கலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நேற்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியிருந்தது. அதில், இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிட சின்னபொண்ணு, நமிதா, பவானி, ராஜு, நிரூப் … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான பவானி ரெட்டி தனது கணவரின் தற்கொலை பற்றி சென்டிமென்டாக பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி மற்றும் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. மேலும், சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நேற்று, விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பவானி ரெட்டி கலந்து கொண்டார். அதில், அவர் தாம் எப்போதும் அமைதியாக இருக்கும் … Read more

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மேலும், கலை மற்றும் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!! பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு.!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்வர். இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், வருகின்ற 17ம் தேதி முதல் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து 21ம் தேதி … Read more

இன்றுடன் முடிகிறது.!! உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம்.!!

உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்டமாக நடைபெற உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more

ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

ன்று மாலை நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 48 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு … Read more

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது போட்டியில் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. திரௌபதி … Read more