தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

Photo of author

By Divya

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்றாக கொய்யா கனி இருக்கின்றது.கொய்யா பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தோம் என்றால் பல நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கொய்யாவின் பயன்கள்:

1.அதிகளவு பொட்டாசியம்,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,புரதம்,வைட்டமின் சி மற்றும் பி6,கால்சியம், இரும்பு,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

2.அதிகப்படியான பைட்டோ நியூட்ரியன்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் கொண்டுள்ள இந்த பழம் உடலில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது.

3.அதிகளவு நார்ச்சத்து கொண்டுள்ள கொய்யா உடலில் செரிமானம்,வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.

4.தினமும் ஒரு கொய்யா பழத்தை உண்டு வந்தோம் என்றால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை ஒழியும்.காரணம் கொய்யா அதிக அமில தன்மை கொண்ட பழம் ஆகும்.

5.மூலம் பாதிப்பால் அவதி படும் நபர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொய்யா பழத்தை உண்டு வருவது மிகவும் நல்லது.

6.இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த கொய்யா பழம் உதவுகிறது.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.