வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் !!!

0
68

நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருவதோடு தட்டுப்பாடும் நிலவிவருகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்தது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சக அதிகாரி இதுபற்றி தெரிவிக்கையில் ” நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெங்காய விலை உயர்ந்துவருகிறது, டில்லி,மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ 100 முதல் 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது, இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக எகிப்து, துருக்கி,ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பகுதியாக இறக்குமதி செய்யப்பட்ட790 டன் வெங்காயம் மும்பை வந்தடைந்துள்ளது. இவை டில்லி மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இவை கிலோ ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் “அடுத்த கட்டமாக இன்னும் 12 ஆயிரம் டன் வெங்காயம்  இந்த மாத இறுதிக்குள் இறக்குமதி செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படும்” என்றும் தெரிவித்தார் 

author avatar
Parthipan K