Home Blog Page 213

கவுண்டமணியின் சோகத்தில் பங்கெடுத்த விஜய்!.. நேரில் சென்று அஞ்சலி!…

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள்.

சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. 90களில் சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் போன்ற நடிகர்களின் எல்லா படங்களிலும் கவுண்டமணி இருப்பார். கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் போல ஹீரோவுடன் இணைந்து நடித்து படம் முழுக்க வருவார்.

வடிவேலும், விவேக், சந்தானம் அதிக படங்களில் நடிக்க துவங்கியதால் கவுண்டமணியின் மார்க்கெட் கீழே போனது. அதோடு, உடல்நிலை பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக கவுண்டமணியும் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இடையில் நடித்த சில படங்களும் வெற்றிபெறவில்லை.

vijay

இந்நிலையில்தான் அவரின் மனைவி சந்தியா உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள் கவுண்டமணியின் வீட்டில் இறுதி சடங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கவுண்டமணியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறியியிருக்கிறார். சிறிது நேரம் அங்கிருந்த விஜய் கவுண்டமணிக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். எதாவது பேசுங்கள் என செய்தியாளர்கள் கேட்டும் அவர் எதுவும் பேசாமல் கிளம்பி சென்றுவிட்டார்.

அக்னி நட்சத்திரம் அறிவியல் இல்லை!.. வானிலை மைய இயக்குனர் அமுதா விளக்கம்!…

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே வெயில் அதிரிக்க துவங்கிவிடும். அதிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும். ஏப்ரல் மாதத்திலேயே சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸை தொட்டு விடும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன்பு அந்த மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியதை தொட்டது.

எனவேதான், காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் வெயிலில் வெளியே வரவேண்டாம் என சுகாதார மையம் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதிலும், வெளியே சுற்றும் வேலை செய்பவர்கள், சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆனால், வாழ்வாதாரத்திற்கு வெயிலை சமாளித்து அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சாதாரண வெயிலே மக்களை வாட்டி வதைக்கும் என்றால் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் இன்னும் வெயில் அதிகரிக்கும். மே 5 முதல் 28ம் தேதி வரை இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரம், இது அறிவியல் இல்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.

இதுபற்றி விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா ‘கத்திரி வெயில் அறிவியல் பூர்வமானது இல்லை. இது அந்தக் காலத்தில் இருந்தே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நம்பப்படும் ஒன்றே தவிர இந்திய வானிலை ஆய்வு மையம் இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாது’ என கூறியிருக்கிறார்.

2026 தேர்தல் கட்டாயம் திமுக – வுடன் தான்.. இரண்டாக பிரியும் பாமக!! அப்பாவை எதிர்க்கும் அன்புமணி!!

PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் பாமகவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக பாமகவில் அப்பா மகன் இருவருக்குமிடையே இருந்த சண்டையால் கட்சியில் மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்த்தனர். ஆரம்ப கட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் இதனை சமாளித்து வந்த நிலையில் இறுதியில் நானே தலைவர் அன்புமணி கிடையாது என்று அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார்.

இதற்கு பின்னணி நோக்கம் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே பாஜக உடன் கூட்டணி வைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் பாஜக கூட்டணிய வேண்டாம் அதிமுக வேண்டாம் என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளாராம். மேற்கொண்டு மீண்டும் திமுக உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மற்றொரு பக்கம் அன்புமணி அவரது அப்பாவின் யோசனைக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார். இவரின் எம்பி பதவி காலமானது முடிவடையுள்ள நிலையில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தால்தான் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எண்ணுகிறாராம். இதனால் இவர்களுக்குள் மோதல் போக்கு இருந்து வருவதாக கூறுகின்றனர். அதிமுக இரண்டாக உடைந்தது போல் பாமகவும் சிதற அதிக வாய்ப்புள்ளது. பாஜகவிற்கு அன்புமணியும் திமுக விற்கு ராமதாஸும் இருவேறு திசைகளில் காலூன்ற இருப்பதாக கூறுகின்றனர்.

அப்ப விஜய்.. இப்ப அஜித்!.. சப்ப கட்டு கட்டும் சத்தியராஜ் பொண்ணு!…

டிகர் சத்யராஜின் மகள் திவ்யா. சென்னையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் இவர். சமீபத்தில் தன்னை திமுகவுடன் இணைத்துக்கொண்டார். அதோடு, பல திமுக மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசியபோது விஜயை வம்பிழுத்தார்.

உதயநிதி சாரை பற்றி பேசுவது எனக்கு பெருமை. அவர் ஒன்றும் ஏசி கேரவானிலும், தோழியோடு விமானத்திலும் செல்லும் அரசியல்வாதி இல்லை. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் உடனே இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த மாமன்னன் அவர். அவரை எதிர்த்து யார் எங்கு நின்றாலும் டெபாசிட் போய்விடும். அவர் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு ஹீரோ’ என பேசினார்.

இதையடுத்து ‘உங்களுக்கு மேடைப்பேச்சு சுத்தமாக வரவில்லை. அதை கற்றுக்கொண்டு மைக் முன்பு வாருங்கள். விஜய்யின் அரசியல் மீது விமர்சனம் வையுங்கள். அவர் யாருடன் விமானத்தில் சென்றார். யாருடைய கல்யாணத்திற்கு சென்றார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போல பேசுவது எதற்கு?’ என பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இப்போது அஜித்தை பற்றி பேசியிருக்கிறார் திவ்யா. எனக்கு அஜித் சாரை மிகவும் பிடிக்கும். அவருன் நான் போட்டோ எடுத்துவிட்டு அதன்பின் ஒரு வேலமாக ஒரு விஷயம் பண்ணா என்னை கைது செய்யலாம். ஆனால், இதுல அஜித் சாருக்கு பங்கு இல்ல. அவரிட்ட போய் நீங்க எதுவும் கேட்க கூடாது. அதேமாதிரி, திமுக கட்சி கொடியை கார்ல வச்சிக்கிட்டு ஒருத்தர் தப்பு பண்ணா அதுக்கு கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும். திமுகதான் அதுக்கு காரணம் என நீங்க நினைச்சா அது முதிர்ச்சியற்ற விஷயம்’ என பேசியிருக்கிறார்.

இலை மீது தாமரை மலரும்!. அப்புறம் இலை போட்டு சாப்பிடலாம்.. தமிழிசை சவுந்தர்ராஜன் சூசகம்…

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார் என்கிறார்கள். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

eps

இதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ரெய்டை காரணமாக காட்டி மிரட்டை அதிமுகவை பாஜக அடிபணிய வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு, பாஜகவுக்கு அடிபணிந்து அதிமுக மாநில சுயாட்சியை அடகு வைத்துவிட்டதாக பேசி வருகிறார்.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘குளத்தில் இலையின் மீது தாமரை மலரும். அதுபோலத்தான் ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். அப்படி மலரும்போதுதான் நாம் எல்லாம் இலைபோட்டு சரியாக சாப்பிட முடியும்’ என பேசியிருக்கிறார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மறைமுகமாக தவிர்த்த காங்கிரஸ்.. அம்பலமான உண்மை!!

0

பல தசாப்தங்களாக, காங்கிரஸ் கட்சி சமூக நீதிக்காக பாடுபடுவதாகக் கூறி வந்தாலும், ஜாதிக் கணக்கெடுப்பில் அதன் சாதனைப் பதிவு முற்றிலும் மாறுபட்ட யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது – இது முறையான புறக்கணிப்பு, கொள்கை முடக்கம் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் குறிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, காங்கிரசு ஒரு விரிவான ஜாதிக் கணக்கெடுப்பை நடத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCகள்) மற்றும் பொதுப் பிரிவினர் உட்பட அனைத்து சாதியினரின் மக்கள்தொகை மற்றும் பொருளாதார நிலை பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை ஜாதிவாரி கணக்கெடுப்பு வழங்கும், ஆனாலும் காங்கிரஸ் அரசியல் காரணங்களுக்காக இந்தப் பிரச்சினையை புறக்கணிக்கத் தேர்ந்தெடுத்தது.

