Home Blog Page 121

முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி! மண்டையில் குட்டு வைத்து புத்திமதி சொன்ன நீதிமன்றம்!

0

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆளும் திமுக அரசின் குறைகளை அனுதினமும் மக்களிடத்தில் எடுத்து சென்று திமுக கட்சியின் ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதனால் அரசியல் மேடையில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன.

அண்மையில் அதிமுக கட்சியை சேர்ந்த சி.வி.சண்முகம் அவர்கள் மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனுடன் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவது தவறு என்றும், உங்களுடன் ஸ்டாலின், உங்களுக்காக ஸ்டாலின் போன்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆட்சியில் இருக்கும் கட்சி முதல்வரின் பெயரில் திட்டத்தை அறிவிக்காமல் வேறு யாருடைய பெயரை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லையென்றும், கோர்ட் நேரத்தை வீணடித்ததால் தமிழக அரசுக்கு நஷ்டஈடாக 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.சண்முகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆளும் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்க்கு கூட்டம் வர கூடாது.. திமுக தரும் தொடர் இடையூறு!! மாநாட்டை குறிவைக்கும் ஸ்டாலின்!!

0

TVK DMK: தென் மாவட்டங்களில் அதிமுகவையும் கடந்து திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியது. வரப்போகும் தேர்தலில் மீண்டும் அதனையே நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி உள்ளது. ஆனால் அதை உடைக்கும் வகையில் விஜய் பல லாபகரமான திட்டங்களை தீட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தென் மாவட்டத்தை குறிவைத்து உள்ளதாகவும், அந்த இடத்தை தேர்வு செய்து தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் திமுக இதனை முன்கூட்டியே கணித்து தனது பொதுக்குழு கூட்டத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் நடத்தி முடித்து விட்டது. ஆனால் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு நகர விடக்கூடாது என்பதற்காக அவர்கள் குறித்த தேதியில் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். ஏனென்றால் இவர் மாநாடு நடத்தும் தேதிக்கு அடுத்த நாள் விநாயகர் சதுர்த்தி என்பதால் ஏராளமான தொண்டர்கள் கூடுவது சாத்தியம்.

அதுவே தேதி மாற்றம் நடக்கும் போதும் அதற்கான வேலைகளில் பளு ஏற்படுவதோடு பெரும்பாலான தொண்டர்களால் கலந்து கொள்ள முடியாத சூழல் கூட உண்டாகலாம். இதனால் சம்பந்தமே இல்லாத 21ம் தேதிக்கு மாநாடு நடத்தும்படி அனுமதி அளித்துள்ளனர். இதன் மூலம் தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் விஜய் திமுகவின் அரசியல் வேரோடு சீர்குலைக்க நினைக்கிறார் என்பது இவரது அரசியல் நகர்வு வைத்து அறிந்து கொள்ள முடிகிறது.

திமுகவுக்கு எதிராக களமிறங்கிய விஜய்!! மதுரையில் வெடிக்கும் அரசியல் களம்!!

0

TVK DMK: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் திமுகவின் பொதுக்குழு கூட்டமானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பெருவாரியாக தென் மாவட்ட வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அந்தப் பொதுக்குழு கூட்டமானது மதுரையில் நடைபெற்றது. மேற்கொண்டு ரோடு ஷோ உள்ளிட்டவைகளையும் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. அப்போதையிலிருந்தே அவர்களுக்கு ஆளும் கட்சி சார்பில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக காவல்துறையை வைத்து அவர்களுக்குரிய அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர். இதே போல தான் பரந்தூர் விமான நிலையம் ரீதியாக விஜய் களமிறங்கிய போதும் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை, ஊருக்குள் செல்லக்கூட அனுமதி தரவில்லை.

இவ்வாறு திமுகவின் செயல்முறையானது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அரசியலுக்குள் புதிய கட்சியாக நுழைந்து பெரும்வாரியான ஆதரவுகளை திரட்டியுள்ள விஜய் தங்களுக்கு எதிராக பெரும் சாம்ராஜத்தை உருவாக்கி விடுவார் என்ற அச்சம் திமுகவுக்குள் புகுந்து விட்டது. இதனாலேயே விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி தராமல் அலைக்கழித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி விஜய்யின் அரசியல் எதிரியாக திமுக உள்ள நிலையில் அவரின் திட்டங்கள் அறிந்து பொதுக்குழு கூட்டத்தையும் முன்கூட்டியே மதுரையில் நடத்தி முடித்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் மாநாடானது தேதி மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக நாம் தமிழர் கூட்டணி.. வாட இந்தியர்கள் தான் டிசைட் பண்ணுவாங்க!! பெரிய இடியை இறக்கிய சீமான்!!

