Home Blog Page 122

இரண்டாக பிரியும் அதிமுக தலைமை.. ரீ என்ட்ரி கொடுக்கும் OPS!! கோர்ட் போட்ட பரபரப்பு ஆர்டர்!!

0

EPS OPS: அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இருந்தனர். உட்கட்சி மோதல் காரணமாக கட்சியை விட்டு நீக்கிய பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் எந்த ஒரு அடிப்படை பதவியியும் கிடையாது எனக் கூறியிருந்தனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்று முக்கிய 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

அதில் அனைவரின் ஒருமித்த கருத்துடன் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் அதிமுக சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தனிநபர் சூரியமூர்த்தி என்பவரும் வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே இந்த வழக்குகலை ரத்து செய்யும் படி எடப்பாடி மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகளும் நீதிமன்ற அமர்வுக்கு வந்தது.

இது ரீதியாக நீதிபதிகள் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு செய்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது செல்லுபடி ஆகாது. அதே சமயம் ஒருமித்த கருத்துடன் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தையும் அளிக்க வேண்டுமென்று  உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது வழக்கானது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பி உள்ளதால், அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எடப்பாடிக்கு சாதகமாக எந்த ஒரு தீர்ப்பும் இல்லாத நிலையில், பன்னீர் செல்வத்திற்கும் கட்சியில் உரிமை உள்ளது என கூறிவிட்டால் அதிமுக தலைமை இரண்டாக பிரியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

OPS கொடுக்க போகும் மாஸ் என்ட்ரி.. திமுக? தவெக!! சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

0

OPS TVK DMK: அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்ட பிறகு தனித்து செயல்பட்டு வரும் அவர் பாஜகவுடன் மிகவும் இணக்கமாக இருந்தார். ஆனால் இந்த இணக்கமெல்லாம் அதிமுக அவர்களுடன் கூட்டணி வைக்கும் வரை தான். தற்போது அதிமுக பாஜக கூட்டணி வைத்த பிறகு பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமரை வரவேற்கவோ பார்க்கவோ கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் என்னிடம் கேட்டிருந்தால் நான் அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன் என தற்போது நயினார் பதிலத்துள்ளார். அதற்குள் அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார், இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என கூறி மழுப்பும் பதிலை தான் தற்போது செதியாளர்களுக்கு கூறியுள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில்யிலிருந்து வெளியிடுவதற்கு முன் ஸ்டாலினையும் சந்தித்துள்ளார்.

அரசியல் களத்தில் இந்த நகர்வை சற்று உற்று கவனிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் புதிய அரசியலமைப்பை விரிவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் மறுபுறம் கூறி வருகின்றனர். ஆனால் இது ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் ஓபிஎஸ் தரப்பினர் வெளியிடவில்லை. அதேபோல இவரின் அடுத்த கட்ட நகர்வானது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். இதனால் இவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்து பதில் வெளிவரும் வரை அரசியல் களம் சற்று பரபரப்பாகவே காணப்படும்.

வேலைக்கு சென்றால் ரூ 15000 நிதியுதவி.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!

0

Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும்.

இந்த 15000  ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில்  ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் ஆறு மாதம் கழித்தும் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது முன்பே அவர்கள் ஆதருடன் இணைத்துள்ள வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்ப்படுமாம். இந்த உதவித்தொகையை 18 முதல் 35 வயதுள்ள நபர்கள் பெற முடியும்.

அதிலும் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இந்த உதவி தொகைக்கு தகுதி பெற முடியும். மேலும், நிறுவனங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில் பெருமளவு சிக்கல் இருப்பதாக சில நிறுவனங்கள் எண்ணுகின்றனர்.

இதனை சரிசெய்யும் விதமாக பலருக்கும் வேலை கிடைக்கும் நோக்கில், புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் நிதியுதவி கொடுக்கப்படும் என கூறியுள்ளனர். அந்தவகையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படுமாம். இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் கிட்டத்தட்ட 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 10000 முதல் 15000 வரை நிதியுதவி!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

0

Self-help group: மகளிர் சுய உதவிக் குழு: பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவி குழு மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அடக்கும் குறைந்த அளவில் வட்டி கடன், மேற்கொண்டு அரசானது சில சமயங்களில் அதனையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் சுய உதவி குழு ஆரம்பித்து ஆறு மாதங்களான குழுக்களும் பயன் பெறலாம்.

