செவ்வாய்க்கிழமை, மே 7, 2024
Home Blog Page 16

செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!

0
செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!
இலங்கை நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க தற்பொழுது அறிவித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி தலைவருமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது உயிரத்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகவும் இலங்கை அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார்.
மேலும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அனுர குமார திசாநாயக்க அவர்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக இணையலாம் என்றும் கூறினார். இதையடுத்து தேர்தல் குறித்து அனுர குமார திசாநாயக்க அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் “இலங்கையில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும். 2019ம் ஆண்டு ராஜபக்சே அவர்களுக்கு வழங்கிய ஆதரவைப் போலவே எனக்கும் நீங்கள் பெரும் ஆதரவை வழங்க வேண்டும்” என்று பேசினார்.
இலங்கை நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த, ரணில், சந்திரிக்கா போன்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணையவுள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைவதற்கான திட்டங்களை ஏற்கனவே வகுத்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர கண்ணன் என்பவரின் பெயரும் அவரது மனைவியின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டுள்து.அதே முகவரியில் இருக்கும் அவரது மகள் பெயர் மட்டும் பட்டியலில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேற்கொண்டு தேர்தல் முடிவை தடை செய்து மீண்டும் தேர்தல் நடத்தி வாக்களிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதி கூறியதாவது, தேர்தல் முடிவடைந்த பிறகு எந்த ஒரு முடிவும் எடுக்க இயலாது.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை மீண்டும் வாக்களிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.இறுதி வாக்காளர் பட்டியலானது ஜனவரி மாதமே வெளியான நிலையில் அச்சமயமே நீங்கள் இது தொடர்பாக புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் புகார் அளிக்கவில்லை அப்பொழுது என்ன செய்தீர்கள்?? என்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வாக்காளர் பட்டியலில் பெயரில்லா காரணத்தினால் தேர்தல் முடிவை தடை செய்ய முடியாது என்றும் மேலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!

0
2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!
2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி நடைபெறவிருந்த யூஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் பி.எச்டி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அண்மையில் யூஜிசி அறிவித்து இருந்தது. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி யூஜிசி நெட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று(ஏப்ரல்30) ஜூன் மாதம் நடக்கவிருந்த யூஜிசி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகிய பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஜூன் மாதம் 16ம் தேதி முதல் நிலைத் தேர்வை நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நாளில் நெட் தேர்வு நடத்தப்படவிருந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வை ஜூன் 18ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து யூஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் அவர்கள் “நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி மற்றும் யூஜிசி இணைந்து நெட் தேர்வை ஜூன் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஜூன் 18ம் தேதி செவ்வாய் கிழமை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுத்து இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி வந்து யூஜிசி நெட் தேர்வை ஒரே நாளில் ஓ.எம்.ஆர் முறையில் இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி வெளியிடும்” என்று அறிவித்துள்ளார்.

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! 

0

பாதாள சாக்கடையில்  இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் இந்த பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயு தாக்கி மனிதர்கள் இறக்கும் நிலையானது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதனை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு சவாய் கர்மச்சாரி அந்தலோன் என்ற அமைப்பானது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கானது நேற்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு தான் இந்த பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவது தடை என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதேபோல பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு 30 லட்சம் வரை தற்பொழுது இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் அதனை மூன்று வருடத்திற்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். மேற்கொண்டு அந்த குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையும்  வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த 2013 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டமானது தமிழகத்தில் தீவிர படுத்த வேண்டும். அதேபோல மனிதர்கள் பாதாள சாக்கடையில் இறங்குவதற்கு பதிலாக இயந்திரங்களை உபயோகிக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

கொரோனா தடுப்பூசி போட்டால் பக்க விளைவு வருவது உறுதி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகவும் தீவிரம் அடைந்து இலட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகினர். அமெரிக்கா ரஷ்யா போன்ற அனைத்து நாடுகளிலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொற்றால் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பகட்ட காலத்தில் இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் பல மக்களை இறக்க நேரிட்டது என்றே  கூறலாம். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையும் படுத்தப்பட்டது. இதனை இரண்டு தவணையாக மக்களுக்கு செலுத்தி வந்தனர். குறிப்பாக இந்தியாவில் கோவிட் ஷீல்ட் தடுப்பூசியானது அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தினர். இந்த தடுப்பூசி நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்தது.

