இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

0
55

இதை செய்ய தவறியவர்களுக்கு அபராதம்! நேற்று ஒரு இரவில் மட்டும் இவ்வளவு!!

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பரவல் காரணமாக இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

மத்திய அரசும் அவ்வப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு அவை அமலில் உள்ளன.

இந்நிலையில் அதிகரித்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும்  பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

அதன் அடிப்படையில் நேற்று இரவு பத்து மணி முதல் இன்று காலை ஐந்து மணி வரை இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களிடம் இருந்து 175 இருசக்கர வாகனங்கள், ஒன்பது ஆட்டோ மற்றும் ஒரு கார் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 11 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு நேரங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K