கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விலை குறைய வாய்ப்பு!

0
69

இந்தியாவில், கொரனோ வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அதுபோன்று, ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்வின் என்ற தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த இரண்டு வகை தடுப்பூசிகளுக்கும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அன்று அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இவ்விரு, தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் உற்பத்தி நிறுவனங்கள் சந்தை அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

இதன் மீது இன்னும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

ஆனால், இந்த தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதியை வழங்கிய உடன் இவற்றின் விலை குறையும் என தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசி களுக்கு சந்தை விலை மலிவாக நிர்ணயிக்கும் பணியை தொடங்குமாறு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.