Home Blog Page 123

பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு.. மரியாதையா இல்லை நெடுந்தூர பயணமா?? அதோகதியாகும் அதிமுக!!

0

DMDK DMK: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஆனது இறுதி செய்யப்படுவது சற்று சந்தேகம்தான். தன் மகனுக்கு கட்டாயம் எம்பி பதவி கிடைத்துவிடும் என்றிருந்த கனவை அதிமுக நிறைவேற்றவில்லை. இதனால் பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவை எடுத்துள்ளதாக அரசல் புரசலான பேச்சு அடிபட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் விஜய பிரபாகரனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் தேசிய ஜனநாயகிய கூட்டணியில் தான் இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி வரப்போகும் மாநாட்டில் தான் தங்களது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை கூறுவோம் என்றும் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதனை எப்படியாவது சரிகட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக, அடுத்த ஆண்டு உங்களுக்கு எம்பி சீட் தருவதாக கூறியுள்ளது. ஆனால் இதனை தேமுதிக சிறிதும் கூட மதிக்கவில்லை. மேலும் இவர்களுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக தேமுதிகவின் ஆதரவானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது.

அந்த வகையில் உடல் நலம் தேர்ச்சி பெற்று தற்போது வீட்டிலிருக்கும் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது ரீதியாக பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நலம் விசாரிக்க தான் சென்றேன். மேலும் அவர் அண்ணன் முத்து இறந்த போதும் செல்லாததால் அது ரீதியாகவும் தனது இரங்கலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இவர்களின் இந்த சந்திப்பானது திமுக கூட்டணியில் வரும் நாட்களில் தேமுதிக அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி.. ஸ்டாலினுடன் OPS திடீர் சந்திப்பு!! பரபரப்பான திருப்பம்!!

0

OPS Stalin: தமிழகத்தில் அரசியல் களமே மாறி வரும் சூழ்நிலை இன்று முதல் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு பாஜக, பன்னீர் செல்வத்தை தனது அனுசரிப்பில் வைத்ததுடன் அதிமுகவையே உனது கையில் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றெல்லாம் பேசியுள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழி சென்றதால் பாஜக-வால் தற்போது வாய் திறக்க முடியவில்லை. மத்திய மந்திரி பிரதமர் என பலர் சென்னை வந்தபோதும் அவர்களை பார்க்க பன்னீர் செல்வம் நேரம் கேட்ட போது தர மறுத்து விட்டனர். அதுமட்டுமின்றி மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற எண்ணமும் சுக்கு நூறாகிவிட்டது. அதே சமயம் டிடிவி தினகரன் கூட கூட்டணியில் இணைப்பது குறித்து மறுத்து பேசவில்லை.

ஆனால் ஓபிஎஸ் -ஐ கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி விடாப்படியாக கூறிவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ரீதியாக இன்று ஆலோசனை செய்ய இருக்கும் பட்சத்தில் தான் தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கும் உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இது ரீதியாக மரியாதை நிமித்த சந்திப்பை தான் மேற்கொண்டு உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவருவது ரீதியாக இன்று ஆலோசனை நடக்கும் பட்சத்தில் ஏன் குறிப்பாக இன்று ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவந்துவிட்டு திமுகவில் பன்னீர்செல்வம் இணைய போவதாக கூறுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அதிமுகவின் மூத்த தலைவரான அன்வர் ராஜா இணைந்தார். தற்போது ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் செல்வது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன் அதிரடி.. அதிமுக-வின் 2ஆம் இடத்தை பிடிக்கும் விஜய்!! கலக்கத்தில் EPS!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் இம்முறை புதிய போட்டி முனைகளை சந்திக்க உள்ளது. எப்பொழுதும் அதிமுக இல்லையென்றால் திமுக என இருந்த நிலையானது மாறப்போகிறது என்று பேசி வருகின்றனர். அதிமுக திமுகவை தாண்டி பல கட்சிகள் இருந்தாலும் பொதுப்படையான கட்சி என்பதில்லை. தற்போது விஜய் தொடங்கி இருக்கும் கட்சியானது மக்களின் சேவையை நாடி தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறுகின்றனர்.

அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாரோ இல்லையோ ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பின்னுக்கு தள்ளப்பட அதிக வாய்ப்புள்ளது. இது ரீதியாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசுகையில், அதிமுகவுடன் ஏன் தவெக வை ஒப்பிடுகிறேன் என்றால் இவர்கள் இருவரும் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடுபவர்கள் தான்.

அதிலும் தற்போது அதிமுகவின் நிலையானது மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த தேர்தலில் தெற்கு பகுதியில் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு கிடையாது. அதுமட்டுமின்றி சசிகலா, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறக்கூடும். இதனையெல்லாம் தாண்டி தமிழகத்தில் பாஜக மீது பெரும் அதிருப்தி உள்ள நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதெல்லாம் அதிமுக வை பின்னுக்கு தள்ளி தவெக வை முன்னோக்கி அனுப்பும்.

மேலும் பொதுமக்களுக்கு அதிமுக திமுகவை தவிர்த்து வேறு கதி இல்லை என நினைத்ததற்கு தற்சமயம் புதிய கட்சி இருப்பதால் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணுகின்றனர். மேலும் கூட்டனியிலிருப்பவர்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் தர இருப்பதால் மாற்று கட்சி மத்தியில் தவெக விற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறுவதை விட அதிமுக வை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் 2 வது மாபெரும் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மோடியை எதிர்த்து தடாலடி நடவடிக்கை எடுத்த ஓபிஸ்.. சுக்குநூறாகும் கூட்டணி!!

0

OPS BJP: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கினாலும் அதற்கு மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. மோடியிலிருந்து மத்திய மந்திரி அமித் ஷா வரை பலரும் எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் அதிமுகவின் வாக்குகள் சிதறாது எனக் கூறினர். ஆனால் அதனை எடப்பாடி சிறிதும் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், வரும் நாட்களில் ஒருபோதும் சசிகலா ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

அதிலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவையே கைப்பற்றி தருவதாக டீல் எல்லாம் பேசினர். இதனின் உச்சகட்டம் தான் தற்போது நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் வழக்கு. ஆனால் அதன் சாதகமானது எடப்பாடி பக்கம் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரப்போகும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளதால், பன்னீர்செல்வத்தை பாஜக மத்தியில் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் மத்திய மந்திரி, மோடி என யாரும் அவரை சந்திப்பதில்லை. மேற்கொண்டு சந்திக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்குள் இடர்பாடு ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து வருகின்றனர். இதனை பொறுக்க முடியாமல், ஓபிஎஸ் உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எதற்காகவும் பாஜகவிற்கு எதிராக வாய் திறக்காத ஓபிஎஸ், முதல்முறையாக தமிழக முன்மொழிக் கொள்கையை எதிர்த்த காரணத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்காதது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை வைத்தே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியாக உள்ளது.

மேற்கொண்டு அதிமுகவிலும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் வேற ஏதும் மாற்று கட்சியில் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அவரது நம்பிக்கை வட்டாரம் பேசி வருகின்றனர்.

26 லட்சம் பேரின் மகளிர் உரிமைத்தொகை ரத்து!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

Magalir Urimai Thogai Scheme: ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் நலத்தையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மகாராஷ்டிராவிலும் மாதந்தோறும் பெண்களுக்கு 1500 வழங்கப்பட்டு வரும் வகையில் இதனை முறையற்ற நிலையில் ஆண்களும் பெற்று வருவது அம்பலமாகியுள்ளது. இதரீதியாக அம் மாநில அரசு தரவுகளை சரிபார்த்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல இந்த மாநிலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் வேறு திட்டத்தில் பயன்பெறக் கூடாது. அதேபோல குடும்பத்தில் இந்த திட்டத்தின்படி ஒருவர் மட்டுமே பயன்பெறவும் முடியும். ஆனால் தற்போது இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் முறையற்ற நிலையில் பயன்பெற்று வருகின்றனர். அதாவது வேறொரு திட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுகின்றனர்.

