Home Blog Page 140

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

0

அரசு மருத்துவமனையில் தற்போது அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் பெரும்பாலான பெண்கள் அங்கேயே சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரிஜிஸ்டர் ஜெனரல் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பின்பு மருத்துவமனையில் இருந்து அவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறுவதற்கு முன்பு குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறப்பதினால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக இருப்பது பிறப்புச் சான்றிதழ் தான்.

அதனால் இந்த சட்டம் கடந்த 2023 முதல் அமலில் உள்ளது. ஆர். ஜி.ஐ அலுவலகம் வெளியிட்டு அறிவிப்பில் குழந்தை பிறப்பு பதிவு செய்யப்பட்ட உடன் 7 நாட்களுக்குப் பிறகு சான்றிதழ் தாய்மார்களுக்கு வழங்க வேண்டும்

இந்த சான்றிதழ் எலக்ட்ரானிக் அல்லது பிற வடிவங்களில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏதேனும் ஒரு வகையால் வழங்கப்பட்டு இருக்க வேண்டும் .இந்தியாவில் தற்போது பிறப்புச் சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்து வருவதினால் அரசு மருத்துவமனைகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு உடனடியாக பிறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் பிறப்பதினால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசு மற்றும் தனியார் சேவைகளை எளிதாக பெற முடியும். இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விசிக கூட்டணி; காரசாரமான பதிலை அளித்த திருமாவளவன்!

0

விசிக தலைவர் திருமாவளவன் அரியலூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலமாக திருச்சி வந்தடைந்தார். விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

அதில் அரசியல் சூழல் குறித்து செய்தி அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்தார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது போன்ற யூகமான கேள்வி தற்போது கேட்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக, பாமக இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என ஒரு நிலையான நிலைப்பாடு, எடுத்திருக்கின்றோம் குறைந்த தொகுதி கொடுத்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம் என கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள் அதனால் அவர்களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி வைத்திருக்கிறோம்

தொகுதி எண்ணிக்கை குறித்து எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது, இனியும் வராது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தெரிய வரும்.

இந்த முறை பேச்சுவார்த்தையின் போது நல்ல பலன் இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். திமுக கூட்டணியை மட்டுமே குறிவைத்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது தேவையா என பதிலளித்துள்ளார், திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் புல்லட்டில் லாரன்ஸ் கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக, உள்ளிட்ட கட்சிகளிடம் கூட்டணி குறித்து அதிகளவு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விசிக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு காரசாரமான பதிலை தொல் திருமாவளவன் வழங்கியுள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் அறையை பகிர்ந்த ஷிகர் தவான் – காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்த கதை!

0

இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் ஷிகர் தவான், கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியா A  அணி ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்தில் நடந்த ஒரு காதல் சம்பவத்தை தனது சுயசரிதையில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த பயணத்தின்போது, தவான் ஒரு அழகிய பெண்ணிடம் காதலில் விழுந்தார். பின்னர், அவர் இருந்த ஹோட்டல் அறையில் ரோஹித் சர்மாவுடன் தங்கியிருந்த போது, அந்த காதலியை ரகசியமாக அறைக்குள் அழைத்து வந்ததாக அவர் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான நபராக பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பவராகவும், மைதானத்தில் இருந்தாலும் வெளியிலும் எப்போதும் கவர்ச்சிகரமான தன்மையை பேணுபவராகவும் இருக்கிறார். இந்நிலையில் 2006-ஆம் ஆண்டு நடந்த தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை அவர் சமீபத்தில் தன்னுடைய சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா A சுற்றுப்பயணத்தை நினைவுகூரும் அவர், அந்தப் பயணத்தின் போது ஒரு பெண்ணுடன் காதலாகி, பின்னர் ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்த ஹோட்டல் அறைக்குள் அந்த காதலியை ரகசியமாக அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்த ரோஹித்தின் ரியாக்சனையும் தவான் பகிர்ந்துள்ளார். அவர்களின் காதல் பற்றிய தகவலானது அணியில் வைரலாக  பரவியது என்றும் அவர் தெரிவித்தார்.

“அவள் மிகவும் அழகாக இருந்தாள். திடீரென எனக்கு மீண்டும் காதலாகிவிட்டது! ‘அவள்தான் என் வாழ்க்கைத் துணை, நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன்’ என்ற எண்ணமே என் உள்ளத்தில் இருந்தது,” என அவர் தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“ஒரு பயிற்சி ஆட்டத்தில் நான் அரைசதம் அடித்து தொடங்கினேன், பயணம் நன்றாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும், எலெனை (அவளது உண்மையான பெயர் அல்ல) சந்திக்கப் போவேன். பின்னர், நான் ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்த ஹோட்டல் அறைக்குள் அவளை ரகசியமாக அழைத்துச் செல்லத் தொடங்கினேன். சில நேரங்களில் ரோஹித் ஹிந்தியில் கமெண்ட் பண்றார்: ‘தூங்க விடறயா?’”

