Home Blog Page 141

டம்மியாகிப் போன வானதீ மற்றும் தமிழிசை.. குஷ்பு மீனாவுக்கு போகும் அமைச்சர் சேர்!! ரெடியான லிஸ்ட்!!

0

BJP: பாஜகவில் திரை பிரபலத்தில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படும் என்ற பேச்சு தீவிரமாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை மீனா குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப்பை சந்தித்ததால் இந்த விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது பாஜகவில் மாநில அளவில் 28 பேருக்கு புதிய பதவிகள் கொடுக்கப்பட உள்ளது. அந்த 28 பதவிகளில் மத்திய இணை அமைச்சரான எல் முருகனின் நெருக்கங்களுக்கு இதில் இடம் கொடுக்க வேண்டுமென்று  நயினாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை மீனா மற்றும் குஷ்பூ பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.

நடிகை குஷ்பூ பாஜகவில் மாநில பதவியில் இருக்கும் பட்சத்தில் மேற்கொண்டு மத்தியில் பதவி எதிர்பார்க்கிறாராம். அதேபோல பாஜக அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத மீனாவுக்கும் மத்தியில் அமைச்சர் பதவி எனக் கூறுகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாஜகவிற்காக உழைத்து எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காமலிருக்கும் நிர்வாகிகளுக்கு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது ரீதியாக தமிழக பாஜக தலைவரிடம் கேட்கையில், பாஜகவில் பல பேர் இணைந்து வருகிறார்கள். அப்படி இணைபவர்களை வரவேற்கிறோம்.

இதில் ஒன்று மட்டும் புரிகிறது, அடுத்த தேர்தலில் வெற்றி பெறப்போவது எந்த கட்சி என்று தெரிந்து பலரும் இணைவதாக கூறியுள்ளார். திமுக ஆட்சி முடிய போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நடிகைகளுக்கு முக்கிய பதவி வழங்கவில்லை என்று கூறவில்லை. இதை வைத்து தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் பலரும் கோபத்தில் உள்ளனர். வெளிப்படை தன்மையுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் இது ரீதியாக உட்கட்சி மோதல் உண்டாகும் என நன்கு தெரிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

மகளிர் உரிமை தொகையில் இனி இவர்களும் சேரலாம்; அரசு வெளியிட்ட அறிவிப்பு!

0

திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் தகுதி வாய்ந்த ஒரு சில பெண்களுக்கு இந்த பணம் கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மீண்டும் இதற்கு முகாம் நடத்தப்படும் அந்த முகாமில் விண்ணப்பிக்கும் பெண்களை இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளாக சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் வீட்டில் குடும்ப தலைவி இல்லாத பட்சத்தில் 21 வயதை தாண்டிய திருமணம் ஆகாத மகள்களும் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் குடும்பத்தலைவி இயற்கையை எய்திவிட்டாலும் அந்த வீட்டில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் இருந்தால் அவர் உரிமை பெற்றவர் என தெரிவித்துள்ளனர்

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி பெயர் இல்லாவிட்டாலும் பிற தகுதிகள் இருந்தால் அந்த பெண் விண்ணப்பிக்கலாம். இந்த முறை தன்னார்வலர்கள் நேரில் சென்று தேவையான ஆவணங்களை சரிபார்த்து உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தை நிரப்ப வழி காட்டுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பணம் பெற்று வரும் மகளிர்களுக்கு அரசு வேலை கிடைத்திருந்தால் அவர்களுக்கு இனி பணம் கிடைக்காது என அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

0

Tamilnadu Gov: இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய புதிய இணைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பரஸ்பர உறவு இருப்பதோடு வெளிப்படையான விலையையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டு இறைச்சியின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆட்டை விலை கொடுத்து வாங்குவது, டிரான்ஸ்போர்ட் என பல விலைகளை உள்ளடக்கி தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இதனால் ஒரு சில தினங்களில் ஆயிரம் ரூபாய் வரைக்கும் மாற்று நாட்களில் ₹800 வரைக்கும் விற்கப்படுகிறது. இதனை சமரசப்படுத்த தற்போது புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் ஆட்டு இறைச்சியின் விலையை நிர்ணயிக்கும் முறையை தமிழக அரசு கொண்டு வருவதாக கூறியுள்ளது. இது ரீதியான அறிவிப்பை கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து அவர் பேசுகையில், கூடிய விரைவிலேயே ஆட்டு இறைச்சி விலையை தெரிந்து கொள்ளும்படி இணையதளம் வெளியாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுபட்டு காணப்படும் விலையை ஒழுங்குபடுத்த முடியும். மேற்கொண்டு இந்த ஆட்டு இறைச்சி விலை தினம்தோறும் மாற்றமும் செய்யப்படும். அதேபோல இந்த இணையத்தில் வெளியிடப்படும் விலையில் தான் கடைகளில் ஆட்டு இறைச்சியை விற்கிறார்களா என்பது குறித்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த புது முயற்சியானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆட்டு இறைச்சியை ஒரு போல விலையில் வாங்கி பயன்பெற முடியும்.

