BJP: மத கலவரத்தை உண்டாக்கும் பாஜக அண்ணாமலை மீது வழக்கு பதிவு.. திடீர் கைது நடவடிக்கை?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீப காலமாக பல சிக்கல்களில் தானாகவே சென்று தலையை விட்டு விடுகிறார். இவரது பேச்சு தான் இதற்கு மூலதனம் என்று கூட கூறலாம். இவர் அணிந்திருந்த ரபேல் வாட்ச் பற்றி பேசி பல சர்ச்சைகளில் தானாகவே சென்று சிக்கிக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கும் இவர் பேச்சு தான் முக்கிய காரணம். அந்த வரிசையில் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் பொழுது இந்து கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று ஒரு சில கிறிஸ்துவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது.
அவர்களின் முக்கிய நோக்கமாக இருப்பது தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க கூடாது என்பதுதான். இதன் விளைவாக வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இது குறித்து எடுத்து கூறி இந்த தொண்டு நிறுவனங்கள் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.
அந்த பணத்தை வைத்து நீதிமன்றத்தில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடாது என அவர்கள் வழக்கை போடுவதாக கூறினார். இவ்வாறு இவர் பேசியதை சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பெரிதும் எதிர்த்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்துள்ளார்.அவ்வாறு ஆய்வு செய்ததில் வழக்கு போட்டதாக அண்ணாமலை கூறியது எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும் கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடாது என வழக்கு போட்டவர் ஓர் இந்து என்பதும் அவர் பெயர் அர்ஜுன் என்றும் கூறியுள்ளார். மத நல்லிணக்கத்துடன் பழகும் மக்கள்களுக்கிடையே இவ்வாறு மோதலை ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் முதலில் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.ஆனால் அவர்கள் தக்க நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை.இதனைத்தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் மனு அளித்ததார். அந்த வழக்கானது நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேற்கொண்டு அண்ணாமலை மீது வழக்கு தொடர வேண்டுமென்றால் அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டனர்.இந்த உத்தரவையடுத்து மனுவானது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் அனுப்பப்பட்டு கார்மேகம் அவர்கள் அதனை அரசிடம் சேர்த்தார்.
இந்த மனுவை விசாரித்த அரசு வழக்கறிஞர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யலாம் எனக் கூறி உத்தரவிட்டார். இது குறித்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.மேற்கொண்டு இந்த வழக்கானது வரும் நான்காம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.