ஆனால் அது அனைத்தும் வதந்தி தான் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினர். மேற்கொண்டு அனைத்து நாடுகளிலும் இந்த கோவிட் ஷீல்ட் தடுப்பூசியை மக்கள் செலுத்திக்கொண்டனர். அவ்வாறு செலுத்தியதில் ஒருவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இவரைத் தொடர்ந்து 51 வழக்குகள் இவ்வாறு குவிந்தது.

இவ்வாறான வழக்குகள் குறித்து அத்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அந்த வழக்கிற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த கோவிட் ஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவது என்பது உண்மைதான். ஆனால் அது நூற்றில் ஒருவருக்கு தான் ஏற்படும். குறிப்பாக ரத்தம் உறைதல் ரத்த நாளங்களில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையானது குறைவது போன்றவை உண்டாகும்.

இது அனைவருக்கும் கட்டாயம் ஏற்படாது என்றும் ஏதோ ஒரு மருத்துவ சூழ்நிலையில் இவ்வாறு உண்டாகும் இதனால் மக்கள் பயப்பட தேவையில்லை என கூறியுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..?? 

0

ஒரே ஒரு காட்சிக்காக 17 முறை கன்னத்தில் அறை வாங்கிய நடிகர்.. தேசிய விருது வாங்கனும்னா சும்மாவா..??

சினிமா என்பது ஒரு கலை தேர்ந்த நடிகர்களால் மட்டுமே அந்த கலையை சிறப்பாக செய்ய முடியும். அதிலும் நடிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் கலைஞர்களால் மட்டுமே தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த முடியும். உண்மையில் படத்தில் பார்க்கும்போது அந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் நடிப்பு இருக்க வேண்டும்.

இதுபோன்று பெயர் வாங்குவதற்காக பல நடிகர் நடிகைகள் போராடி வருகிறார்கள். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல சிலர் தயாராக உள்ளனர். தற்போது கூட அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது ஒரு நடிகர் ஒரு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 17 முறை கன்னத்தில் அறை வாங்கியுள்ளார். இதனை கேட்டு பலரும் ஷாக்காகி உள்ளனர்.
அந்த நடிகர் வேறு யாருமல்ல பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் தான். இவரும் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான பரிந்தா என்ற படத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. மேலும் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் காட்சி ஒன்றில் அனில் கபூரை நடிகர் ஜாக்கி ஷெராப் கன்னத்தில் அறைய வேண்டுமாம். இந்த சீனில் முதல் ஷாட்டிலேயே இயக்குனர் ஓகே என்று கூறிவிட்டார். ஆனால் அனில் கபூருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அந்த காட்சியை மட்டும் திரும்ப திரும்ப எடுக்க சொல்லி கிட்டத்தட்ட 17 முறை அவர் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார்.
அதன் பின்னரே அனில் கபூர் திருப்தி அடைந்துள்ளார். இயக்குனரே அந்த காட்சி ஓகே என்று கூறியும் ஒரு நடிகரான அனில் கபூர் தனக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியை எடுத்து திருப்தி அளிக்கும் வரை நடித்துள்ளது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அவரின் அர்ப்பணிப்பை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!! 

0

எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க.. பேட்டியில் கண்கலங்கிய ரோபோ சங்கர் மகள்!!

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜாவிற்கு கடந்த மாதம் அவரின் சொந்த ஊரான மதுரையில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்திரஜா அவரின் மாமா கார்த்திக் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் சங்கீத் ஹல்தி என அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்தன.

அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்திரஜா – கார்த்திக் திருமணத்தின் நிகழ்வுகளை ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு தனியார் யூடியூப் சேனல் முழுவதுமாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை வாங்கி இருந்தது.
அதனால் இந்த ஜோடி திருமணம் முடிந்த கையோடு தொடர்ந்து பேட்டி கொடுத்து வந்தனர். திருமணம் முடிந்து சமீபத்தில் சிங்கப்பூருக்கு ஹனிமூன் கூட சென்று விட்டு வந்தனர். அப்படி இருந்தும் இன்னும் இவர்கள் பேட்டி கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியின் போது இந்திரஜா சங்கர் கண்கலங்கியுள்ளார்.
அதன்படி தங்கள் திருமணம் குறித்து வந்த தவறான கமெண்ட்கள் பற்றி இந்திரஜா சங்கர் பேசி இருந்தார். அவர் கூறியதாவது, “எப்படி இப்படி மனசாட்சியே இல்லாமல் கமெண்ட் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த ஜோடி இன்னும் எத்தனை நாள் ஆடுதுனு பார்க்கலாம். கொஞ்ச மாசத்துல ரெண்டு பேரும் தனித்தனியா பேட்டி கொடுப்பாங்க. சீக்கிரமே விவாகரத்துனு சொல்ல போறாங்க அப்படினு கமெண்ட் பண்றாங்க.
இன்னும் சிலர் எங்க திருமண போட்டோ பார்த்துட்டு எப்போ விவாகரத்துனு கேட்குறாங்க. எங்க மாமா எனக்கு மூனு முடிச்சு ஸ்ட்ராங்கா போட்ருக்காரு. இப்படி சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லையா? எங்களுக்கு கல்யாணமாகியே ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி கேட்குறீங்க?” என மிகவும் வருந்தியபடி பேசியுள்ளார்.

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0

இன்று பகல் 1 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.வட தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.கடுமையான வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

வெயிலால் ஏற்படும் நோய் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் முதியவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.இந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க இன்னும் சில மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கன்னியாகுமரி,நெல்லை மற்றும் இராமநாதபுரத்தில் இன்று பகல் 1 மணிக்குள் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி,நெல்லையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

0

இனி இ-பாஸ் கட்டாயம்..அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!

கொரோனா மற்றும் ஊரடங்கு சமயத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் கிடையாது. வெறும் இரண்டு இடங்களுக்கு மட்டுமே.

அதன்படி மே 7 ஆம் தேதி முதல் ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டுமென நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஒரு நாளைக்கு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊட்டிக்கு தினமும், 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.
இதனை கேட்ட நீதிமன்றம் ஒரு நாளைக்கு இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட முடியாது. மேலும் சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும். எனவே ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.
அதனை தொடர்ந்தே கொரோனா ஊரடங்கு சமயத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் வரும் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அமல்படுத்த வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

0

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை.. ஆய்வு முடிவால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவில் மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மாட்டுச்சாணத்தை கலந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார்கள்.

மேலும் அந்த குடிநீரை குடித்த சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் தான் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்த மக்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அந்த தொட்டியில் இருந்து அன்றைய தினம் பெறப்பட்ட குடிநீர் மாதிரியை திருச்சி பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அந்த பரிசோதனையின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க் கிருமி எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக இதுபோன்ற குடிநீரில் ஏதேனும் கலப்பு ஏற்பட்டால் அந்த நீரில் ஈகோலி (ECOLIA) என்ற பாக்டீரியா பல்கிப்பெருகிவிடும்.
அந்த சமயத்தில் அந்த நீரை குடிப்பதால் ஈகோலி பாக்டீரியா காரணமாக நம் உடல் பாதிக்கப்படும். ஆனால் சங்கம்விடுதி குருவாண்டான் தெருவிலுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரில் அதுபோன்ற பாக்டீரியாக்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கூட குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இருதரப்பு மக்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் தங்களுக்கு ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும், இருபிரிவை சேர்ந்த மக்கள் ஒன்றாக இருப்பதால், ஒற்றுமையை சீர்குலைக்க இதுபோன்று செய்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் கூறினார்கள். இந்நிலையில் ஆய்வு முடிவில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை என்று வந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.