முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Parthipan K

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார்.

திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து நாளை நடக்க உள்ள நடப்பு ஆண்டிற்கான  வேளாண் கண்காட்சி விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த நிகச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளது. மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படம் திட்டத்தை முதல்வர் நாளை  தொடங்கி  வைக்க உள்ளார்.இதற்காக அரசின் எரிசக்தி மாநிலத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நிதின் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.

இலவச மின் இணைப்பு கோரி விண்ணபித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 1 லட்சத்தி 50000  விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே முதலமைச்சர் இரண்டு நாட்கள் சென்னையில் தங்க உள்ளதால் அவரின் பாதுகாப்பு கருதி நாளை திருச்சி மாவட்டம் முழுவது ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று மற்றும் நாளை திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்களை உத்தரவை மீறி பறக்க விட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார்.