0

NTK: மதுரை உயர்மறை மாவட்ட பேரயராக அந்தோணிசாமி பொறுப்பேற்றார். இவரை நேரில் கண்டு சீமான் வாழ்த்து தெரிவித்ததோடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தற்போது அரசியல் களம் என்ன என்பது குறித்து விவரித்து திமுகவை குற்றம் சாட்டி பேசினார். அதில், தமிழகம் தற்போது யாரிடத்தில் அடமானத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்??  தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் திமுக நாடகம் போடுகிறது. அதேபோல எங்களுக்கு கூட்டணி என்பது தேவையில்லை.

எங்களுடன் இருப்பது சுதந்திர பசி, என்னை போலவே என்னுடன் இருப்பவர்களும் உறுதியானவர்கள். சீட்டுக்காக கட்சி என்றால் தனி தனி கொள்கைகள் எதற்கு?? தமிழகத்தில் வட இந்தியர்கள் அதிகளவு வாக்கை பெற்று வருகின்றனர். இதனை முக்கிய குறிக்கோள் என்னவென்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். நாளடைவில் அவர்கள் தான் தமிழக அரசியல் களத்தை முடிவு செய்யும் நிலைக்கு வந்துவிடும். வட இந்தியர்கள் எப்பொழுதும் பாஜகவிற்கு சாதகமாக தான் இருப்பார்கள்.

அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றெல்லாம் வந்துவிட்டால் எங்கிருந்தும் நமக்கு தண்ணீர் வராது, அதே நான் ஆட்சியில் இருந்தால் வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வர நுழைவு சீட்டு கேப்பேன். இந்தியா நாளுக்கு நாள் கடன்கார நாடாக மாறி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்மறாக இந்தியா வளர்ந்து வருகிறது எனக் கூறி நம்ப வைக்கிறார்கள். இது குறித்தெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெற்று நல்லாட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு திமுக வேண்டாம் என்று அதிமுகவிற்கு அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்கு செல்வது பேயை விவாகத்து செய்து பிசாசை திருமணம் செய்வது போல் தான். மேற்கொண்டு புதிய கட்சியாக தவெக போன்றவை வந்தாலும் நிலையாக இருக்காது. கமலஹாசன் கட்சி எப்படியோ அப்படித்தான் அதுவும். விஜயகாந்திற்கு இல்லாத எழுச்சியா இவர்களுக்கு உள்ளது. திமுக அதிமுக என இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, ஆனால் நான் பிரபாகரன் அண்ணன் வழியை சொல்கிறேன்.

அதேபோல அமெரிக்க அதிபர் இந்திய பொருள்களுக்கு வரி விதித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது இது ரீதியாக இந்திய அரசு கட்டாயம் விழித்துக் கொள்கிறதா என்பதை பார்க்கலாம். மற்ற கட்சிகளைப் போல எங்களால் ரோடு ஷோ நடத்த முடியாது மாறாக மக்களின் தேவை பூர்த்தி செய்ய நிறைய போராட்டங்கள் உள்ளது. அதேபோல அதிமுகவுடன் என்றும் உங்களது கூட்டணி இருக்காது தனித்தே தான் இருப்போம் எனக் கூறியுள்ளார்.

OPS உடன் கூட்டு சேரும் TVK PMK Congress.. திமுக வுக்கு பீதி தரும் புதிய கூட்டணி!!

0

OPS TVK: அதிமுக பாஜக கூட்டணியால் ஓபிஎஸ்-ஐ நெருங்கு விடாமல் செய்ததால் அவர் NDA யிலிருந்து விலகிக் கொண்டார். இவரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு செய்தியாளர் துரை கருணா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  முதலில் தமிழகம் வந்த மோடியினை சந்திப்பதற்கு நயினாருக்கு குறுஞ்செய்தி, அழைப்பு உள்ளிட்டவற்றை விடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்பே எடப்பாடியிடமிருந்து அவருக்கு ஆர்டர் சென்றுவிட்டது. அதாவது ஓபிஎஸ் தரப்பில் யார் மோடியை பார்க்க அனுமதி கேட்டாலும் வழங்க கூடாது என கூறிவிட்டனர். இதனால் பன்னீர் செல்வம் மிகவும் அதிருப்தியில் மௌனம் காத்தே இருந்தார். ஆனால் அவரது நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இனி NDA  கூட்டணியில் தொடர வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தினர் அதன் பெயரில் உடனடியாக அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.

