரர்கள் சிலருக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதால் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், எஞ்சிய கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் … Read more

பெற்ற தாயை பாத்ரூமில் அடைத்து சோறு போடாத பிள்ளை! சேலத்தில் நடந்த கொடூரம்! 

Son tortured mother

சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

கொரோனா பாதித்த சிங்கங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Stalin Visit Vandaloor Zoo

கொரோனா பாதித்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இறந்தது. ஏற்கனவே ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா (உத்திரபிரதேசம்) சிங்க உலாவிடப் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

நடுக்கடலில் மருத்துவ உதவி கோரிய கப்பல் கேப்டனை மீட்டது இந்திய கடற்படை! வீடியோ உள்ளே!

Indian Coast Guard rescued a ship captain

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிக கப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்கு நேற்று காலை 4.30 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்கு கப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. … Read more

தமிழக பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம்: கனமழைக்கு வாய்ப்பு!

Rain alart

மத்திய அரபிக் கடல் பகுதி, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை,  இன்று மத்திய அரபிக் கடல் பகுதி, மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மேலும் முன்னேறியுள்ளது. மேற்கு … Read more

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! உயிரிழப்பும் குறைந்து வருவதால் நிம்மதி!

Corona Patients

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் குறைந்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை 36ஆயிரம் என்ற உச்சத்தைத் தொட்டு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 20,421 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், கோவையில் 2,645 பேருக்கு அதிகபட்சமாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,644 பேரும், ஈரோட்டில் 1,694 பேரும், சேலத்தில் 1.071 பேரும், திருப்பூரில் 1,068 பேரும் … Read more