சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

சென்னை வந்தடைந்தார்! தோனி காரணம் என்ன?

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2021 (IPL 2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு மெகா ஆக்சன் நடைபெறுவதால் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று தோனி சென்னை வந்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மட்டுமில்லாமல் அணியில் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் போன்ற முக்கிய … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு; இன்று தொடக்கம்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு; இன்று தொடக்கம்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இன்றும், நாளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 437 எம்பிபிஎஸ், 97 பல் மருத்துவ இடங்கள் அடங்கும். மேலும், இன்று … Read more

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் புதிய வீடியோ!

தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் புதிய வீடியோ!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், மாணவியின் … Read more

நிலவில் மோதி வெடிக்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

நிலவில் மோதி வெடிக்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ‘தி ஃபால்கன் 9 பூஸ்டர்’ ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது. ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக்டோவல் … Read more

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!

சிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!

விழாக்களில் கிராண்ட் என்ட்ரி கொடுப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக மணமகன் ஒருவர் தனது திருமண நிகழ்வுக்கு தனித்துவமான முறையில் வந்துள்ளார். சிம்லாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, கிரிபார் பகுதியின் சங்கரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் சங்கரா கிராமத்தில் இருந்து 30 கி.மீ தள்ளியிருக்கும் ரத்வா கிராமத்தில் நடக்கவிருந்தது. திருமணத்தன்று காலை மணமகன் … Read more

பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள்; தீர்வு கிடைக்குமா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம். அது ஒரு மாலை நேரம். வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் ராம் ராஜ் . அப்போது மாடு ஒன்று அவரைத் தாக்கியது.அடுத்த சில நிமிடங்களில், அவரது பேரக் குழந்தைகள் கூச்சலிட்டு, அவரை மாடு தாக்குவதை திகிலுடன் பார்த்தனர். 55 வயதான அந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். “இது ஒரு வேதனையான மரணம். எனது மாமியார் … Read more

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், துரை நகர் அருகே வாணியம்பாடி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. அவருக்கு வயது 40. அவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 34. இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பகட்டுபாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது … Read more

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைய வாய்ப்பு!

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைய வாய்ப்பு!

இந்தியாவில், கொரனோ வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அதுபோன்று, ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்வின் என்ற தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு வகை தடுப்பூசிகளுக்கும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அன்று அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இவ்விரு, தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் சந்தை அனுமதி கோரி மத்திய … Read more

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது, அதிகமான பக்கங்களில் அச்சிடப்படும் துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதில், நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த, நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில், ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப் படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது. பட்ஜெட் … Read more

போராட்டம் எதிரொலி ;நடக்கவிருந்த ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு !

போராட்டம் எதிரொலி ;நடக்கவிருந்த ரயில்வே தேர்வுகள் ஒத்திவைப்பு !

ரயில்வே துறையில், நிலை 1 மற்றும் தொழில் நுட்பம் சாராத பல்வேறு வகை பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகளை பல்லாயிரக்கணக்கானோர் எழுதினர். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 14ம் மற்றும் 15ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு அடுத்த மாதம் 15 மற்றும் 23ம் தேதிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது, தேர்வர்கள் மத்தியில் கடும் … Read more