காங்கிரஸின் பதிவு: ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல தசாப்தங்களாக மௌனம் காங்கிரஸானது இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்தது, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை விவரங்கள் பற்றிய முக்கியத் தரவுகளை சேகரிப்பதைத் தீவிரமாகத் தடுக்கிறது. 1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கடைசியாக விரிவான சாதித் தரவு சேகரிக்கப்பட்டது, மேலும் 1941 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதித் தகவல்கள் அடங்கியிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின் இடையூறுகள் காரணமாக அது வெளியிடப்படவில்லை.

1951 இல் நாடு தனது முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியபோது, ​​​​காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் சாதிக் கணக்கெடுப்பை முற்றிலுமாக கைவிட முடிவு செய்தது. இது தளவாடச் சிக்கல்களால் ஏற்படவில்லை – இது திட்டமிட்ட அரசியல் தேர்வு. OBC களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய கட்சிகளின் அழைப்புகளை காங்கிரஸ் புறக்கணித்தது, அவர்கள் நீண்ட காலமாக சாதி அடிப்படையிலான தரவுகளை தங்கள் உரிமையான வளங்கள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க கோரி வந்தனர்.

இந்த அநீதியை சரிசெய்ய பல வாய்ப்புகள் இருந்தும், காங்கிரஸ் தொடர்ந்து செயல்படத் தவறிவிட்டது. பின்தங்கிய சமூகங்கள் தங்களுக்குத் தகுதியான பலன்கள் மற்றும் ஆதரவைப் பெறுவதைத் தடுத்து, மீண்டும் மீண்டும், அந்த நிலையைத் தக்கவைக்கக் கட்சி தேர்வு செய்தது.

யுபிஏ சகாப்தம்: 2010 ஆம் ஆண்டில் சாதித் தரவுகள் நசுக்கப்பட்டன, வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன, பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நெருங்கி வருவதால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதித் தரவைச் சேர்க்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சட்ட அமைச்சர் எம் வீரப்ப மொய்லி வலியுறுத்தினார். ஆயினும்கூட, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்தது, தளவாட சவால்களை மேற்கோள் காட்டி, சில சமயங்களில், சாதிக் கணக்கீட்டின் முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தியது.

அதிக அழுத்தம் இருந்தபோதிலும், 2011 இல் சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பை (SECC) நடத்த காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. இருப்பினும், இந்த கணக்கெடுப்பு முக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து தனித்தனியாக நடத்தப்பட்டது, அதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டுப்படுத்தியது. எஸ்இசிசி வரி செலுத்துவோருக்கு கிட்டத்தட்ட ரூ. 5,000 கோடி செலவாகும் என்றாலும், வெளிப்படைத்தன்மை குறித்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றத் தவறிவிட்டது.

இறுதியில் 2016 இல் சமூக-பொருளாதாரத் தரவு வெளியிடப்பட்டாலும், ஜாதித் தரவு வசதியாகத் தடுக்கப்பட்டு, இன்றுவரை வெளியிடப்படாமல் உள்ளது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை OBCகள், SCக்கள் மற்றும் STகள் அரசியல் செயல்பாட்டில் அவர்களின் உரிமையான பங்கை மறுத்தது, மேலும் கட்சியின் முறையான புறக்கணிப்பை மேலும் அம்பலப்படுத்தியது.

கர்நாடகாவின் சந்தேகத்திற்குரிய ‘கணக்கெடுப்பு’: கடந்த மூன்று ஆண்டுகளில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு வெகு தொலைவில், பல பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களான பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம்-சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், கர்நாடகாவின் இந்த விவகாரத்தில் அணுகுமுறை மிகவும் கேள்விக்குரியதாகவே உள்ளது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட நேரத்தில் இந்த மாநிலங்கள் அனைத்தும் பாஜக அல்லாத நிர்வாகங்களால் ஆளப்பட்டன.

