வங்கிக் கணக்குகளை 0 பேலன்ஸ் கணக்காக மாற்ற வேண்டும்!!! முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த வங்கி ஊழியர் சங்கம்!!!
தற்பொழுது 1000 ரூபாய் உரிமை தொகை பெரும் பெண்களின் வங்கிக் கணக்கை 0 பேலன்ஸ் வங்கி கணக்காக மாற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் வசிக்கும் ரேஷன் கார்ட் அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை கெடுக்கும் திட்டத்தை இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து 1000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பித்த பெண்களில் தகுதியுள்ளவர்களுக்கு வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்த 1000 ரூபாயை எடுப்பதில் பெரும் சிக்கலும், கஷ்டமும், பிரச்சனைகளும், குழப்பமும் ஏற்பட்டுகின்றது. இதனால் வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எச் வெங்கடாசலம் அவர்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழக வங்கி ஊழியர் சங்கத் தலைவர் சி.எச் வெங்கடாசலம் அவர்கள் “மகளிர் உரிமை தகை பெறும் பெண்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது சில குழப்பங்களும், கஷ்டங்களும், பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.
வங்கியில் இரண்டு விதமான சேமிப்புக் கணக்குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஒன்று ஜீரோ பேலன்ஸ் கணக்கு. மற்றொன்று சாதாரணமான சேமிப்பு கணக்கு ஆகும்.
ஜீரண பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் முழு தொகையையும் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கில் முழுத் தொகையை எடுத்தாலும் அபராதம் விதிக்கப்படாது.
ஆனால் சாதாரணமான வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் இருப்பு எப்பொழுதுமே இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதாவது 500 ரூபாய்க்கு கீழ் 1 ரூபாய் குறைந்தாலும் அதற்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.
விதிமுறைகளின் படி ஜீரண பேலன்ஸ் கணக்கை சாதாரணமான சேமிப்புகணக்காக மாற்றலாம். ஆனால் சாதாரணமான சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்காக மாற்ற முடியாது.
மகளிர் உதவித் தொகை பெறுவதற்காக பெண்கள் பலர் அளித்துள்ள வங்கிக் கணக்கானது சாதாரணமான சேமிப்பு கணக்கு ஆகும். அதனால் சாதாரணமான சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் தொகை குறையும் பொழுது குறிப்பிட்ட சிறிய தொகை அபராதமாக வசூல் செய்யப்படுகின்றது.
எனவே குறைந்தபட்ச தொகைக்கள் சேமிப்பு கணக்குகளில் இல்லாத பொழுது வங்கிகள் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரணமான சேமிப்பு கணக்குகள் வைத்துள்ள பெண்களின் வங்கிக் கணக்கை ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்காக மாற்ற வேண்டும். இதற்கு அரசு வங்கிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறும் பெண்கள் எந்தவொரு சிறு குறையும் இல்லாமல் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையை முழுமையாக பணத்தை பெறுவதற்கு இந்த இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற வேண்டும். தமிழக அரசுதான் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.