தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை?

கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலங்களில் தமிழகத்தில் ஓரளவுக்கே கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், படிப்படியாக இது அதிகரித்து கொண்டே போனது. தப்லிக் ஜமாஅத், கோயம்பேடு சந்தை என கொரோனா காரணிகள் அதிகரித்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. மஹாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தது. தற்போது தடுப்பூசி புழக்கம் அதிகரித்ததால் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனலாம். தமிழகத்தில் தற்போது கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே … Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை- திமுக வின் முடிவு என்ன?

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை- திமுக வின் முடிவு என்ன?

நேற்று காலையில் திருச்சி மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தனர். கைதிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பார்வியிட்டனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது, ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்னடத்தை காரணமாக கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த வருடத்தில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பற்றி இரண்டு வாரத்தில் முடிவு செய்யப்படும். இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் தான் சிறைச்சாலை உள்ளே ஐ.டி.ஐ. … Read more

101 கோடி கோவிட் தடுப்பூசிகளை விநியோகம் செய்த இந்திய அரசு

101 கோடி கோவிட் தடுப்பூசிகளை விநியோகம் செய்த இந்திய அரசு

இந்திய அரசு மொத்தம் 101.70 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சற்று .கூட தொடங்கியது. இதனால் மத்திய அரசு மொத்த இந்தியாவையும் ஊரடங்கு சட்டத்திற்குள் கொண்டு வந்தது. பொது போக்குவரத்து முடக்கப்பட்டது, பள்ளிகள், கோவில்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்திய மருத்துவ நிபுணர்களும் கொரோனாவை எதிர்த்து போரிட மருத்துவ துறையை பலம் கொண்டதாக மாற்ற முயற்சி செய்து வந்தனர். புனே சீரம் இன்ஸ்டிடூட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கான … Read more

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது. MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது. முதலில் சசிகலா தலைமையில் … Read more

கத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!

கத்ரீனா கைப், விக்கி கௌஷல் நிச்சயதார்த்தம்!

பாலிவுட் நடிகைகளில் கத்ரீனா கைப் வசீகரமான முக அழகும், சிக்கென கட்டுடலும் கொண்டவர். தூம் படத்தில் இவர் ஆடிய ‘சிக்கினி செம்மலே’ பாடல் யாராலும் மறக்க முடியாது. சில காலம் பாலிவுட் சகோதரிகளான கரீனா கபூர், கரிஷ்மா கபூர் அவர்களின் சகோதரனான ரன்பீர் கபூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டர். பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான்கானுடன் வதந்திகள் வந்தன. தற்போது நடிகர் விக்கி கௌஷளுடன் கத்ரினாக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விக்கி கௌஷல் … Read more

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது, சற்றும் குறைந்தபாடில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணத்தினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வானது கடந்த 7 ஆண்டுகளை விட மிக அதிகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் உயர்ந்துள்ளது .பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

கேப்டன் டோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டமா?

நேற்றைய முன்தினம் நடந்த ஐபில் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணையை எதிர்த்து ஆடியது. இதில் சென்னை அணி 3 விக்கட்டுகள் மட்டுமே இழந்து 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் டோனி தலைமையில் இது சென்னை அணி வாங்கும் நான்காவது ஐபில் கப். ஐபில் கோப்பையுடன் சென்னை அணிக்கு 20 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதையும், பெங்களூரு வீரர் ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்) … Read more

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை

சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தமிழ் மாத பிறப்பின் போது நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். இதன்படி ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 5 நாட்களுக்கு பூஜை நடைபெறும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட இருந்தது. … Read more

வாடகை கட்டிடத்தில் தொடங்கவிருக்கும் மதுரை எய்ம்ஸ்!

வாடகை கட்டிடத்தில் தொடங்கவிருக்கும் மதுரை எய்ம்ஸ்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக மத்திய அரசு பல வருடங்களாக கூறி வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுப் பணி கூட நடந்தது. டெல்லி எய்ம்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். டெல்லி எய்ம்ஸ் போலவே தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கட்ட எல்லா பணிகளும் ஆயத்தமாயின. அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் … Read more