தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்எல்சி நிர்வாகம்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மீண்டும் அத்துமீறும் என்.எல்.சி நிர்வாகம்!  கடலூர் மாவட்டத்தில் மீண்டும் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மூன்று பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு அதிமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்த்தனர். இதுகுறித்து தமிழக … Read more

சேத்தியாதோப்பு அருகே வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்!  எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணியை தொடங்கியதால் தடுத்து நிறுத்திய கிராம மக்கள் பணியை தொடங்கிய அடுத்த நொடியே திரும்பி அனுப்பப்பட்ட ஜேசிபி எந்திரங்கள். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டது. இன்று எந்த ஒரு … Read more

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் தியான மண்டபம்! பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு! இலங்கையில் மலையக பகுதியில் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பு விழாவும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நடைபெற்றது. இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக … Read more

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!  அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள … Read more

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி … Read more

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். … Read more

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!

குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் !  நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர் கிராமம் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய மலை கிராமமாகும் இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை கொத்தூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் … Read more

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது!

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது சென்னை, புளியந்தோப்பு, திரு.வி.க நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வயது 25. இவர் மேற் கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். காவாங்கரை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் புளியந்தோப்பு அம்பேத்கார் நகர் 1வது தெரு வழியாக தனது மனைவியுடன் வீட்டி ற்கு சென்று கொண்டிருந் … Read more

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கரூர் பகுதியில் கூலிவேலைக்காக தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கரூரில் வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மோகனூர் வழியாக கொளக்குடி நோக்கி வந்து சென்று கொண்டிருந்த சதிஷ்குமாரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி தொட்டியம் வரை வருகிறேன் எனக்கூறி லிப்ட் … Read more