அவ்வாறு கிட்டத்தட்ட 26.34 லட்சம் பேர் மோசடி செய்துள்ளனர். தற்போது அம் மாநில அரசு இந்த திட்டத்திலிருந்து 26.34 பேரை நீக்கியுள்ளது. மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

திமுக வை நம்பியதற்கு நல்ல பலன்.. மோடியுடன் கூட்டணியில் இருக்கிறோமா- பளிச் பதிலளித்த விஜயபிராபகரன்!!

0

DMDK ADMK: அதிமுக தற்போது நடந்து முடிந்த எம்பி போஸ்டிங் ஒன்றை தேமுதிகவிற்கு தரும் என்று பெருமளவில் எதிர்பார்த்தனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக எங்களுடன் இது ரீதியாக ஒப்பந்தம் போட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை வேண்டுமானால் அடுத்த ஆண்டு எம்பி சீட் தருகிறோம் என கூறியது. அந்நாளிலிருந்து அதிமுக தேமுதிக கட்சிக்குள் புகைச்சல் தான்.

கூட்டணிக் குறித்தும் நாங்கள் தற்போது அறிவிக்க மாட்டோம் மாநாட்டில் தான் கூறுவோம் என தேமுதிக கூறிவிட்டது. அதேபோல அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என்பதையும் உறுதி செய்யவில்லை. மாறாக எடப்பாடி தான் அவர்கள் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார்கள் இனியும் இருப்பார்கள் எனக் கூறி வருகிறார். இது ரீதியாக விஜயபிரபாகரனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள போது ஏன் மோடியை சந்திக்க வரவில்லை என்ற கேள்விக்கு??

நாங்கள் இருக்கிறோமா?? என்று சந்தேகமாக பதில் கேள்வி கேட்டு, கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அவர் கூட எங்களை சந்திக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் தேவையான சமயத்தில் தான் அவரை சந்திப்போம். மேலும் எங்களது கூட்டணி குறித்து மாநாட்டில் தான் தெரிவிப்போம். அதேசமயம் கமல்ஹாசன் எம்பி பதவி வகித்தது குறித்து கேள்வி எழுப்பினர். கமல்ஹாசன் எம்பி ஆக பதவி ஏற்றதை வரவேற்கிறோம்.

பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த அவர் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் திமுக ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனால் மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் விஜயபிரபாகரன் திமுக அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாக அழுத்தமாக கூறியுள்ளார்.

இதற்கு காரணம் இத்தனை ஆண்டு காலம் அதிமுகவிலிருந்து தங்களுக்கு ஒரு வாய்ப்பாளிக்காதது தான். அதுமட்டுமின்றி சமீப நாட்களாக தேமுதிகவின் பேச்சானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பும் உள்ளது.

இந்த 2025 கணிப்புகள் உண்மையாகுமா? ‘கோயில் நெரிசல், அக்டோபர் ரயில் விபத்து, கல்லறை சந்தை விபத்து’

0

கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், நவம்பர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கூறினார்.

2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன, இந்தியா தொடர்ச்சியான பேரழிவு தரும் துயரங்களைச் சந்தித்துள்ளது. பெருமளவிலான உயிரிழப்புகள், ஒரு பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல், இதயத்தை உடைக்கும் விமான விபத்து மற்றும் துயரமான கோயில் கூட்ட நெரிசல் வரை, நாடு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளைக் கண்டது. இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ள நிலையில், ஒரு ஜோதிடர் இப்போது மேலும் துயரங்கள் தொடரும் என்று கணித்துள்ளார்.

சூப்பர்டாக்ஸ் என்ற பாட்காஸ்டில், புகழ்பெற்ற கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், 2025 ஆம் ஆண்டு இறுதி வரை இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். தொகுப்பாளருடனான உரையாடலின் போது, நாடு மீண்டும் ஒரு கோவிலில் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என்று அவர் கணித்தார். அவர், “நவம்பர் மே ஸ்டேம்பேடே ஜெய்சா திகை பத் ரஹா ஹை கிசி மந்திர் மே (நவம்பரில், ஏதாவது ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும்)” என்றார்.