மேற்கொண்டு இவர் பாரத ஜனதா கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த  கூட்டணியை உருவாக்க முடியாது.  அதிமுகவுடன் கை கொடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆனால் இம்முறை அது நடக்காது.மாறாக கட்சியை விட்டு வெளியேறியவர் திமுகவுடன் இணைய மாட்டேன் என்றும் கூறிவிட்டார். இதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தது தான்.

அதிலிருந்து வந்து தற்போது மீட்பு குழுவை ஆரம்பித்திருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைய மாட்டார். ஆனால் திமுக மீது அதிருப்தியில் இணைந்திருக்கும் காங்கிரஸ், அதனைத்தொடர்ந்து பாமக போன்ற கட்சிகளுடன் இவரும் ஒன்றிணைந்து தவெக வை முன்னிறுத்தி திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியாக உருமாறும். இதனால்  வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்திற்கு கூட செல்லலாம் என கூறியுள்ளார். 

OPS பின்னால் TTV க்கு வந்த RED சிக்னல்.. பாஜகவில் அரங்கேறும் தொடர் வெளியேற்றம்??

0

OPS TTV: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை  தனித்து விடு ஆரம்பித்துவிட்டனர்.  அதன் உச்சகட்டமாக தமிழகம் வருகை புரிந்திருந்த பிரதமர் மற்றும் அமித்ஷா-வை சந்திக்க கூட விடவில்லை. இதனால் வேதனை அடைந்தால் பன்னீர்செல்வம், இனி இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தார். மேற்கொண்டு கட்சியை விட்டு விலகி தனித்து செயல்பட போவதாக கூறினார்.

இவர் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்து விடுவாரா?? என்ற கேள்வி அனைத்து பக்கமும் இருந்தது. ஆனால் கட்டாயம் திமுக வில் இணைய மாட்டேன் என்று கரராக கூறிவிட்டார். மேற்கொண்டு இவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான், அந்தவகையில் வரும் நாட்களில் இது ரீதியாக ஆலோசனை செய்து பலம் வாய்ந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பதாக இவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே நயினார் நாகேந்திரன், ஒபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் மோடியை பார்க்க கட்டாயம் நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கூறினார். இவருக்கு எதிராக பன்னீர் செல்வமும் தனக்கு யாரும் நேரம் ஒதுக்கவில்லை என்று தனது தரப்பை முன் வைத்தார். தற்போது தென் மாவட்ட வாக்குகள் அனைத்தும் சிதறக்கூடும் என்பதால் பன்னீர் செல்வத்தை மீண்டும் தேச ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் வந்து இணைந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இவரே தற்போது பாஜக கூட்டணியில் தான் உள்ளாரா?? என்பது தெரியவில்லை என தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். இது ரீதியாக அவர் பேசுகையில் தற்போது வரை பாஜக அதிகாரப்பூர்வமாக எந்த இடத்திலும் அமமுக தங்களது கூட்டணியில் உள்ளதாக தெரிவிக்கவில்லை.

அதேபோல மற்றொரு பக்கம் நையினார் நாகேந்திரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் பனிப்போர் இருந்து வருகிறது. சமீபத்தில் பனி போருக்கான சாயலை பேட்டிகளில் பார்க்க முடிந்தது. அந்த வகையில் பெரும் வாரியாக பாஜகவில் கலந்து கொள்ளாத டி டிவி எப்படி கூட்டணியில் இருக்க முடியும்?? பன்னீர்செல்வத்தை போல  இவரும் நாளடைவில் கட்சியை விட்டு வெளியேர அதிக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

பாமக-வில் உச்சத்தை எட்டும் தந்தை மகன் மோதல்.. ஹாக்கான அரசியல் அந்தரங்கம்!!

0

PMK: பாமக கட்சிக்கு அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் நிலவி வரும் பட்சத்தில் ராமதாஸ் தொடர்ந்து  அன்புமணிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனிடையே கட்சியின் அதிகாரத்தன்மையானது இரண்டாக பிரிந்து செயல்பட்டும் வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ராமதாஸ் தங்கியிருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் ரகசிய ஒட்டு கேட்டுக்கும் கருவி இருந்ததாகவும், இது வெளிநாட்டிலிருந்து வரவைத்து பொருத்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.