இதில், ட்ரோன் கேமரா பயன்படுத்தும் பயிற்சி, திறன் பயிற்சி உள்ளிட்டவைகள் கொடுக்க உள்ளனர். இதன் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழுக்களுக்கும் ட்ரோன் கேமராக்கள் வழங்கி 80 சதவீதம் மானியமும் மீதமுள்ள 20% குறைந்த அளவு வட்டியும் வழங்கப்பட உள்ளது. இதனை ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதேபோல, இந்த குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை சார்ந்த அரிசி நெல் தானியங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதின் நோக்கமாக  மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா வளாகத்தில் இது ரீதியான இயற்கை சந்தை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இவையனைத்தையும் மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

அரசு பணத்தில் விளம்பரம் தேடும் திமுக.. சிவி யால் சிக்கிய ஸ்டாலின்!! வார்னிங் கொடுத்த கோர்ட்!!

0

திமுக-விற்கு எதிரான வழக்கு:

அதிமுகவின் மாஜி அமைச்சர் சி சண்முகம், பொது மக்களின் பயனுக்காக கொண்டு வரப்படும் அரசு திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டி விளம்பரப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் மூலம் திட்டம் தொடங்கி வைத்ததையும் கண்டித்து அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது, அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டனர்.

சிவி சண்முகம் வாதம்:

அதில் சிவி சண்முகம் கூறியதாவது, அரசு விளம்பரங்களில் ஒருபோதும் அவர்களுடைய புகைப்படங்கள் கட்சி சார்ந்த நிர்வாகங்களின் புகைப்படங்கள் இருக்க கூடாது என்பது முதன்மையான விதி. அதேபோல அரசு பணத்தில் செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் தங்களது சுய படத்தை பயன்படுதவும் கூடாது. இதற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அதில், உச்சநீதிமன்றம் அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தங்களது புகைப்படங்களை பயன்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.மேற்கொண்டு உரிய விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு:

இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த திட்டங்களுக்கு கட்டாயம் தங்களது புகைப்படம் பெயரை பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி முறையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேற்கொண்டு இது ரீதியாக தங்களது பெயரை வைத்ததற்கு திமுக மற்றும் தமிழக அரசு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைவரும் பதில் கூற வேண்டும்.

அதேபோல அரசு திட்டங்களுக்கு பெயர் வைக்க கூடாது என்பதை கூறியுள்ளதால் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவத் திட்டத்திற்கு இந்த வழக்கு தடையாகவும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த செயல்பாட்டிற்கு வரும் எந்த ஒரு திட்டத்தில் அவர்களின் சுய பெயரோ புகைப்படமோ இருக்காது.

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு இடமில்லை.. வேகமாக மாறும் பாஜக அரசியல் களம்!!

0

BJP: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கட்சி சார்ந்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு, தமிழகத்தை மீட்போம், என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தனித்து தனித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக இரண்டாவது முறையாக புதிய நிர்வாகிகள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

அத்தோடு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் பார்த்து வருகிறது. இந்த முறை இரண்டாவது புதிய நிர்வாகிகள் பட்டியலில் அண்ணாமலைக்கு எதிரானவர்கள் தான் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மாதந்தோறும் பாஜக சார்பாக மாநாடு நடத்தவும் ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் தான் முதல் மாநாடு நடைபெற்றது. இவை அனைத்தும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமித்ஷா காட்டிய வழியில் செயல்படுத்த உள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக எந்த தொகுதியில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பட்டியலையும் நையினார் நாகேந்திரன் தயார் செய்ய உள்ளார். இதில் அண்ணாமலை பெயர் விடுபட்டுள்ளதாம். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு பொறுப்பு கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி உள்ளாராம்.அதற்கு பதிலாக டெல்லி மத்தியில் பெரிய பொறுப்பு தயாராகுவதாகவும் இதற்கு உறுதுணையாக பிஎல் சந்தோஷ் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அண்ணாமலை எதிரிகளுக்கு பாஜகவில் டாப் போஸ்டிங்.. சமயம் பார்த்து காய் நகர்த்தும் நயினார்!!

0

BJP: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. அண்ணாமலை தவிர்த்து வேறு யாரையும் அந்த பதவிக்கு அமர்க்கக்கூடாது என்பதில் குறிக்கோளாக அவர்கள் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியால் இவரை மாற்றும் சூழல் உண்டானது.

