பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்! வெளியிட்ட பிரபல நடிகர்!!

0
195

பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்! வெளியிட்ட பிரபல நடிகர்!!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.

‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி அந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் அந்த பாடல் வெளியாகும் எனவும் பீஸ்ட் படத்தின் படக்குழு அறிவித்திருந்தது. மேலும் கில்லி படத்தின் உள்ள ஒரு அதிரடியான பாடல் பீஸ்ட் படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் வெளியிடுங்கள் என்றும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கேட்டு கொண்டுள்ளார்.

Previous articleஇந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
Next articleஇதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!