இந்த சம்பவம் தெற்கே எங்காவது நிகழலாம் என்று தொகுப்பாளர் குறிப்பிட்டபோது, ஜோதிடர் சரியான இடத்தைக் கணிக்க முடியாது என்றாலும், அந்த சம்பவம் வட இந்தியாவில், ஒருவேளை மதுராவில் நடக்கலாம் என்று தான் சொல்ல முடியும் என்று கூறினார்.

மேலும், இந்த ஆண்டு பருவமழை குறித்து அவர் பேசினார். இந்த முறை மழைக்காலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்று மாலிக் கணித்தார். “இஸ் பார் கி பாரிஷ் சப் கோ ருலாயேகி (இந்த முறை மழை அனைவரையும் அழ வைக்கும்)” என்று அவர் கூறினார்.

“Bohot zyada வாய்ப்புகள் dikh rahe hai ki jo bhi pahadi area hai na, khaas taur pe Yahan pe bohot dikkat aayegi. இயற்கை பேரழிவுகள் bohot zyada tang karenge (மலைப் பகுதிகள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இயற்கை பேரழிவுகள், உத்திரக் நிகழ்வுகள், சமீபத்திய சிக்கல்கள்” என்று அவர் குறிப்பிட்டார். ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரிக்கு சென்று கொண்டிருந்த போது கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாலிக் பரிந்துரைத்தார்.

அக்டோபர் மாதத்தில் ரயில் விபத்து ஏற்படக்கூடும் என்று ஜோதிடர் கணித்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதம் இந்தியா மற்றொரு பெரிய அளவிலான ரயில் விபத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். தனது ஜோதிட அவதானிப்புகளின் அடிப்படையில், ஆந்திரா, கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் இது நிகழக்கூடும் என்று அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியா பல ஆண்டுகளில் மிக மோசமான சந்தை வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று கூறி தனது கணிப்புகளை முடித்தார். “2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார். நிதித் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சஞ்சீவ் மாலிக் கூறிய கணிப்புகளுக்கு இணையம் எதிர்வினையாற்றுகிறது

இந்த ரீல் பகிரப்பட்ட உடனேயே, ஜூலை 27 அன்று ஹரித்வாரின் மான்சா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு பலர் கருத்துப் பிரிவுக்குச் சென்றனர். ஒரு பயனர், “அது உண்மைதான்! இன்று மான்சா தேவி கோவிலில் முத்திரை குத்தப்பட்டது” என்றார். மற்றொரு பயனர், கடந்த கால வாழ்க்கை நிபுணரிடம் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார், “உங்கள் ஆன்மீக ஞானம் பெற்ற சுயத்திற்கு உரிய மரியாதையுடன், இந்தியாவில் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளை நீங்கள் உண்மையிலேயே முன்னறிவித்தால், தெளிவான, செயல்படக்கூடிய விவரங்களைப் பெறவும், பேரழிவைத் தடுக்கவும் உங்கள் தெய்வீக தொடர்பை ஏன் பயன்படுத்தக்கூடாது??”

இந்த ரீல் வெளியிடப்பட்டதிலிருந்து, இது 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மோடி அரசை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்! எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணம்!

0

கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் நாணயங்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியுடன் ஆரம்பம் முதலே நல்ல நட்பில் இருந்து வருபவர் ஓ பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவுபடக்கூடாது என்று பாஜக ஆரம்பம் முதலே நினைத்தது. அந்த நேரத்தில் மோடி, அமித்ஷா போன்றோர் எத்தனையோ முறை தலையிட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். இருந்தும் அதிமுக இரண்டாக பிளந்துவிட்டது. தன்னுடைய பலம் என்ன என்று நிரூபிக்க ஓபிஎஸ் இப்படி செய்தபோதிலும் அவருக்கு துணையாக யாரும் நிற்கவில்லை.