அதன் பிறகு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தும் அவருக்கு சரியான மரியாதையை கட்சி நிர்வாகிகள் கொடுக்கவில்லை. இது ரீதியாக அவரே பொது மேடையில் கூறியுள்ளார். இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்ட நயினார் நாகேந்திரன் தக்க சமயம் வரும் வரை காத்திருந்துள்ளார். இந்த வகையில் தமிழக பாஜகவின் கட்சி நிர்வாகிகள் இரண்டாவது பட்டியலானது நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

அதில், அண்ணாமலைக்கு எதிரான பலர்தான் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை பதவியிலிருந்த போது பாலியல் புகாரில் சிக்கி கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கே டி ராகவனுக்கு பதவி கொடுத்துள்ளனர். அதேபோல குஷ்பூவுக்கு மாநில துணைத்தலைவர் பதவி சூர்யாவுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்ணாமலையின் எதிரியாக கட்சிக்குள் பார்க்கப்பட்ட வினோத் பி செல்வம் மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வார் என்று கூறியுள்ளனர்.

இந்த நிர்வாகிகள் பணியமர்த்தம் குறித்த பட்டியலுக்கு ஜேபி நாட்டார் ஒப்புதல் அளித்துள்ளார். தற்பொழுது தமிழக பாஜக மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் அண்ணாமலைக்கு எதிரான நிர்வாகிகள் அமர்த்தப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அவருக்கு எதிராக செயல்படுத்தவே நயினார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கூட்டாளிகள்.. எடப்பாடி தலையில் விழுந்த இடி!!

0

ADMK DMK: திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் மும்மரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீமான், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டி வருகின்றனர். அதிலும் தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக எம்பி சீட் தராதது தான் இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். இதனால் சமீப காலமாக தேமுதிக ஸ்டாலினிடம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பது எடப்பாடிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்த செய்யும். ஏனென்றால், இவரும் மாற்று கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது யாரும் வரவில்லை. அதுவே ஸ்டாலின் அழைத்த போது சென்றதற்கு ஆளும் கட்சி என்ற ஒரு காரணம் இருந்தாலும், அவர் அனைத்து போராட்ட களத்திற்கும் சிறு கட்சிகளுடன் உடன் இருந்துள்ளார்.

அதுவே எடப்பாடி ஆளும் கட்சியாக இருந்தபோது சிறு கட்சியினருடன் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களின் முடிவு எந்த சூழலிலும் மாறலாம் என்ற பேச்சு இருக்கிறது. இதனால் எடப்பாடி மீதான நண்பகத்தன்மை குறைந்துவிட்டது. இதில் தேமுதிக கூட்டணி மட்டும் ரகசியமாக உறுதியாகி உள்ள நிலையில் ஓபிஎஸ் , சீமான் உள்ளிட்டோர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

செந்தி பாலாஜி வழக்கிற்கு நீதி கேட்கும் அன்புமணி.. ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!!

0

PMK DMK: பணம் மோசடி வழக்கில் கைதான செந்தில்பாலாஜி வழக்கில் அவர் மீது புகார் அளித்தவர்களை குற்றம் சாட்டபட்டவர்களாக வழக்கில் சேர்த்துள்ளதை அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ரீதியாக தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம்: மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார்.

இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

கூட்டணி கேமிலிருந்து வெளியேறும் OPS.. 2026 ஸ்டாலினுடன் கைகோர்க்க ஒப்பந்தமா!?

0

OPS BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. மத்திய மந்திரி அமித்ஷா பிரதமர் மோடி என பலரும் தமிழகம் வருகை புரிந்து இருந்த போது பார்க்க நேரம் கேட்டும் தரவில்லை. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீங்கள் வற்புறுத்தவும் கூடாது என்ற கட்டளையை கூட்டணிக்குள் வைத்துள்ளாராம்.

இதனால் பாஜக ஓபிஎஸ்-ஐ ஒரு அடி தள்ளி வைத்து பார்த்து வருகிறது. இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு, பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை விலக்கி கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது.

அந்த வகையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அணி விலகி விட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளடைவில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மக்களை சரியான வழியில் எடுத்துச் செல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்படி பார்க்கையில் இன்று பன்னீர்செல்வம் இது ரீதியான முடிவை அறிவிப்பதற்கும் முன் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது அரசியல் களத்தில் அடுத்த கட்ட தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது.