தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி

தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பள்ளி,கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் கல்விக்கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். இது … Read more

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

குஜராத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர்! காரணம் என்ன தெரியுமா ?

குஜராத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்தி உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா என்ற பகுதியில் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது.இவர் இருதய நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியாரை மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி மருத்துவமனையில் இருந்ததால் வந்திருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மனைவிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கணவர் தனது குழந்தைகளுடன் சேர்த்து … Read more

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த காதலன்; காதலியை பார்க்க வந்து கிணற்றில் தவறி விழுந்த சோகம்!

ஜிலான் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஜிலான் ஒரகடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவிற்காக சென்றுள்ளார்.மேலும் பிறந்தநாள் விழாவை முடித்து விட்டு வீடு திரும்பும்போது தனது காதலியை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் காதலியை பார்க்க காதலியின் வீட்டிற்குள் சத்தமின்றி நுழைந்துள்ளார்.அப்பொழுது யாரோ ஒருவர் வருவது போல் தெரிந்ததால் பயந்து போன ஜிலான் அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றபோது 45 அடி ஆழ கிணற்றில் … Read more

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் வெட்டிக்கொலை ; சென்னையில் நடந்த கொடூரம்!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் வெட்டிக்கொலை ; சென்னையில் நடந்த கொடூரம்!

ஊரடங்கு காரணமாக பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள பலர் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல இயலாததால் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பியுள்ளனர்.மேலும் சென்னையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.சென்னை குன்றத்தூரில் உள்ளவர் குணசேகர் என்பவர்.இவரது விட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.இந்நிலையில் 4 மாத காலமாக ஊரடங்கு … Read more

இந்திய இராணுவத்தினர் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்திய இராணுவத்தினர் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்க வேண்டும்! மத்திய அரசு அதிரடி உத்தரவு

பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கக்கோரி ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதால் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் இந்தியா சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.இதனை அடுத்து இந்தியா சீனாவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.இந்நிலையில் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து … Read more

வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!

வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.இந்நிலையில் உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் மூலம் முகக்கவசத்தை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனாவிலிருந்து நம்பை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் மற்றும் சானிடைசரை பயன்படுத்துகிறோம்.இந்நிலையில் ஒரு புதிய முயற்சியாக பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து … Read more

38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் இந்தியாவிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ற பல காரணங்களால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்க விலை 36 ஆயிரத்தை கடந்தது.அதன்பிறகு தங்க விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,008 ஆகவும்,கிராமுக்கு … Read more

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜூலை 13-ம் … Read more

சி.பி.எஸ்.இ 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு! சி.பி.எஸ்.இ அறிவிப்பு

சி.பி.எஸ்.இ 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு! சி.பி.எஸ்.இ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சி.பி.எஸ்.இ 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை வைத்துக்கொண்டு இதர தலைப்புகளை நீக்குவதாக மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் இந்தியாவில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறைக்கப்பட்ட பாடங்களில் உள்ள தலைப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கலாம்.மேலும் … Read more

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை எளிதில் குணமாகக்கூடும். இந்த மணத்தக்காளி கீரையை குழந்தைகள், இளைஞர்கள்,கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் உட்கொள்ளலாம். மணத்தக்காளிக் கீரையை குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடுவதால் குடல் புண்கள் எளிதில் குணமாகும். மேலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது.வெறும் கீரையாக உண்டாலே வாய்ப்புண் ஆறும்.ஆனால் இந்தக் கீரையில் சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் எளிதில் வாய்ப்புண் குணமடையும். வாய்ப்புண் உள்ள போது மணத்தக்காளி சீரகம்,காய்ந்த மிளகாய் சேர்ந்து எண்ணெயில் … Read more