பின்னர் பலமுறை மீண்டும் அதிமுகவுடன் சேர்ந்துவிடலாம் என்று அவர் நினைத்தபோது எடப்பாடி அவரை நெருங்கவிடவில்லை. சரி மோடிஜியை சந்தித்து பேசலாம் என்று நினைத்து பிரதமர் மோடி தற்போது தமிழ்நாடு வந்தபோது மோடிஜியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடியுடன் இணக்கமாக இருப்பதால் ஓபிஎஸ்ஸை சந்தித்தால் எடப்பாடியுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்து பாஜகவினர் ஓபிஎஸ் சந்திப்பு பற்றி பிரதமரிடம் சொல்லவில்லை.

பிரதமரை எப்படியும் சந்தித்து விடலாம் என்ற கனவில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். மாணவர்களின் படிப்பு விஷயத்தில் மத்திய அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்பு விசயத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள் என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். இதனால் பாஜக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர் அதிர்ச்சி! திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

0

நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை.

இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற நிலை ஏற்படும்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். கடைசியாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவரை அணுகியுள்ளனர்.

இந்நிலயில் ஐதராபாத்தில் உள்ள நர்மதா என்னும் மருத்துவரை அணுகி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தையும் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளது. இந்த மருத்துவ சிகிச்சைக்கு 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் மருத்துவர் நர்மதா. பிறந்த குழந்தையின் DNA வை பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த DNA வில் தந்தை மற்றும் தாய் இருவரின் மரபணுக்களும் ஒத்துப்போகவில்லை.

பின்னர் காவல்துறையில் புகார் அளித்து மருத்துவர் நர்மதா மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பல் ஏழைகளை வாடகை தாய் முறைக்கும், விந்தணு தானத்திற்கும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான குற்றம் 23 படமும் இதேபோன்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளை மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதை தான் இடம்பெற்றிருக்கும். படத்தை போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று கட்சி கூட்டணிக்கு ரெடியாகும் அதிமுக.. இதை விட்டால் வேறு கதி இல்லை!! கதறும் மோடி!!

0

ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலானது தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பாஜக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றனர். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வைத்தது குறித்து அது சார்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அதிருப்திதான். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பல்வேறு கூட்டணிகள் கைக்கூடும்.

ஆனால் பாஜகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் மாற்றுக் கட்சியினர் அனைவரும் விலகவே நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி பாஜக வின் பெரும் தலைவர்கள் முதல் அனைவரும் கூட்டணி முறையில் தான் ஆட்சி செய்யப்படும் என கூறுகின்றனர். இதனை எடப்பாடி முழுவதுமாக மறுத்து, இரட்டை இலை தலைமையில் தான் ஆட்சி என்று அவர்களுக்கு எதிராகவே பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையிலேயே தற்போது வரை சமரசம் எட்டப்படவில்லை.

இவ்வாறு இருக்கும் சூழலில், எடப்பாடி பாஜக கூட்டணியை உதறிவிட்டு மாற்றுக் கட்சியினருடன் கூட்டணி உறுதி செய்யலாம் என எண்ணுகிறாராம். அதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ள வந்த மோடியையும் திருச்சி விமான நிலையத்தில் வைத்து எடப்பாடி சந்தித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதிக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக சந்திக்கிறார்களாம்.

அந்த வகையில் அவரிடம் பேசும் போது, இரட்டை இலை கட்சியின் கீழ் தான் பாஜக இருக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி இது ரீதியாக வாய் திறக்கவில்லையாம். அதே சமயம் கூட்டணியில் ஒருபோதும் பன்னீர்செல்வம் இடம்பெற மாட்டார் என எடப்பாடி கூறுவதால், அவரையும் மோடி பார்க்க மறுத்து விட்டாராம். தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் பாஜகவுடன் இணைய தயாராக இல்லை. இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று மோடி எண்ணுவதாக கூறுகின்றனர்.