“ஒரு நாள், நான் எலெனுடன் இரவு உணவுக்கு செல்லும் போது, அவளின் வருகை அணி முழுவதும் தீபவானைப் போல பரவியது. ஒரு மூத்த தேசிய தேர்வாளர், நாங்கள் லாபியில் கைகளை பிடித்துக் கொண்டு நடப்பதை பார்த்தார்.”

“அவளது கையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணமே எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று நம்பினேன். அந்த ஆஸ்திரேலியா பயணத்தில் நான் நன்றாக ஆடியிருந்தால், இந்தியா மூத்த அணிக்குள் சேர வாய்ப்பு இருந்தது. ஆனால் என் ஆட்டத்தின் தரம் குறைந்துகொண்டே வந்தது.”


🏏 ஷிகர் தவானின் கிரிக்கெட் சாதனைகள்:

  • ODI: 167 போட்டிகள் – 6793 ரன்கள் – சராசரி: 44.11 – 17 சதங்கள், 39 அரைசதங்கள்

  • Test: 34 போட்டிகள் – 2315 ரன்கள் – சராசரி: 40.61 – 7 சதங்கள், 5 அரைசதங்கள்

  • T20I: 68 போட்டிகள்

ஏர் இந்தியா விமான விபத்து: ஆய்வு செய்ய ஐ.நா. வானூர்தி நிபுணருக்கு அனுமதி மறுப்பு – இந்தியா தீர்மானம்

0

இந்தியாவிலுள்ள அஹமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி ஏற்பட்ட பயங்கர ஏர் இந்தியா விமான விபத்துக்கான விசாரணையில், ஐக்கிய நாடுகள் வானூர்தி அமைப்பின் (ICAO) நிபுணர் ஒருவரை இணைக்க முடியாது என இந்தியா மறுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

260 பேரின் உயிரிழப்புக்கு காரணமான இந்த Boeing 787-8 Dreamliner விமான விபத்தில், பிளாக் பாக்ஸ் தரவுகள் பற்றிய விசாரணை மந்தமாக இருப்பதை விமானப் பாதுகாப்பு நிபுணர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்தனர். இதையடுத்து ICAO அமைப்பு, இந்தியாவுக்கு தனது ஒரு நிபுணரை உதவிக்கு அனுப்ப முன்வந்தது. ஆனால் இந்திய அதிகாரிகள் அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஐ.நா. வானூர்தி அமைப்பு விண்ணப்பம் செய்தது:

  • ICAO அமைப்பு, இந்தியாவில் இருக்கும் தனது நிபுணருக்கு “விசாரணை பார்வையாளர்” (Observer) அந்தஸ்து வழங்குமாறு கேட்டிருந்தது.

  • ஆனால், இந்திய அதிகாரிகள் அதனை உறுதியாக மறுத்துள்ளனர்.

  • இதுதொடர்பான தகவலை Times Now தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது.

முன்னதாக, 2014 இல் மலேசிய விமானம் மற்றும் 2020 இல் உக்ரேனிய ஜெட்லைனர் வீழ்த்தப்பட்டது போன்ற சில ஆய்வுகளுக்கு உதவ சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு புலனாய்வாளர்களை அனுப்பியுள்ளது, ஆனால் அந்த நேரத்தில் ஏஜென்சியிடம் உதவி கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

AAIB (Aircraft Accident Investigation Bureau) எனப்படும் இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு, உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இந்த மிகப்பெரிய விபத்துக்கான விசாரணையைத் தலைமை வகிக்கிறது. அவர்கள் இதுகுறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. மேலும் ICAO அமைப்பும் இதுகுறித்து உடனடி பதிலை வழங்கவில்லை என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பிளாக் பாக்ஸ் தரவுகள்:

  • விமான விபத்திற்கு 2 வாரங்களுக்குப் பிறகு பிளாக் பாக்ஸ் (Flight Recorder) தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இந்திய சிவில் விமான பயண அமைச்சகம் கூறியுள்ளது.

  • ஜூன் 13ம் தேதி முதல் பிளாக் பாக்ஸ் ஒன்று, பின்னர் ஜூன் 16ம் தேதி இரண்டாவது பாகம் மீட்கப்பட்டிருந்தது.

  • இது இந்தியாவிலேயே படிக்கப்படுமா அல்லது அமெரிக்காவில் உள்ள National Transportation Safety Board (NTSB) மூலம் நடத்தப்படுமா என்பதிலும் தெளிவுகள் இல்லாமல் இருந்தன.

முடிவுகள் எதற்காக முக்கியம்?