சமீபத்திய ஆண்டுகளில், பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தியது, ஆனால் காங்கிரஸ் தலைமையிலான சித்தராமையா அரசாங்கத்தின் கீழ் கர்நாடகாவின் அணுகுமுறை கவலையளிக்கிறது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் 2015ல் ‘சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வை’ மேற்கொண்டது. இருப்பினும், அறிக்கை பல ஆண்டுகளாக புதைக்கப்பட்டது, பிப்ரவரி 2024 இல் காங்கிரஸ் தலைமையின் அழுத்தத்தால் மட்டுமே வெளியிடப்பட்டது.

ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூட அறிக்கை வெளியிடப்படுவதை எதிர்த்தார். தாமதம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது சமூக நீதிக்கான காங்கிரஸின் உண்மையான அர்ப்பணிப்பு குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியது. ஒரு விரிவான மற்றும் வெளிப்படையான ஜாதிக் கணக்கெடுப்பை நடத்துவதற்குப் பதிலாக, தேர்தல் ஆதாயத்திற்காக சாதி அடிப்படையிலான பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கணக்கெடுப்புகளுக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்தது.

போலி மாநில அளவிலான கணக்கெடுப்புகளில் பணத்தை வீணாக்குவதை நிறுத்துங்கள், பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் கீழ், வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் அறிவியல் பூர்வமான, முறையான, நாடு தழுவிய ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது. அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் போன்ற கட்சிகளால் தற்செயலான மாநில அளவிலான கணக்கெடுப்புகளின் போக்கை இது இறுதியாக நிறுத்தும்.

அரசியல் உள்நோக்கம் கொண்ட, எங்கும் செல்லாத முழுமையற்ற கணக்கெடுப்புகளுக்காக மாநில அரசுகள் கோடிகளை வீணடிப்பதை உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே தடுக்கும். கர்நாடகா ஒரு சிறந்த உதாரணம். 2015 இல், காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா ஒரு “சமூக-பொருளாதார” கணக்கெடுப்பை நடத்தினார் – பின்னர் அந்த அறிக்கையை ஒன்பது ஆண்டுகளாக புதைத்து வைத்தார். ஏன்? ஏனெனில் அது சில சமூகங்களை சங்கடப்படுத்தியது. காங்கிரஸ் உண்மையை விரும்பவில்லை. அது கட்டுப்பாட்டை விரும்புகிறது.

ஓபிசி, எஸ்சி, மற்றும் எஸ்டி தலைவர்களை காங்கிரஸ் எப்படி அவமதித்தது என்பது பிற்படுத்தப்பட்ட சமூகங்களை காங்கிரஸ் நடத்தும் விதம் வெட்கக்கேடானது. மூத்த ஓபிசி தலைவர் சீதாராம் கேஸ்ரி, சோனியா காந்திக்கு இடமளிக்க காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஓபிசி முதல்வர் வீரேந்திர பாட்டீல் அவமானப்படுத்தப்பட்டு, கண்ணியம் இல்லாமல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவின் தலைசிறந்த தலித் தலைவர்களில் ஒருவரான ஜக்ஜீவன் ராம், காங்கிரஸ் அமைப்பிற்குள் உயர அனுமதிக்கப்படவில்லை.

அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர், இந்து கோட் மசோதா தொடர்பாக ராஜினாமா செய்தபோது காங்கிரஸால் ஓரங்கட்டப்பட்டார் மற்றும் ஆதரிக்கவில்லை. இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் சோனியா காந்தியிடமிருந்து ஒரு மரியாதை நிமித்தமான வருகையைப் பெறவில்லை – இது பாஜகவின் அவமரியாதை என்று காங்கிரஸால் ஒருபோதும் விளக்க முடியவில்லை. இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்முவை பாஜக பரிந்துரைத்தபோது, ​​காங்கிரஸ் அவரை ஆதரிக்கவில்லை. அதைவிட மோசமானது, சித்தராமையா அவளை ஒரு ஒற்றைப் பிரதிபெயரைப் பயன்படுத்திக் குறிப்பிட்டது, ST தலைவர்களை கட்சி அவமதிக்கும் அளவைக் காட்டுகிறது.

ஜாதிக் கணக்கெடுப்புடன் காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய வரலாறு, காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாக ஜாதிக் கணக்கெடுப்பு தொடர்பான சர்ச்சைகளுடன் தொடர்புடையது, குறிப்பாக 2011 சமூக-பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (SECC) சாதித் தரவை எவ்வாறு கையாண்டது என்பதில் காங்கிரஸ் கட்சி வரலாற்று ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.