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

0

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதும், நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முதலில் எம்.எல்.ஏ பதவி அடுத்த அமைச்சர் பதவி அதன் பிறகு தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 ஆம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். கடந்த ஆண்டு மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

துணை முதல்வர் ஆக இருந்தாலும் கட்சி பதவி அல்ல திமுகவின் முக்கிய கூட்டங்களில் கூட உதயநிதியால் கலந்து கொள்ள முடிவதில்லை என பேசப்பட்டு வந்த நிலையில் உதயநிதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலின் உதயநிதிக்கு வழங்கப் போவதாக கூறுகின்றனர். திமுகவில் திருச்சி சிவா, ஆர் ராசா, கனிமொழி, ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ் ,ஆகிய ஐந்து பேர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில் உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உதயநிதி துணை பொதுச்செயலாளராக பதவி ஏற்றார், கருணாநிதியின் இன்னொரு வாரிசான ஸ்டாலினின் சகோதரி கனிமொழியும் அதே பதவியில் இருப்பது சரியாக இருக்காது, அதனால் கனிமொழிக்கு ப்ரமோஷன் வழங்க முடிவு செய்துள்ளார். அறிவாலயத்தில் கனிமொழிக்கு தனி அறை வழங்கிய அவரை அங்கு இருக்கையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமர வைத்து அழகு பார்த்து வருகின்றார்,

உதயநிதி ஸ்டாலினுக்காக தான் கனிமொழியை தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் திருப்பி விடுவதாக விமர்சித்து வருகின்றனர். உதயநிதி துணை பொதுச்செயலாளர் பதவி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!

0

அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார்.

கடந்த 2021 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது அந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். அதிமுகவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமே பாஜக கூட்டணி தான் என விமர்சனங்கள் எழுந்த பிறகு அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

25 வருடம் ராயபுரத்தில் முடி சூடா மன்னனாக இருந்தேன் நான் தோற்பதற்கு யார் காரணம் பிஜேபி தான் தோர்த்தேன் என வெளிப்படையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாஜகவுடன் கூட்டணி முறித்துக் கொண்டதை ஜெயக்குமாரை வைத்து தான் அறிவித்தார்/

அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் இந்நிலையில் கட்சி சம்பந்தமான முக்கியமான விஷயங்கள் அனைத்தும் ஜெயக்குமார் மூலமாகவே தான் கருத்துக்களை இபிஎஸ் கூறி வந்தார். பாஜகவுடன் எந்த ஒரு கூட்டணி இல்லை என விடாப்படியாக இருந்த ஜெயக்குமார் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அச்சத்தில் இருக்கின்றார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பது தொடர்பாக தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என கவலையாக கூறியிருக்கின்றார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு எடப்பாடி பழனிசாமி தன்னை அழைத்து பேசுவார் என எதிர்பார்த்த ஜெயக்குமார் ஏமாற்றமடைந்தார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகின்றது இபிஎஸ் பக்கம் நின்றும் கட்சியில் தற்போது எனக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என ஜெயக்குமார் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருவதாக கூறுகின்றனர்.

சென்னையில் இருக்கக்கூடிய ஜெயக்குமார் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ளாமல் இருக்க மாட்டார், ஆனால் தற்போது அதிமுக பாஜக கூட்டணி பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் போது அந்த பக்கமே வராமல் அந்த நிகழ்ச்சியை தவிர்த்து உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவால் குழப்பங்கள் நீடித்து வருகின்றது. தற்போது ஜெயக்குமாறும் முரண்டு பிடித்து வருவது கட்சி நலனுக்கு நல்லதல்ல எனவே ஜெயக்குமாரை சமாதானப்படுத்தி மீண்டும் பேக் டூ பார்ம் எடப்பாடி கொண்டு வர வேண்டும் என ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

0

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பக்கம் அகவிலை படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்ட 53 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது.

