குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம்! இன்று வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

0
127

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை தெரிவித்து தற்சமயம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

நோய்தொற்று நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய், 14 வகையான மளிகை பொருட்கள் பேருந்துகளின் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நோய் தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி என்று அடுத்தடுத்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் மூன்றாம் வருட நினைவு நாளான இன்றைய தினம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.