இது ரீதியாக தனியார் துப்பறிவு நிறுவனத்திடம் ஆய்வு செய்ய சொல்லி கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர்கள் ஆய்வு செய்தது வீட்டில் உள்ள வைஃபை, சிசிடிவி உள்ளிட்ட அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் நிறுவனர் வீட்டிலேயே இப்படி இணையதள செயல்பாட்டை சட்டவிரோதமாக  ஹேக் செய்துள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சமயத்தில் இது ரீதியாக விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டது, மேற்கொண்டு இது ரீதியாக விசாரணை செய்தும் வருகின்றனர். தற்போது WiFi பயன்படுத்தி ராமதாஸ் அவர்களின் செல்போனையே ஹாக் செய்து உள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவியில் லைக்கா நிறுவனத்தின் சிம் கார்ட் இருந்ததாக புகாரில்  தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மகனே தந்தையின் அடுத்த அரசியல் நகர்வை கண்டுபிடிக்க இப்படிப்பட்ட செயல்களில் இறங்கி உள்ளாரா என்று கேள்வியை முன் வைத்து வருகின்றனர். 

இயற்கையாக வீட்டை குளிர்ச்சியாக்கும் ஹை டெக் பெயிண்ட் 

0

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.

  • இது நீர் எடுத்து வைத்து மறுபடியும் மெதுவாக வெளியே விடுகிறது.

  • வெளியேறும் நேரத்தில் நீர் ஆவியாகும் போது, வெப்பத்தையும் எடுத்துச் செல்கிறது.

  • இதனால் வீடு இயற்கையாக குளிராகிறது.

மூன்று வழிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பெயிண்ட்:

  1. கதிர்வீச்சு குளிர்ச்சி (Radiative Cooling) – வெப்பத்தை வெளி அலைகளாக அனுப்பும்

  2. ஆவிப்பாடு குளிர்ச்சி (Evaporative Cooling) – வியர்வை போல நீரை ஆவியாக மாற்றி குளிர்விக்கும்

  3. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் (Solar Reflectivity) – வெப்பத்தை உள்ளே வரவிடாமல் தடுக்கும்

இது 88%-92% வரை சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது (ஈரமாக இருந்தபோதும்!)
மேலும் 95% வரை உள்ளே புகும் வெப்பத்தை வெளியே அனுப்புகிறது.

வீட்டில் சோதனை

இரண்டு வருட சோதனைக்காலத்தில், சிங்கப்பூரில் உள்ள மூன்று சிறிய வீடுகளில் இந்த பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது:

  • ஒன்று சாதாரண வெள்ளை பெயிண்ட்

  • ஒன்று குளிர் பெயிண்ட்

  • மூன்றாவது, இந்த புதிய “வியர்வை பெயிண்ட்”

முதல் இரண்டு வீடுகளும் வெள்ளை நிறம் மங்கிப் போனது. ஆனால் இந்த புதிய பெயிண்ட் மட்டும் “இன்னும் பளிச்சென வெள்ளையாகவே இருந்தது” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்சார சேமிப்பு & சூழலியலுக்கு நன்மை

  • இந்த பெயிண்ட் கூலிங் தேவையை 30-40% குறைத்தது.

  • வீடுகளுக்கு ஏசி தேவையை குறைத்து, மின்சாரத்தை சேமிக்க முடிகிறது.

  • 60% மின் தேவைகள் வீடுகளில் கூலிங் தான் என்பதை நினைவில் கொள்வோம்!

நகரங்களில் உள்ள வெப்ப தீவுக் காட்சியை (Urban Heat Island Effect) இந்த பெயிண்ட் தவிர்க்க உதவும். ஏசிகள் வெளியே வெளியேறும் வெப்பத்தை சேர்த்துக் கொண்டே இருக்க, இந்த பெயிண்ட் வெப்பத்தை ‘இன்ஃப்ராரெடு’ அலைகளாக மேலே அனுப்பி விடுகிறது.

எதிர்கால வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை

வெப்பம் அதிகரிக்கும் இந்நாள்களில், இயற்கையை பாதிக்காமல், மின்சாரம் இல்லாமல் வெப்பத்தை சமாளிக்க இந்த கண்டுபிடிப்பு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம்.

“சிங்கப்பூர் மட்டும் இல்லை; மத்திய கிழக்கு நாடுகளும் கடும் வெப்ப தீவுக் காட்சியை சந்திக்கின்றன” என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.அந்த வகையில் இது போன்ற சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக பாஜக-வை வேரோடு குலைக்க ஓபிஎஸ் போடும் பலே திட்டம்!! தயாராகும் மாஸ் கூட்டணி!!

0

OPS: ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நான்கு முறை முதல்வரான பன்னீர் செல்வத்திற்கு அவர் மறைவிற்குப் பிறகு கட்சியில் கூட இடம் இல்லாமல் போனது.  ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி முன்னின்று பன்னீர்செல்வத்தை ஒதுக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு இரட்டை இலை இரண்டாக பிரிந்த போது சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் என அனைவரும் ஒரு அணி சேர்ந்தனர். பின்பு தனித்தனியே கட்சி ஆரம்பிக்கவே பாஜக  வசம் இருந்தனர்.

