வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!!

0
221

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!!

வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம்.

உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, வேடிக்கையாக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வெங்காயத்தை அவ்வளவு சல்லிசாக எடை போட்டுவிட முடியாது. காரணம் சின்ன வெங்காயத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான பலன்கள்.

ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று தெரிந்தால் நீங்கள் தவறாமல் தினசரி உணவில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இருப்பினும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம்.

இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேக வைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.

வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசும் என்று சங்கடப்படுவதுண்டு. அதைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது.

சாப்பிட்டு விட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடி விடும்.

சிறுநீரகப் பிரச்னை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்னைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

அப்படி வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் அவை என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை கீழே பாருங்கள்.

வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் தியோசல்பினேட்டுகள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்குகளால் குறைகிறது.

அப்படி நெஞ்சுவலி பிரச்னை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் உறையும் பிரச்னை சரியாகும்.

இந்த கால்சியம் அளவு வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது. எனவே வெங்காயம் சாப்பிடுவது சிறந்த எலும்பு ஆரோக்கியத்தை உருவாக்க உதவும்.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

மார்பக புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயத்தை பசையாக அப்படியே உட்கொள்வது மாதவிடாய் நின்ற பின் உண்டாகும்.

Previous articleஇந்த ஒரு கிளாஸ் போதும்!! 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும்!!
Next article1சொட்டு விட்டால் போதும் காது சீழ் வடியும் பிரச்சனை குணமாகி விடும்!!