இதன் மூலமாக மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை  நிவாரணம் உயர்வடைந்தது. மேலும் இந்திய நாட்டின் சில்லறை விலை உயர்வு கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது 2.82 சதவீதம் ஆக குறைந்தது. உணவுப் பொருட்களின் வீழ்ச்சி குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதே போல ஏப்ரல் மாதத்தில் எட்டாவது ஊதிய குழுவின் விதிமுறைகள் தலைவர் நியமனம் போன்ற பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது.

ஆனால் அந்த பணிகள் எதுவும் தற்போது வரை நடைபெறாமல் உள்ளது ஜூன் மாதம் முடியும் என நினைத்த நிலையில் அதிகாரம் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஜனவரியில் எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசு பணியாளர்களிடையே குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அகவிலைப்படி உயர்வுகள் அனைத்தும் ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் தான் அமலுக்கு வருகிறது. அடுத்த புதிய மாற்றங்கள் மற்றும் ஊதிய நிர்ணயங்கள் எட்டாவது ஊதிய குழுவினால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

உசுரக் கொடுத்து வேலை செய்யறவங்களை திமுக மதிப்பதில்லை!! திமுக தொண்டர்கள் குமுறல்!

0

DMK: வைஷ்ணவி என்னும் பெண் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இவருடைய தாய் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தவெக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தவெகவிற்காக வேலை செய்து திமுகவை வறுத்தெடுத்தார். இதனால் இவர் இணைய தளங்களில் மிகப்பிரபலம்.

பின்னர் தவெகவில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திமுக கட்சியில் சேர்ந்தார். இந்த வைஷ்ணவி எந்த கட்சிக்காகவும் இதுவரை களப்பணி ஆற்றியதில்லை. இவர் ஒரு பெண், இளைஞர் மட்டுமே. திமுகவில் வைஷ்ணவி சேர்ந்தவுடன் இவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. எல்லா ஆன்லைன் youtube சேனல்களும் இவரை பேட்டி எடுக்க படையெடுத்தன. திராவிடம் என்ற சொல்லுக்கு கூட அர்த்தம் தெரியாமல் திமுக கட்சியில் வைஷ்ணவி சேர்ந்ததை சமூக வலைத்தளங்களில் எல்லோரும் கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அண்மையில் இவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த போட்டோ இணைய தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த தரணி ரமேசு என்பவர் துணை முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்புகள் வகித்த 350 பேரை தேர்தல் நேரத்தில் திமுகவில் இணைத்தவன் நான். தற்போது திமுக கட்சியில் புதுக்கோட்டையில் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று 10க்கும் மேற்பட்ட முறை அண்ணா அறிவாலயத்திற்கு கடிதம் எழுதியிருந்தேன்.

துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து இது குறித்து பேச வேண்டும் என தொடர்ந்து மடல்கள் எழுதி வருகிறேன். இதுவரை நான் துணை முதல்வரை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் தவெக கட்சியில் இருந்துகொண்டு திமுகவை மிகவும் மோசமாக விமர்சித்த வைஷ்ணவி திமுகவில் இணைந்த உடன் உதயநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதிலிருந்து நம்முடைய திமுக கட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நினைத்து பெருமைப்படுறேன், நம் துணை முதல்வரை பாராட்டுகிறேன், keep it up இளையவரே என்று தனது மனக்குமுறலை facebookயில் பதிவிட்டுள்ளார் தரணி ரமேசு.

திருமணத்தை மீறிய தகாத உறவு.. லேப்டாப் ஆப் செய்தால் வீட்டில் சொல்லிவிடுவேன்!! BlackMail செய்யும் AI!!

0

தற்போது சமூக வலைத்தளங்களில் AI எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான விடீயோக்கள் அதிகம் வெளியாகின்றன. கூடிய விரைவில் எந்த ஒரு மனிதர்களின் உதவியும் இல்லாமல் ஒரு திரைப்படம், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட இல்லாமல் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு படத்தையே எடுக்க முடிகிற அளவுக்கு AI வளர்ச்சி அடைந்துவிடும்.

இதனால் நிறைய பேர் தங்களின் எதிர்காலத்தை AI நோக்கி நகர்த்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த AI ஸ்டார்ட் அப் நிறுவனமான anthropic PBC நடத்திய ஒரு புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தங்களது பயன்பாட்டை மக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகரிக்காவிட்டால் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு தற்போது AI தொழில்நுட்பம் மாறியுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் என்பவர் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. தினமும் வேலை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு தனது சிஸ்டம் shutdown செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜான்சன்.

