“உலகம் ஒரு குடும்பம் ” – மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

"உலகம் ஒரு குடும்பம் " - மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

உலகளவில் பலவகையான அழகு போட்டிகள் நடப்பதுண்டு. உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளை தாண்டியும் பல வகையில் அழகு போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அழகி போட்டிதான்  மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி. இது  உலகின் மிகப் பழமையான போட்டியாகும். கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இந்நிலையில்  சமீபத்தில் நடந்த இந்த ஆண்டிற்கான மிஸ் டீன் சர்வதேச போட்டியில் பங்கேற்ற இந்தியாவின்  வதோதராவைச் சேர்ந்த பதினாறு வயதான … Read more

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” – இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

“வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான போராட்டம்” - இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று மதியம் 3 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் … Read more

சர்ச்சையில் சசி தரூர் !!!

சர்ச்சையில் சசி தரூர் !!!

சசி தரூர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். `தி கிரேட் இந்தியன் நாவல்’ என்கிற புத்தகத்தை மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் விடுதலைக்குப் பின் 30 ஆண்டுகளை முன்வைக்கும் நையாண்டி கற்பனைப் படைப்பாக எழுதியிருந்தார். 1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சசி தரூர், இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியிருப்பதாகக் கூறி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு … Read more

புயலின் கோரத் தாண்டவத்தில் மரண ஓலமிட்டு தனுஷ்கோடி அழிந்த நாள் இன்று: 55ஆம் ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்…

Dhanuskodi

1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன. இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே … Read more

என். ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ – மத்திய அரசின் விளக்கம்.

என். ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ - மத்திய அரசின் விளக்கம்.

நாடு முழுவதும் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பெரும் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள்பதிவேடு தயாரிப்பும் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கான அவசியம் என்ன ? மலேசியா பிரதமர் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கான அவசியம் என்ன ? மலேசியா பிரதமர் கேள்வி

இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாளன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பிரதமர் மகாதீர். “மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோன்றதொரு நடவடிக்கையை இங்கு (மலேசியா) மேற்கொண்டால் என்ன நடக்குமென்பது உங்களுக்குத் தெரியும். அனைவரும் பாதிக்கப்படுவர்,” என்றார் மகாதீர். … Read more

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள் மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றடைந்தார். விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சி கொடியுடன் பத்திற்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில … Read more

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர்

நாராயணசாமியை கதறவிடப்போகும் அமித்ஷா! தனக்கு தானே சூடுவைத்து கொண்ட காங் முதலமைச்சர் புதுச்சேரியில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்டார்,. அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்,. ஆட்சியே கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் … Read more

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு – அதிர்ச்சியில் பா.ஜ.க ?

ஜார்க்கண்ட் தேர்தல் கருத்துக்கணிப்பு - அதிர்ச்சியில் பா.ஜ.க ?

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பபதிவுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி … Read more

விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி – உத்தவ் தாக்ரே

விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி - உத்தவ் தாக்ரே

மராட்டிய மாநிலத்தில், வறட்சி, போதிய விளைச்சல் இன்மை, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே … Read more