ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை!

0
125
#image_title

ரயிலில் அடிப்பட்டு மூன்று பெண் புள்ளிமான்கள் பலி-வனத்துறையினர் விசாரணை! 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மான்களின் சட்டத்தை கைப்பற்றி விசாரணை கொண்டு வருகின்றனர். வெயில் காலம் ஆனதால் தண்ணீர் தேடி வழி தவறி வந்தமான்கள் ரயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இறந்த மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்கள். அருகே ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பரிதாபமாக பலியானது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட வனத்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி ரயில் பாதையில் வழித்தவறி வந்த முன்று பெண் மான்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மான்களை கைப்பற்றி ஆற்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்கள்.

இதனையடுத்து ஆற்காடு வனத்துறை அலுவலர் மற்றம் வனசரகர்கள் சம்பவயிடத்திற்கு வந்து இறந்த 3 பெண் மான்களின் உடல்களை கைப்பற்றி எந்த பகுதி வனத்திலிருந்து இந்த மான்கள் வழித்தவறி வந்ததா? அல்லது தண்ணிர் தேடி வந்தபோது நாய்கள் தூரத்தியதால் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்ததா என வனத்துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

இறந்த மான்களின் உடல் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்கள்.

author avatar
Savitha