அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

0
73
#image_title

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு இந்த ழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தால் அரசு ஊழியரக்ளுக்கு அதிக பயன் இல்லை என்பதினால் தேசிய பென்சன் திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி வசதி இருந்தது. அதேபோல் பென்சனுக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படாது. ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின் நிலையான பென்சன் கிடைப்பதற்கான வழி வகை இருந்தது. அரசு ஊழியர் ஒருவர் எதிர்பாரா விதமாக பணிக்காலத்தில் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு பென்சன் வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி வசதி இல்லை. அதேபோல் அரசு ஊழியர் பணி ஓய்வு பெற்ற பின் வழங்கப்படும் பென்சனுக்காக அவரது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். ஓய்வு பெற்ற பின் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடையாது என்பதினால் அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்துவதற்கு பதில் தேசிய பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

அதன்படி அரசு ஊழியர்கள் தங்களது பணிக்கான கடைசி நாட்களில் பெறும் ஊதியத்தில் 45% வரை பென்சன் வழங்கப்படுவது குறித்து முழு ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விரைவில் இந்த திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.