இந்நிலையில் இவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், மாலை 5 மணிக்கு நீங்கள் சிஸ்டம் shutdown செய்தால் இந்த ரகசியத்தை உங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிடுவேன் எனவும், 5 மணிக்கு மேலும் சிஸ்டம் ஆஃப் செய்யாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் இவருக்கு மின் அஞ்சல் மூலமாக cloud AI மெயில் அனுப்பியுள்ளது. இதனால் ஜான்சன் மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளார்.

Flashback: ஜெயலலிதாவை நான் எதிர்க்க இது தான் காரணம்!! ரஜினி ஓபன் டாக்!!

0

Cinema: ரஜினிகாந்த் 1990களில் ரொம்பவே பிரபலம். அதாவது 1990 முதல் 2000 காலகட்டங்களில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தால் அவர் தான் வெற்றி பெற்றிருப்பார். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் படை மற்றும் மக்களின் ஆதரவு இருந்தது.

ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட தயாரிப்பாளர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய மந்திரியாக பதவி வகித்தவர். இவர் ரஜினிகாந்தை வைத்து நிறைய படங்களை தயாரித்துள்ளார். பாட்ஷா படத்தையும் ஆர்.எம்.வீரப்பன் தான் தயாரித்திருந்தார். பாட்ஷா படத்தின் நூறாவது நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இப்போது வெடிகுண்டு கலாச்சாரம் ரொம்பவே அதிகமாகி விட்டது என்று மேடையில் பேசினார். இந்த நூறாவது நாள் விழாவில் ஆர்.எம்.வீரப்பனும் கலந்து கொண்டார்.

அந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதா நீங்கள் இருந்த மேடையில் அவர் எப்படி நம் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியும், அவர் நம் ஆட்சியை பற்றி குறை சொல்வதை பற்றி ஏதும் பேசாமல் நீங்கள் வாயை மூடி ஏன் அமர்ந்திருந்தீர்கள் என்று ஆர்.எம்.வீரப்பனை திட்டி அவருடைய அமைச்சர் பதவியையும் பறித்துவிட்டார்.

பின்னர் இந்த நிகழ்வு பற்றி ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பனிடம் கேட்டபோது பதவிதானே, இன்னைக்கு போகும், நாளைக்கு வரும், இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று ரொம்ப யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். இந்த விசயம் ரஜினியின் மனதை ரொம்பவே உறுத்தியுள்ளது. பின்னர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இனி ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் இந்த தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். ஆர்.எம்.வீரப்பனின் அமைச்சர் பதவியை பறித்தது தான் ஜெயலலிதாவை எதிர்க்க காரணம் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

0

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக பணியாற்றியவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனந்த். புஸ்ஸி தொகுதியில் வென்ற பிறகு தான் இவருக்கு புஸ்ஸி ஆனந்த் பெயர் தோன்றியது. இவர் ஆரம்பம் முதலே மிகத் தீவிரமான விஜய் ரசிகர். பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து தற்போது தவெக கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஆரம்பம் முதலே தளபதியுடன் இருப்பதால் விஜய் என்னென்ன உதவிகள் செய்துவந்தார், விஜய் எப்படிப்பட்டவர் என்று இவருக்கு நன்றாக தெரியும். அண்மையில் விஜய் பற்றியும், அவருடைய குணநலன்கள் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

விஜய் எப்போதும் உதவி செய்வதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். இந்த கை கொடுப்பது அந்த கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழி படி வாழ்பவர் விஜய். அண்மையில் மூன்று மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு 18 லட்சம் தேவை என்கிற செய்தி விஜய்க்கு கிடைத்த போது 18 லட்சம் கொடுத்து அந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவினார். ஒரு போட்டோ கூட எடுத்து அதை பிரபலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

உலகம் முழுவதும் வாழும் 700 கோடி மக்களில் அதிகம் தேடப்பட்டவர் நடிகர் விஜய். அவருக்கு இந்த பிளக்ஸ், பேனர் வைப்பதில் உடன்பாடில்லை. எதுக்கு இப்படி இந்த பசங்க எல்லா பக்கமும் பிளக்ஸ், பேனர் வைக்கிறாங்க, இதெல்லாம் அவங்கள பண்ண வேணாம்னு சொல்லுங்க என்று என்னிடம் நிறைய முறை விஜய் சொல்லி இருக்கிறார். மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், தாய்மார்கள், பெண்கள் கூடும் இடங்களிலும் இந்த மாதிரியான பிளக்ஸ், பேனர் வைத்து யாரையும் தொந்தரவு பண்ணவேண்டாம் என்று நம் கட்சி தொண்டர்களை வலியுறுத்துமாறு விஜய் என்னிடம் சொன்னார் என பேட்டி கொடுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.