சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?

0
133
#image_title

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருவதில் வாழைப்பழம்,வாழைப்பூ,வாழையிலை மற்றும் வாழைத்தண்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாழைப்பழம்,வாழைப்பூக்களை அதிகம் உணவில் எடுத்து வரும் நாம் வாழைத்தண்டை அந்தளவிற்கு விரும்பி உண்பதில்லை.அதேபோல் அதன் மகத்துவத்தையும் யாரும் அறிந்து கொள்வதில்லை.

இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து,பொட்டாசியம்,வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.வாழைத்தண்டில் சூப்,பொரியல்,ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக கல் பாதிப்பு,நெஞ்சு எரிச்சல்,தீப்புண் காயங்கள்,மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

வாழைத்தண்டு – 1 கப் (நறுக்கியது)

சீரகத்தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகுத் தூள் – 2 சிட்டிகை

எலுமிச்சை சாறு – தேவைக்கேற்ப

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:-

1)முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.

2)அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் நறுக்கி மோரில் ஊறவைத்துள்ள வாழைத்தண்டு,சிறிதளவு உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போடவும்.பின்னர் வெந்து 3 விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

3)பின்னர் விசில் சத்தம் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் உள்ள வாழைத்தண்டு மற்றும் நீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும்.

4)எடுத்து வைத்துள்ள வாழைத்தண்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.

5)பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அரைத்து வடிகட்டி வைத்துள்ள கலவையை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

6)அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

7)பின்னர் மற்றொரு அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் வாழைத்தண்டு கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.

8)பின்னர் அதில் சீரகத்துள்,தூள் உப்பு,மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கொதிக்கும் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.இப்படி செய்தால் வாழைத்தண்டு சூப் மிகவும் சுவையாக இருக்கும்.

Previous articleபாலாடையில் இருந்து வாசனை மிகுந்த நெய் தயாரிக்கும் முறை!! இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!!
Next articleவீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!