எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள்! கட்டாயம் தினமும் இதனை சாப்பிட்டு வாருங்கள்!

0
150

எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள்! கட்டாயம் தினமும் இதனை சாப்பிட்டு வாருங்கள்!

எலும்புகளுக்கு வலிமையை அளிக்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம்

இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகியவை கால்சியம் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த கால்சியம் பிரச்சனை அதிகம் உள்ளது இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாகவும் சரி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கால்சியம் சத்து நிறைந்த பொருளான பாலில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகமாகவே நிறைந்துள்ளது. இதனை நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது . ஒரு கப் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளது. இதனை தயிர் மற்றும் வெண்ணெய் எடுத்துக் கொள்வதனால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.

மீனில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகப்படியாகவே நிறைந்துள்ளது. கீரை வகைகளில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அந்த வகையில் பசலைக் கீரையில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளது . காய்கறி வகைகளில் வெண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

ஒரு கப் வெண்டைக்காயில் 82 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. நாம் தினம் சாப்பிடக்கூடிய உணவுகளுடன் வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வது சிறந்தது. பாதாம் பருப்பில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஒரு கப் பாதாமில் 76 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. தினமும் 45 பாதாம் சாப்பிட்டு வருவதன் மூலமாகவும் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

அத்திப்பழம் இதில் ஒரு நாளைக்கு தேவையான 25 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது மற்றும் சோயா பீன்ஸ் ஒயிட் பீன்ஸ் போன்ற உணவுகளில் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

author avatar
Parthipan K