Home Blog Page 22

இரண்டு குதிரை வேகத்திற்கு ஈடு கொடுக்கும் மருந்து!

0

இந்த மூலிகை ஆண்களின் விந்து வெளியேறும் பிரச்சினை மற்றும் விந்துவின் தரக் குறைபாடு போன்ற சிக்கல்களை சரி செய்ய உதவுகிறது. இது இயற்கையாக விந்துவின் உற்பத்தியை அதிகரித்து, உடல் பலத்தை மேம்படுத்துகிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

1/4 ஸ்பூன் ஓரிலைத் தாமரை (இந்த மூலிகை)

1/4 ஸ்பூன் காமவர்த்தினி எண்ணெய்

1/4 ஸ்பூன் அடை வெட்டி சூரணம்

இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, கடையில் கிடைக்கும் கடைக்கல் (மாவு அரைக்கும் கல்) மூலம் நன்றாக அரைக்க வேண்டும்.

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

தினமும் ஒரு கப் அளவுசிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவதற்கு முன் (காலையில் அல்லது இரவில்) எடுத்துக்கொள்ள வேண்டும்

எத்தனை நாட்கள்?

தொடர்ந்து 10 நாட்கள் எடுத்துக்கொண்டால்,விந்துவின் அளவும் தரமும் அதிகரிக்கும் உடல் சோர்வு குறையும் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்பு: இது ஒரு பாரம்பரிய மூலிகை மருத்துவக் குறிப்பு. உடலில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது நீண்டகால நோய்கள் இருந்தால், மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது

திமுகவின் முக்கிய முகத்தை தட்டித் தூக்கிய இபிஎஸ்.. கொண்டாட்டத்தில் அதிமுக!! அச்சத்தில் திமுக!!

0

ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி தான் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுகவை எதிர்க்க நாதக, தவெக போன்ற கட்சிகள் உதியமாகி விட்டன.

இந்நிலையில் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் பணியை திராவிட கட்சிகள் முன்னெடுத்து வரும் நிலையில், அதில் முதலிடம் பிடிப்பது திமுக என்று கூறும் அளவிற்கு, அந்த கட்சியில் தொண்டர்கள் இணைந்தனர். இவ்வாறான நிலையில் தவெகவிலும் இது அரங்கேறியது. தொண்டர்களை தவிர்த்து முக்கிய முகங்களை விஜய் தட்டி தூக்கினார். செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத், போன்ற முக்கிய நிர்வாகிகளின் இணைவு தவெகவிற்கு பலத்தையும், திராவிட கட்சிகளுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாற்று கட்சியினர் இணைவும் நிகழ்வு அதிமுகவில் மட்டும் தான் குறைந்தளவு இருந்தது. ஆனால் தற்போது, திமுக, தவெகவிற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். திமுகவின் முன்னாள் நகர செயலாளர் நவாப் மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் ஆகிய 100 க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவரின் இந்த சேர்க்கை அதிமுகவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

டிடிவி தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அமமுகவின் முக்கிய புள்ளிகள்.. அதிமுகவில் ஐக்கியம்!!

0

ADMK AMMK: 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக, இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பாஜக உடன் கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் இபிஎஸ்க்கு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்டவர்களால் புதிய இன்னல்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து புதிய கட்சி தொடங்கினார். பின்னர் பாஜக கூட்டணியில் இணைந்த இவர், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் அந்த கூட்டணியிலிருந்து விலகினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில், இபிஎஸ்யை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த தினகரன் எடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறார் என்பது கேள்வி குறியாகவே இருந்தது. இவ்வாறு  தினகரனின் அடுத்த நகர்வு குறித்த கேள்வி எழ, அவருக்கு பாதகமாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தற்போதைய அமமுகவின் அரியம் பாளையம் பேரூராட்சி செயலாளர் துரைசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அவருடன் அமமுக ஒன்றிய செயலாளர் கே.சி. சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த இணைவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பிரிந்த அனைவரும் தாய் கழகத்தில் இணைவது, அதிமுகவின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வின் மூலம், இன்னும் சிலர்  அமமுகவிலிருந்து விலகி அதிமுக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயினாரிடம் அமித்ஷா கொடுத்த அசைமெண்ட்.. அப்பா-மகன் சேரவேண்டியது உங்க பொறுப்பு!!