இங்கே சில முக்கிய அம்சங்கள் உள்ளன: SECC இன் துவக்கம் மற்றும் இரகசியம் (2011): காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தின் கீழ், SECC 2011 இல் சாதி தரவுகளை சேகரிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. எவ்வாறாயினும், சாதி சார்ந்த தரவுகள் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை, இது அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் இந்தத் தரவை வெளியிட கட்சி தயக்கம் பற்றிய கேள்விகளுக்கு வழிவகுத்தது. இந்த இரகசியமானது தரவைத் தடுத்து நிறுத்துவதற்கான உண்மையான காரணங்கள் பற்றிய விமர்சனத்தைத் தூண்டியது.

பரிந்துரைகளை செயல்படுத்துவதில் தோல்வி: 1980களில், மண்டல் கமிஷன் OBC களுக்கு 27% இடஒதுக்கீட்டை, சாதி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் பரிந்துரைத்தது, இது இறுதியில் 1990 இல் செயல்படுத்தப்பட்டது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை காங்கிரஸ் ஆதரித்தாலும், சமூகப் பிற்படுத்தப்பட்ட பிரிவின் சரியான அடையாளத்தை உறுதி செய்யும் விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஜாதி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முன்னெடுத்துச் செல்லவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.

சாதிக் கணக்கெடுப்பில் தெளிவான கொள்கை இல்லாமை: சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை முரணாக ஆதரிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாக காங்கிரஸ் வரலாற்று ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் எஸ்இசிசியை துவக்கினாலும், அவர்களின் தயக்கம் மற்றும் விரிவான ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது ஜாதி அடிப்படையிலான நலனுக்கான அவர்களின் உண்மையான அர்ப்பணிப்பு பற்றிய கவலையை எழுப்பியது.

அரசியல் நலன்: உண்மையான கொள்கை நடவடிக்கைக்காக அல்லாமல் அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சினையை காங்கிரஸ் அடிக்கடி பயன்படுத்துகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, SECC சாதித் தரவை வெளியிடுவதில் தாமதமானது அரசியல் கணக்கீடுகளின் காரணமாக இருக்கலாம், அங்கு தரவுகள் தங்கள் வாக்கு வங்கி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அக்கட்சி அஞ்சுகிறது.

செயல்பட வேண்டிய நேரம், நின்றுவிடாது தேசிய ஜாதிக் கணக்கெடுப்பு என்பது எண்களைப் பற்றியது மட்டுமல்ல. இது சமூக யதார்த்தங்களை ஒப்புக்கொள்வது, சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்வது மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஒவ்வொரு சமூகமும் அதன் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதி செய்வதாகும். காங்கிரசுக்குச் செயல்பட பல தசாப்தங்கள் இருந்தன – ஆனால் தாமதம், இரகசியம் மற்றும் அரசியல் தேவையைத் தேர்ந்தெடுத்தது. இந்த தெளிவின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவின் உண்மை முகத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாஜக குரல்கள் இப்போது குரல் கொடுக்கின்றன.

100 கோடி வசூலை தண்டிய ஹிட்3.. அதிரும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கில் மற்ற ஹீரோக்கள் மசாலா கலந்த, ஹீரோயிசம் இருக்கும் கதைகளில் நடிக்கும்போது நானி மட்டும் நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் வேடங்களில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானர். மேலும் வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்திலும் நானி நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி வெளியான ஹாய் நானா, கேங்லீடர், ஜெர்சி, தசரா போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, இங்கும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இவரின் ஹிட் 3 படம் கடந்த 1ம் தேதி வெளியானது. ஏற்கனவே ஹிட் மற்றும் ஹிட் 3 படங்கள் தெலுங்கில் வெளியாகி பெற்ற நிலையில்தான் இப்போது மூன்றாம் பாகம் வெளியானது. இந்த படத்தை சைலேஷ் கோணலு என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக வெளியானது.

hit3

இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 101 கோடி வசூல் செய்திருப்பதாக பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள்.

சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. 90களில் சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் போன்ற நடிகர்களின் எல்லா படங்களிலும் கவுண்டமணி இருப்பார். கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் போல ஹீரோவுடன் இணைந்து நடித்து படம் முழுக்க வருவார்.

வடிவேலும், விவேக், சந்தானம் அதிக படங்களில் நடிக்க துவங்கியதால் கவுண்டமணியின் மார்க்கெட் கீழே போனது. அதோடு, உடல்நிலை பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக கவுண்டமணியும் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இடையில் நடித்த சில படங்களும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில்தான் அவரின் மனைவி சந்தியா உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள் கவுண்டமணியின் வீட்டில் இறுதி சடங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ரூட்ட மாத்துங்க. இல்லனா விபூதி அடிப்பாங்க!.. சூர்யாவை பொளக்கும் புளூசட்ட மாறன்..

நடிகர் சூர்யாவின் படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கம் 2-வுக்கு பின் பெரிய ஹிட் படம் சூர்யாவுக்கு அமையவில்லை. ஜெய்பீம், சூரரைப்போற்று படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படம் சூப்பர் ஹிட் படமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் தனது எக்ஸ் தளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

6 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து வரும் சூர்யா.  அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக சூர்யா தந்த கடைசி தியேட்டரிக்கல் ஹிட் படம் சிங்கம் (2009).

அதன்பிறகு இன்றுவரை சரியான கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதே.  ஏற்கனவே ஜெயித்த இயக்குனர்கள் மீது சவாரி செய்தால் வெற்றி உறுதி என நம்புகிறார். ஆனால் அவர்கள் சொல்லி வைத்தாற்போல் இவருக்கு மட்டும் விபூதி அடித்து விடுகிறார்கள்.

ஜிகர்தண்டா Double X எனும் ஓடாத படத்திற்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி ஏமாற்றினார்கள். அதை நம்பி கார்த்திக் சுப்பராஜூக்கு வாய்ப்பு தந்தார். விளைவு… ரெட்ரோ பணால் ஆகிவிட்டது. சிங்கத்திற்கு பிறகு ஒரே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட தரமுடியாமல் 16 வருட ஃப்ளாப் பயணம் தொடர்கிறது.

அடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் மாசானி அம்மன் கதை இவருக்கு கைகொடுக்குமா என தெரியவில்லை. தமிழ் ரசிகர்கள் உஷாராக இருப்பதை மிகத்தாமதமாக உணர்ந்த சூர்யா அடுத்ததாக.. வெங்கடேஷ் அட்லூரி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்‌. அது என்ன ஆகுமோ!. இனியாவது உருப்படியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும். புதிய இயக்குனர்களை நம்ப வேண்டும்.

பழைய டபரா செட்டுகளை மட்டுமே நம்பினால்.. விபூதி அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். திரையில் இவரை பார்க்கும்போது கதாபாத்திரமா தெரியாமல்.. சூர்யாவாக மட்டுமே தெரிவது பெரிய மைனஸ். இந்த செயற்கை தனத்தையும் சரி செய்ய வேண்டும். பிதாமகன், காக்க காக்க போன்று நம்பகத்தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும்.

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதல்!. விசாரணைக்கு பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த நபர்…

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. சிந்து நதியின் நீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு இல்லை எனவும் இந்தியா அறிவித்துவிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில், இரண்டு நாடுகளும் எல்லைகளில் சண்டை போட துவங்கிவிட்டார்கள். ஒருபக்கம், பகல்காம் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் பலரையும் பிடித்து விசாரித்து வருகிறார்.

காஷ்மீரில் வசிக்கும் சிலர் உதவியின்றி இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை அதிகாரிகள் கருதுகிறார்கள். மேலும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற அமைப்பிற்கும் இதில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், லக்‌ஷ்கர் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஒருவரை ராணுவ வீரர்கள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது ராணுவ வீரர்களிடமிருந்து தப்பியோடிய அவர் ஆற்றில் குதித்து உயிரிழந்தார். இவர் ஜம்மு – காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்.