நம்புங்க.. இப்படி செய்தால் இனி உங்கள் வீட்டு பக்கம் ஒரு எலி கூட அண்டாது..!!

Photo of author

By Divya

நம்புங்க.. இப்படி செய்தால் இனி உங்கள் வீட்டு பக்கம் ஒரு எலி கூட அண்டாது..!!

நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

தேவையான பொருட்கள்:-

*விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்

*வினிகர் – 1 ஸ்பூன்

*புதினா இலை – 20

*வரமிளகாய் தூள் – 1 ஸ்பூன்

*தண்ணீர் – தேவையான அளவு

*ஸ்ப்ரே பாட்டில் – 1

செய்முறை…

முதலில் 20 புதினா இலைகளை தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வரமிளகாய் தூள், 1 ஸ்பூன் வினிகர், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விடவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள புதினா சாறை அதில் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இதை எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்யவும். இவ்வாறு செய்தால் எலி தொல்லைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.