இதில் தற்போது வரை டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில் பன்னீர்செல்வம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இருவரும் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டனர். அச்சமயம்  பாஜக பன்னீர்செல்வத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வந்தது. தற்போது சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் திமுகவை எதிர்க்க பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பாஜக கூட்டணி இணைந்துள்ளனர்.

இதனால் பன்னீர்செல்வம் வேண்டாத ஆளாக மாறிவிட்டார், அதனால் மோடி அமித்ஷா என பலரும் தமிழகம் வருகை புரிந்த போது தங்களை பார்க்க கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி தரவில்லை. இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியி வேண்டாம், அதிலிருந்து வெளிவர வேண்டும் எனக் கூறி வந்தனர். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் வெளியே வந்தவுடன் ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார்.

இவரது நோக்கமே அதிமுக மற்றும் தனக்கு துரோகம் செய்த பாஜகவை முழுமையாக எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று கேள்விக்கு?? இவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த அதிமுகவும் இவரை ஒதுக்கி விட்டது நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஜகவும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பலம் வாய்ந்த கூட்டணியுடன் தான் இணைவார் எனக் கூறியுள்ளனர்.

அதே சமயம் திமுகவுடன் தான் இணைவதாக வதந்தி பரவுகிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம்யில் ஏனென்றால் தென் மாவட்டங்களில் பன்னீர் செல்வதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலை அதனை தக்க வைத்துக் கொள்ள எந்த கட்சியும் நினைக்கும் மேற்கொண்டு அதிமுகவிற்கு இது பெரும் அடிதான் என கூறுகின்றனர்.      

மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

0

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது.

செலவு எவ்வளவு?

இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் சேதமாகாமல் பாதுகாக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

உறைபசை என்பது என்ன?

உறைபசை என்பது ஒரு advanced விஞ்ஞான பணி. மனித உடலை சுமாராக -196°C வரை குளிர்வித்து அதன் உயிரணுக்களை (cells) முடிந்த அளவுக்கு பாதுகாப்பது. இதில் முக்கியமானது, இறந்த உடனே உடல் உறைய வைக்கப்பட வேண்டும் என்பதே.

அதற்காக, Tomorrow Bio நிறுவனம் 24 மணி நேர அவசர குழுவை இயக்கி வருகிறது.

யார் யார் இதில் சேர்ந்திருக்கிறார்கள்?

இதுவரை இந்த சேவையில் பலர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்

  • 650க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

  • 3 அல்லது 4 நபர்களும், 5 செல்லப்பிராணிகளும் உறைபசை செய்யப்பட்டுள்ளனர்.

  • 2025ம் ஆண்டில், அமெரிக்கா முழுவதும் சேவையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உறைபசை மூலம் உயிர் திரும்புமா?

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒரு முக்கிய விவரத்தை பகிர்ந்துள்ளது.
இன்றுவரை உறைபசை செய்யப்பட்ட ஒருவரும் உயிர் திரும்பியதாக எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை.

மேலும், “தலைமூளை போன்ற சிக்கலான அமைப்புகள் மீண்டும் இயங்கும் வகையில் உயிர்ப்பிக்க முடியும்” என்பது மக்களின் நம்பிக்கையாக மட்டுமே உள்ளது என்று King’s College London பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.

நம்பிக்கையா? நிஜமா?

Tomorrow Bio நிறுவனர் மற்றும் கேன்சர் ஆராய்ச்சியாளரான எமில் கென்ஸியோர்ரா கூறுவதாவது:

“நீலகடல் வெப்பத்தில்தான் உறைபசை செய்ய வேண்டும். இல்லையெனில், உடல் முழுவதும் ‘ஐஸ் கிரிஸ்டல்கள்’ உருவாகி திசுக்களை சேதப்படுத்தும். நாங்கள் துல்லியமான முறையில் குளிர்வித்து பாதுகாப்பதையே செய்கிறோம்.”

இது வெறும் விஞ்ஞான கனவா? அல்லது உண்மையிலேயே ஒருநாள் மனிதனை மரணத்திலிருந்து மீட்டெடுக்கக்கூடிய சாத்தியமா?

இன்றைக்கு இந்த சேவை விலை உயர்ந்த கனவாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானம் வளரும் போதெல்லாம், இந்தக் கனவுக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது!