சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே!

0
199
#image_title

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் குளியல் பொடி!! இதை தயாரிப்பது சுலபமே!

கெமிக்கல் சோப்பை மேனிக்கு பயன்படுத்துவதை விட குளியல் பொடி தயாரித்து மேனிக்கு பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அலர்ஜி,நோய்கள் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கஸ்தூரி மஞ்சள் கிழங்கு
2)வேப்பிலை
3)குப்பைமேனி இலை
4)ஆவார இலை
5)பூந்திக்காய் தோல்
6)கோரை கிழங்கு
7)ரோஜா இதழ்

செய்முறை:-

ஒரு கப் பன்னீர் ரோஜா இதழ்,ஒரு கப் வேப்பிலை,ஒரு கப் குப்பைமேனி இலை,ஒரு கப் பூந்திக்காய் தோல்,ஒரு கப் ஆவார இலையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு மற்றும் 1/4 கப் கோரை கிழங்கை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அதில் காய வைத்த பொருட்களை போட்டு நைஸாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

சோப்பிற்கு பதில் இந்த பொடியை உடலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல்,மங்கு,தோல் நோய்,சரும பாதிப்பு ஆகியவை முழுமையாக குணமாகும்.

Previous articleமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? இதோ சிம்பிளான இரண்டு வழிமுறைகள்!
Next articleஉங்கள் தலையில் அதிகளவு முடி கொட்டுகிறதா? அப்போ இந்த ஆயிலை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!