  • Annex 13 எனப்படும் சர்வதேச விமானவழி சட்டத்தின் கீழ், பிளாக் பாக்ஸ் தரவுகள் எங்கு, எப்போது, எப்படிப் படிக்கப்படும் என்பது விபத்து தடுப்பு நோக்கில் உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

மெதுவாக வரும் தகவல்கள்:

  • இந்திய அரசு இதுவரை ஒரே ஒரு செய்தியாளர் மாநாட்டை மட்டும் நடத்தியுள்ளது. அதிலும் ஏற்கனவே தயாரித்த அறிக்கையை வாசித்துவிட்டு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

முன் அறிக்கை எப்போது?

  • பெரும்பாலான விமான விபத்துகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. எனவே, முதல் கட்ட அறிக்கை விபத்துக்குப் பின் 30 நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, இந்தியாவின் விமான விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை குறைபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மறுக்கும் போக்கு குறித்து கவலைக்குரியதாக்கி உள்ளது.

ஹிமாசல் பிரதேசத்தில் கன மழை, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் – 5 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

0

கடந்த 24 மணி நேரத்தில் ஹிமாசல் பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையால் மூன்று மேக வெடிப்புகள், ஒன்பது இடங்களில் திடீர் வெள்ளங்கள், மற்றும் மூன்று இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, குல்லு மாவட்டத்தில் மூவர், காங்கிரா மாவட்டத்தில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டறிய SDRF (மாநில பேரிடர் மீட்பு படை), NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மற்றும் ஹோம் கார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்கள் தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 21 பேர் வெற்றிகரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தரம்சாலாவில் மேக வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் NDRF வீரர்கள் இடைநீக்கம் மற்றும் மீட்பு பணிகளை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஷிம்லா நகரிலிருந்து உயரதிகாரிகளுடன் ஆன்லைன் மூலம் நிலைமையை ஆய்வு செய்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், ஆறுகள் மற்றும் ஆற்றங்கரைகளில் வசித்து வரும் மக்கள், குறிப்பாக வேலை தேடி வந்து தங்கிய பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு கடுமையான உத்தரவு வழங்கியுள்ளார்.

மழை காரணமாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஹிமாசல் பிரதேசத்தில், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்; அதிமுகவின் முதல் வாக்குறுதியை அளித்த இபிஎஸ்!

0

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை அளித்துள்ளார்.

அண்ணாவை எப்போது விட்டுக்கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்திருக்கின்றார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகின்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தால் இந்த மண் தந்தை பெரியார், பயன்படுத்திய மண் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண் இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் இழிவுபடுத்தி பேசும் அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் அண்ணா பெயரையே அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள் எனவும் பேசி இருக்கின்றார். தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளில் நோக்கத்தை புரிந்து அவர்கள் பாடம் புகட்ட தயாராக இருக்கின்றனர்.

அதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கின்றார். எங்கள் கொடியிலும் எங்கள் பெயரிலும் இருக்கும் அண்ணாவை ஒருபொழுதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அண்ணாவின் கொள்கைக்கு மாறாக குடும்ப ஆட்சி நடத்திக்கொண்டு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார் அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கச்சத்தீவு முதல் காவேரி வரை தமிழ்நாட்டை அதன் உரிமைகளை அடகு வைத்ததும் வைக்க துணிவதும் திமுக தான் என குறிப்பிட்டு பேசியிருக்கின்றார்.

மேலும் தமிழ்நாட்டின் அமைதி வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டு தருவேன். இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி என குறிப்பிட்டு இருக்கின்றார்

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; பயிர் கடன் பெற இனி இந்த ஆவணம் இருந்தால் போதும்!

0

தமிழக கூட்டுறவுத்துறையானது பயிர் கடன்களை மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இடுப்பொருட்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயிர் கடன் வழங்கப்படுகின்றது.

பயிர் கடனில் 30% புதிய உறுப்பினர்களும் 20% பட்டியலில் வகுப்பு விவசாயிகளும் சேர்க்கப்பட்டு பயிர் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பயிர் கடன் பெறுவதில் எளிய வசதிகளை கூட்டுறவு துறை தற்போது கொண்டு வந்துள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது முக்கியமாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணைய வழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதி கூட்டுறவு செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அதனால் ஒரு சில புகார்கள் அவ்வப்போது ஏற்படுகின்றது.

அண்மையில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் மட்டுமே பயிர் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்புக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தனர்.மேலும் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழக அரசு உடனடியாக விளக்கம் தந்துள்ளது.

கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர். பயிர் கடனை பெறுவதற்கு கூட்டுறவு வங்கிகளில் ஒரிஜினல் சிட்டா, அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டா, போன்றவற்றை ஆவணங்களாக கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஜாமீன் போடும் நபர்களின் போட்டோவும் அதனுடன் இணைக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் நேரில் வரவேண்டும் என்றும் தற்போது கூறியிருக்கின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம் இவ்வாறு ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுகிறது என புகார் அளிந்துள்ளது. இந்த புகாரை அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர் பெறப்பட்டு கடன் வழங்குவதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது

இனி பெரிய இயக்குனர்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்! Gamechanger பட தயாரிப்பாளர் கதறல்!

0

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்தியன் 2 படம் மிகப்பெரிய குப்பை படமாக மாறியது. ஷங்கரை நம்பி தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தைரியமாக gamechanger படத்தில் நடித்தார்.

இந்த gamechanger படத்திற்கு படம் வெளியாவதற்கு முன்னர் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. காரணம் ராம் சரணின் கடைசி படமான RRR படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் மலைபோல நம்பினர். ஆனால் படமோ இந்தியன் 2வே பரவால்ல என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அடைந்தது.

இந்த படத்தின் எடிட்டர் கூட 8 மணி நேரம் 30 நிமிடங்கள் எடுத்த படத்தை எப்படி 3 மணி நேரமாக குறைப்பது என்று பாதியிலேயே படத்தில் இருந்து விலகிவிட்டார். அண்மையில் gamechanger படத் தயாரிப்பாளர் தில் ராஜூ ஷங்கர் படத்தின் அனுபவம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். படத்தின் நீளம் நான்கரை மணி நேரம் இருந்தது என எல்லோரும் சொல்வது உண்மை தான். ஷங்கர் மாதிரியான மிகப்பெரிய இயக்குனர்கள் படம் எடுக்கும்போது இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான முன்னணி இயக்குனர்களுடன் நான் இதுவரை கூட்டணி வைத்ததில்லை.

gamechanger என்னுடைய தவறான முடிவு. ஒப்பந்தத்தில் முன்பே எல்லாவற்றையும் குறிப்பிட்டுவிட்டு படம் தயாரிக்க சென்றிருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய தவறு தான். இதுபோன்ற ஒரு தவறை இனி நான் செய்ய மாட்டேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் தில் ராஜூ.

பாமக-வின் முழு பவர் யாருக்கு.. மாம்பழம் சின்னத்தால் வரும் ட்விஸ்ட்!! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன??

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே தலைமை பதவி குறித்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இவர்களின் செயல்பாடுகளானது கட்சி இரண்டாக பிரிய போவதை தெள்ளந்த் தெளிவாக காட்டுகிறது. அதிலும் மீண்டும் தலைவராக நான் தான் இருப்பேன் என்று ராமதாஸ் முழக்கம் விட்டாலும் அதனை அன்புமணி ஏற்பதாக இல்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணிக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து நிர்வாகிகளின் பதவியையும் பரித்துள்ளார். மாறாக புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார்.

இப்படி இருக்கையில் அன்புமணி அப்பாவின் அறிவிப்புக்கு எதிராக அவர் நியமிக்கும் நிர்வாகிகளை நீக்குகிறார். இப்படி இருவரும் கட்சிக்குள் நிர்வாகிகளை நியமிப்பது நீக்குவதும் உண்டான வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் குழப்ப நிலையில் உள்ளனர். இதன் அடுத்தக்கட்டமாக கட்சி இரண்டாக பிரிந்தால் மாம்பழம் சின்னம் யாருக்கு செல்லும் என்பது குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

பாமகவின் சின்ன அதிகாரம் பெறுவதற்கு பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் கையெழுத்து போட்டு தான் பெற முடியும். அதிலும் ட்விஸ்ட் என்னவென்றால் விக்கிரவாண்டி தேர்தலில் மாநில கட்சியின் அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. அதாவது எட்டு சதவீத வாக்கு விகிதத்தை பெற முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னத்தை பாமகவிற்கு ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இது ரீதியாக பாமக தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதியுள்ளது. இருப்பினும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் அதிகாரமானது தற்பொழுது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலம் இருக்கா இதை கவனியுங்கள்; தமிழக அரசு கொடுத்த ஒரு வாய்ப்பு!

0

தமிழக அரசு தற்போது நிலம் உள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனுமதியற்ற மனை பிறவிகளில் இடம் வாங்கியவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறை படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளில் பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனை வாங்கியவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மனை பிரிவுகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்க 2017 ஆம் ஆண்டு மனைகள் வரைமுறைப்படுத்தப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.. 2025-26 ஆம் ஆண்டுக்கான மானிய குழு கோரிக்கையின் பொழுது 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனை பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2026 ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மனையின் பதிவு தேதி மற்றும் பிரிவு விவரங்களை சரி பார்க்க வேண்டும் இணையதளத்தில் உங்கள் மனையை பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களை தயார் செய்து கொண்டு சட்ட ஆலோசனை பெற்றால் சிறந்தது எனவும் கூறப்படுகின்றது