இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,829 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,49,374 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 940 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,01,782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82,260 … Read more

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

அக். 4 உலக அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,51,32,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,61,23,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,71,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,100 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,37,961 … Read more

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு!

வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்து வந்தது. இதையடுத்து, அவர் கொரோனா … Read more

தமிழகத்தில் அக். 03 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் அக். 03 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 65 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,596 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை … Read more

இந்தியா அணு ஆயுத சோதனையில் மீண்டும் வெற்றி !! டிஆர்டிஓ-வுக்கு குவியும் பாராட்டு !!

இந்தியா அணு ஆயுத சோதனையில் மீண்டும் வெற்றி !! டிஆர்டிஓ-வுக்கு குவியும் பாராட்டு !!

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகணை சோதனை இன்று (அக்டோபர் 3) வெற்றிகரமாக நடந்தது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகளையை, இன்று ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணையானது , 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கினை தாக்கும் திறமை கொண்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக விரைவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்படும் என மத்திய அரசு … Read more

பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு! முதல்வர்

பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு! முதல்வர்

பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வருகின்ற 7ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், https://twitter.com/TNGOVDIPR/status/1312298119220977664?s=20 தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளனர். வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று பெரியாறு அணையிலிருந்து கம்பம் … Read more

இந்தப் பகுதிக்கு செல்ல நிச்சயம் இ-பாஸ் வேண்டும் !! இதுதான் காரணம் !!

இந்தப் பகுதிக்கு செல்ல நிச்சயம் இ-பாஸ் வேண்டும் !! இதுதான் காரணம் !!

தமிழகத்தில் சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இ-பாஸ் முறையை மத்திய,மாநில அரசு கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் இ-பாஸ்ன்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நடைமுறைக்கு வந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவலில்  விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதினால், மக்கள் அனைவரும் சுற்றுலாத் தலமான ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு அதிக அளவில் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனை … Read more

தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் தொடர்ந்து இரு நாட்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்பு :! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் … Read more

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!

இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் தன்மை மாற்றமடைந்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீரென உள்வாங்கியது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் கடல் உள்வாங்கிய படியே இருந்ததாகவும் ,திருவள்ளுவர் சிலை இருக்கும் வரை கடல் உள்வாங்கி இருப்பதனை நன்றாக காணப்பட்டதாக அப்பகுதி … Read more