கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருக ஸ்ரீ மகா விஷ்ணு மந்திரம்!

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருக ஸ்ரீ மகா விஷ்ணு மந்திரம்!

ஓம் க்லீம் ஹரயே நமஹ காக்கும் கடவுளான ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு உரிய மந்திரம் தான் இது இந்த மந்திரத்தை இல்லற வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும், பெண்களும், நாள்தோறும் காலையில் விஷ்ணு படத்திற்கு முன்பாக நின்று 27 முறை அல்லது 108 முறை சொல்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு தம்பதிகளுடன் சென்று பெருமாளுக்கு பூக்கள் சமர்ப்பணம் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை தம்பதிகள் இருவரும் சேர்ந்து … Read more

ஆடி அமாவாசை விரதம்!

ஆடி அமாவாசை விரதம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்து கொண்டிருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து நம்முடைய முன்னோர்களை வழிபாடு செய்தால் வாழ்வில் பல சிறப்புகளை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசையன்று ஆற்றிலோ அல்லது குளத்திலோ குளித்துவிட்டு இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று வருடங்கள் இருப்பதால் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்ற பிரபலமான ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகின்றது. அந்த விதத்தில் இந்த வருடம் சென்ற மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா ஆரம்பமானது. அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே ஆண்டாள் ரங்க மன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் ஐந்தாவது நாள் திருவிழாவில் ஐந்து கருட … Read more

இன்றைய வானிலை நிலவரம்!

இன்றைய வானிலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், கோவை, திண்டுக்கல், சேலம், உதகை, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்றும் மற்ற மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை மறுநாள் … Read more

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனையை இல்லையாம்! சொல்வது யார் தெரியுமா?

சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அவை அந்தந்த மின் நிலையங்களை பொறுத்து வெவ்வேறு தினங்களில் தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். பராமரிப்பு பணி மின் நிறுத்தத்தை வைத்து தமிழகத்தில் மின் வெட்டு என்று தெரிவித்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த அவர், பராமரிப்பு பணிகள் முடிவுற்ற பின் உடனடியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை இருப்பதாக ஒரு சிலர் புரளியைக் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்! பதக்கம் வெல்லுமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் கோல்ப் விளையாட்டில் பங்கேற்க இருக்கின்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக்குமார் அவர்களுக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் தனிநபரின் மொத்தம் நான்கு சுற்றுகள் நடந்தது அதில் அமெரிக்காவின் நெல்லி கோர்டா 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அதிதி அசோக் குமார் 207 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கின்றார், 203 புள்ளிகளுடன் 4 வீராங்கனைகள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாக்கர் 220 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் … Read more

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற ஒன்றரை வருட காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இணையதளம் மூலமாக வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் எடுப்பது என்று தமிழக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இணையதள வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைய ஆரம்பித்திருக்கிறது என்று … Read more

மீண்டும் புதிய யாத்திரை திட்டம் தீட்டும் பாஜக! அனுமதிக்குமா தமிழக அரசு?

மீண்டும் புதிய யாத்திரை திட்டம் தீட்டும் பாஜக! அனுமதிக்குமா தமிழக அரசு?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முருகன் பொறுப்பேற்ற சமயத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்து தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்தினார் முருகன் இதனை தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கால்பதிக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம்! இன்று வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம்! இன்று வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை தெரிவித்து தற்சமயம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய், … Read more

பெட்ரோல் டீசல் விலை! நிம்மதியில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல் டீசல் விலை! நிம்மதியில் வாகன ஓட்டிகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் … Read more