போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி

How to change the Backround from Photos-News4 Tamil Online Technical News in Tamil

போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி  ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு விசயம்  மகிழ்ச்சியை தரும், அப்படி பொதுவாக  எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருவது போட்டோஸ் தான், அந்த வகையில் ஒருவர் எடுக்கும் போட்டோ  நல்லா இருந்தாலும் அதன் பேக்கிரவுண்ட் சரி இல்லாத காரணத்தாலேயே பல சமயம் அந்த புகைப்படம் யூஸ் பண்ணமாலேயே போய்விடும். அப்படி குறிப்பிட்ட புகைப்படங்களில் இருந்து பேக்கிரவுண்டை (back ground) நீக்குவது எப்போதும் ஒர் சவாலான செயலாகும். அதே சமயம் பேக்கிரவுண்டை நீக்குவதற்கு செலவிடும் … Read more

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கட்சிகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், … Read more

கருப்பு பணம் குறித்த தகவல்கள் – வெளியிட அரசு மறுப்பு !!!

கருப்பு பணம் குறித்த தகவல்கள் - வெளியிட அரசு மறுப்பு !!!

கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு குறித்து அந்த நாட்டிடமிருந்து தகவல்களை பெற்றுள்ளது. தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாகி. முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் அளித்துள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்து அரசு அளித்துள்ள தகவல்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், … Read more

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை!

தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இராமதாஸ் அவர்கள் மரியாதை! தந்தைப் பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மருத்துவர் இராமதாஸ் அவர்கள் மரியாதை செலுத்தினார் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படும் பகலவன் தந்தைப் பெரியாரின் 46-ஆவது நினைவு நாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவருடன் வன்னியர் சங்கத் தலைவர் பு. தா. … Read more

“NO CAA” “NO NRC” சொல்லும் கேரளாவின் புதுமண தம்பதியர்கள்

Couples use wedding photoshoots to protest against CAA and NRC

“NO CAA” “NO NRC” சொல்லும் கேரளாவின் புதுமண தம்பதியர்கள் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியான கேரளாவின் புதுமண தம்பதிகளின்  புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.   திருமண நினைவுகளை மீண்டும் மீண்டும் மலரவைக்கும் வகையில் இருப்பது திருமணத்தில் புகைப்படம் தான்.  திருமணத்துக்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு நிகராக, திருமணத்துக்கு முன்னரும் பின்னரும் என `கப்புள் ஷூட்’ புகைப்படங்கள் எடுப்பதற்கும் செலவிடப்படுகிறது.  இப்போ எல்லாம் வெடிங் அவுட்டோர் போட்டோஷூட் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் … Read more

வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் !!!

வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் !!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருவதோடு தட்டுப்பாடும் நிலவிவருகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்தது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அமைச்சக அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில் ” நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருகிறது, டில்லி,மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது, இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் … Read more

“5 பேருக்கு தூக்கு” – பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு.

அமெரிக்காவில் வெளிவரும் “வாஹிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்தார் பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோகி. சவுதியில் பிறந்தவரான அவர் கடந்த அக்டோபரில் துருக்கியில் அமைந்துள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு, விவாகரத்து தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் வாங்க சென்றிருந்தார். அவர் திரும்பி வராத நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலில் இந்த கொலை நடந்ததாக … Read more

‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ – அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

'ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்' - அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த இரு தினங்களாக வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள, டில்லி ராஜ்காட்டில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்., தலைவர் சோனியா காந்தி, முன்னாள் … Read more

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!!

ஐந்தாவது மாநிலமாக ஜார்கண்டில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க !!! ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பா.ஜ.க தனித்து ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜே.எம்.எம் ), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், பா.ஜ.க 79 தொகுதிகளில் தனித்து களம் கண்டது,  ஜே.எம்.எம் 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் … Read more

“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” – மாணவி ரபிஹாஅதிரடி

“என்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன்” - மாணவி ரபிஹாஅதிரடி

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்., துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கும்  பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, … Read more