0

BJP PMK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் மும்முரமாக உள்ள நிலையில், பாமகவில் மட்டும் கட்சி யாரிடம் உள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்டுள்ள சண்டையால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. தொண்டர்கள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகை மேலும் வலுப்பெற்று ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்க, இதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

மேலும் சின்னத்திற்கு உரியவரும் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றம் சென்றார் ராமதாஸ். பாமகவில் தலைமை யார் என்பதில் சிக்கல் உள்ளதால், தேர்தல் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும், அதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாமகவின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அன்புமணி தரப்பு மட்டும் அதிமுக பக்கம் இருந்தால், வாக்கு வாங்கி சிதறும் என்பதை அறிந்த பாஜக அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என நயினாருக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று டெல்லி சென்ற நயினாரிடம் தொகுதி பங்கீடு குறித்தும், பாமகவின் சேர்க்கை குறித்தும் பேசப்பட்டதாக தகவல் கூறுகிறது. மேலும், அமித்ஷா தமிழகம் வருவதற்குள் கூட்டணி இறுதி வடிவம் பெற வேண்டுமெனவும் நயினாருக்கு அறிவுறுத்தியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

விஜய் பரப்புரைக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஈரோடு.. 18 ஆம் தேதி நடக்க போகும் தவெக திருவிழா!!

0

TVK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், இதனை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவரின் இந்த கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது. அந்த அளவிற்கு தவெக மக்களின்  ஆதரவை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 இடங்களில் பிரச்சார பயணத்தையும் செய்து முடித்தார். ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சுமார் 1 மாத காலமாக வெளியில் தலை காட்டாமல் இருந்த, விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தவெக மீண்டும் உயிர் பெற்றுவிட்டது என்பதை நிரூபித்தார். இவ்வாறான நிலையில் விஜய்க்கு மக்களை சந்திப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்க, நிபந்தனைகளும் அதிளவில் விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, புதுவையில் பொதுக்கூட்டம் நடத்திய தவெக, அடுத்ததாக ஈரோட்டில் மக்களை சந்திக்க அனுமதி கோரியிருந்தது. அதற்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், இறுதியில் 18 ஆம் தேதி தவெக பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையில் ஏராளமான திருப்பங்கள் நிகழும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஈரோடு பிரச்சாரத்தில் மக்கள் முன்னிலையில் தவெகவில் இணைவார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

0

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

 

இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் விவரம்

 

துறை: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

 

பணியின் பெயர்: Assistant – Computer Operator

 

காலியிடங்கள்: 01

 

பணியிடம்: கோயம்புத்தூர் – தமிழ்நாடு

 

🎓 கல்வித் தகுதி

 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி

 

கணினி டிப்ளோமா / கணினி சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்

 

🧑‍💼 பணி அனுபவம்

 

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு பணி அனுபவம்

 

கணினி பயன்பாட்டில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

 

🎂 வயது வரம்பு

 

விண்ணப்பிக்கும் தேதியின்படி

18 வயது முதல் 42 வயது வரை

 

💰 சம்பள விவரம்

 

மாதச் சம்பளம்: ₹11,916/-

 

📝 தேர்வு முறை

 

விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

 

நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்கப்படும்

 

💸 விண்ணப்பக் கட்டணம்

 

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

 

📮 விண்ணப்பிக்கும் முறை

 

தபால் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

 

முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

 

🌐

அதிகாரப்பூர்வ இணையதளம்

 

https://coimbatore.nic.in/

 

 

பாஜகவின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படும்.. சுளீரென்று பேசிய அதிமுக அமைச்சர்!!

0

ADMK BJP: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைவரும் தீவிர ஈடுபாட்டில் உள்ளனர். மேலும் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக, திமுகவின் போட்டியை மட்டுமே எதிர்கொண்ட தேர்தல் களம் தற்போது, நாதக, தவெகவின் தாக்கத்தையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. நான்கு முனை போட்டியே திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் பட்சத்தில், அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன.

அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில், பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, அதனை மையமாக வைத்து அதிமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் பெற முயற்சித்து வருகிறது. ஆனால் இபிஎஸ் பாஜகவிற்கு தமிழகத்தில் அதிகளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தினாலும், இதுவரை ஆட்சியில் பங்கு என்றே மரபே இல்லையென்ற காரணத்தினாலும், இவர்களின் கோரிக்கையை இன்னும் பரிசீலிக்காமல் உள்ளார். இதனால் விரக்தியடைந்த பாஜக, பிரிந்தவர்களை பாஜகவில் ஒன்றிணைத்து மாபெரும் சக்தியாக உருமாறி, அதன் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில், பாஜகவிற்கு தமிழகத்தில் பலம் இல்லையென்பதால், அதற்கு அதிக சீட்டுகள் ஒதுக்க முடியாது என்பது போன்ற கருத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பாஜக 60 தொகுதிகள் கேட்பதாக பரவும் தகவல் குறித்து அவரிடம் கேட்ட போது, தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கிறது. அந்ததந்த கட்சியின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கப்படும். இது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து பாஜகவிற்கு குறைந்த தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

0

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

 

உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ரோஷனின் அறையை சோதனை செய்தபோது, அவர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “என் காதுகளில் யாரோ அழைப்பது போன்ற ஒலி தொடர்ந்து கேட்கிறது” என்று குறிப்பிட்டிருந்ததுடன், குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரும் வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

 

ரோஷனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ரோஷன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள “காதுக்குள் ஒலி கேட்பது” என்ற நிலையை விளக்கி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செவிப்புல மாயை (Auditory Illusion) என்பது உண்மையில் இல்லாத ஒலியை மூளை தவறாக உணர்வதாகும். ஒலியின் அதிர்வுகள் அல்லது அதன் மாற்றங்களை மூளை சரியாக செயலாக்க முடியாதபோது, இதுபோன்ற அனுபவம் ஏற்படலாம்.

 

சில நேரங்களில் ஹாலுசினேஷன் (Hallucination) எனப்படும் கடுமையான மனநலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெளி உலகத்தில் எந்த ஒலியும் இல்லாவிட்டாலும், மூளை தானாகவே அந்த ஒலியை உருவாக்கும் நிலை இதுவாகும்.

 

ரோஷன் அனுபவித்த இந்த பிரச்சினை, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மனநலக் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய அறிகுறிகள் தோன்றும் போது அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்

விஜய்யும் வேண்டாம்.. ஆட்சியில் பங்கும் வேண்டாம்!! ஓப்பனாக பேசிய காங்கிரசின் டாப் தலை!!

0

TVK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. 2026 தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் என்றே கூறலாம். திமுகவிற்கு எதிரான வலுவான கட்சியாக தமிழகத்தில் உருமாற வேண்டுமென பாஜகவும், பீகார் தேர்தல் தோல்வியை போல தமிழகத்திலும் தோல்வியடைய கூடாது என காங்கிரஸும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

பீகார் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்க கூடாது என்பதில் திடமாக இருக்கும் காங்கிரஸ், திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு பெறுவதற்கு விஜய்யை பயன்படுத்தி வந்தது. ஆனால் திமுகவோ இது குறித்து எந்த கருத்தைம் கூறாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ், விஜய்யுடன் கூட்டணியில் சேர்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க காங்கிரசின் முக்கிய தலையான பிரவீன் சக்ரவர்த்தியை விஜய்யிடம் பேச அனுப்பியது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று அவர் கூறியிருந்தார்.

இவ்வாறு காங்கிரஸ்-தவெக கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ராகுல் காந்தியை பிரதராக்குவது தான் எங்களது ஒரே நோக்கம். அதற்கு திமுக கூட்டணி தான் சரியாக இருக்கும்.

என்னை பொறுத்தவரை, இருப்பதை விட்டுவிட்டு பார்ப்பதற்கு ஆசைப்படுவது தவறு என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த வதந்திக்கு இவர் முற்றுப்புள்ளி வைத்ததுடன், திமுகவை தவிர்த்து விஜய்யுடன் கூட்டணி வைப்பது தவறான முடிவு என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

அண்ணாமலைக்கு 50 இபிஎஸ்க்கு 50.. அமித்ஷா போட்ட மெகா பிளான்!! ஷாக்கான அதிமுக!!

0

ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. இந்த முறை தமிழக அரசியலில், புதிய புதிய திருப்பங்கள் நிகழும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஏற்றார் போல சில சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அதன் தோல்விக்கு காரணமாகும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.

முதலில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், இவருக்கு பின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார். இவர்களை தொடர்ந்து தற்போதைய மாநில தலைவர் நயினாரும் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவ்வாறு தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரின் பேச்சுவார்த்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

பாஜக ஆட்சி பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அதில் அண்ணாமலை இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முதல்வர் பதவியை நோக்கி தான் முன் வைக்கிறார்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஆட்சியில் பங்கு என்ற மரபே இல்லையென்று கூறி வரும் இபிஎஸ் இதனை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.