Home Blog Page 214

மீண்டும் மதுரை வரும் தவெக தலைவர் விஜய்!.. விமான நிலையத்தில் பாதுகாப்பு!…

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடிகராக இருக்கும்போதே அவரை நேரில் பார்க்கவேண்டும் என பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், விஜயை நேரில் பார்ப்பது எளிது இல்லை. வீட்டிலோ இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டிலோ இருக்கும் அவரை பார்க்கவே முடியாது. விஜய் வீட்டில் இருக்கிறாரா? இல்லை ஷூட்டிங்கிற்காக வேறு எங்கேயாவது போயிருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது. அவர் விமான நிலையத்திற்கு செல்லும்போது கூட யாருக்கும் தெரியாது.

ஆனால், தற்போது விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதால் அவர் எங்கு சென்றாலும் தெரிந்துவிடுகிறது. ஏனெனில், இது தொடர்பான செய்திகளை உடனே செய்தி சேனல்களில் வெளியிட்டு விடுகிறார்கள். இதனால் விஜய் எங்கு போனாலும் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள். சமீபத்தில் கொடைக்கானல் செல்வதற்காக மதுரைக்கு விஜய் வந்தபோது விமான நிலையத்தில் ரசிகர்களும், தவெகவினரும் கூடிவிட்டனர். அப்போது விமான நிலையத்தில் பல பொருட்கள் சேதமடைந்தது.

vijay

அதற்கு சில நாட்களுக்கு முன் கோவையில் நடந்த முகவர் பூத் கமிட்டியில் கலந்துகொள்ள விஜய் வந்தபோது கோவை விமான நிலையத்தில் கூட்டம் கூடி பொருட்களை தள்ளி செல்லும் பல டிராலிகள் சேதமடிடைந்தது. இது தொடர்பாக தவெகவினர் மீது போலீசார் வழக்குபதிவும் செய்தனர். மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு சென்றபோது ‘நான் ஜனநாயகன் ஷூட்டிங்கிற்காக செல்கிறேன். யாரும் என்னை பின் தொடர வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றார் விஜய். ஆனாலும், கொடைக்கானலில் அவருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எனவே, வேறு வழியில்லாமல் ரோட் ஷோ நடத்தினார் விஜய். அரசியலுக்கு வந்துவிட்டதால் இதை செய்தாக வேண்டிய நிலையில் விஜயும் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை மதுரை விமான நிலையத்திற்கு அவர் வரவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடந்தது போது விமான நிலையத்தில் கூட்டம் கூட இந்த முறை போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.

மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழக அரசானது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு 10% இட ஒதுக்கீடாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது. 

 

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பதாவது :-

 

மருத்துவத்துறையில் அதிக அளவு தமிழக மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்திருப்பது நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ தேர்வில் சேர முடியும் என்ற நிலை தற்பொழுது இருப்பதால் கிராமப்புற மாணவர்களின் கனமானது பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும் நீட் தேர்வின் உடைய அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலையானது தற்பொழுது நிகழ்ந்து வருவதாகவும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக நீட் தேர்வின் கொடுமைகளை சுட்டி காட்டியதோடு அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவ துறையில் மாணவர்களுக்கு குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடானது தற்பொழுது உயர்த்தப்பட இருப்பதாகவும் இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி தகுந்த முடிவை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு வெளியிடப்படும் பட்சத்தில் இட ஒதுக்கீடு உயர்வு மாணவர்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீட் தேர்வில் மது குறித்து கேட்கப்பட்ட கேள்வி!! அதிர்ச்சியில் மாணவர்கள்.. கொந்தளிக்கும் கல்வியாளர்கள்!!

மே 4 ஆம் தேவையான நேற்று மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது இதில் பீர் ரம்மி பிராந்தி குறித்து மாணவர்கள் விடை அளிக்கக்கூடிய வகையில் கேள்வி ஒன்று இடம் பெற்றிருப்பது மாணவர்களை மட்டும் இன்றி கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. 

 

இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவு தேர்தல் தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருக்கின்றனர். நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் நீட் தேர்வு வினாத்தாளானது அமைந்திருந்தது ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலையில் தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தேர்வில் 117 வது கேள்வியாக இன்ஸ்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என்ற கேள்வி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேள்வி கல்வியாளர்களை அதிக அளவில் கோபப்படுத்திய நிலையில் பலரும் இதற்கு கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்த கேள்விக்கு பீர் ப்ரம் பிராந்தி விஸ்கி என நாலு விடைகள் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் இது சரியான விடையான பீர் என்பதை தேர்வு செய்திருக்கக்கூடிய மாணவர்களுக்கு 4 மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கேள்வி கேட்க எத்தனையோ பாடத்திட்டங்கள் இருப்பதாகவும் ஆனால் மதுபானம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டு இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக கல்வியாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் வருங்கால மருத்துவர்கள் இடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா என்றோம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கேள்விகளை கேட்காமல் மது போதை பொருட்கள் புகைப்படம் போன்றவற்றை குறித்த கேள்விகளால் மாணவர்கள் பெருமளவு அவதிப்படுவதாகவும் கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!

இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர். 

 

ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த திரைப்படத்தை நானே தயாரிக்கப் போகிறேன் என டி ராஜேந்திரன் அவர்கள் தெரிவிப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மறுப்பு கூறியதோடு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை நானே பார்த்து தருகிறேன் திரைப்படத்திற்கு நீங்கள் திரைக்கதை எழுதி இயக்கினால் மட்டுமே போதும் என தெரிவித்திருக்கிறார்.

 

அப்பொழுது டி ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய நிலை இதுதான் என்றும் தனக்கு பணத் தேவை இருப்பதால் திரைப்படத்தை நானே இயங்குகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு முழுவதுமாக மறுத்துவிட்டு என்று நீங்கள் பெரிய தயாரிப்பாளராக மாறுகிறிர்களோ அன்று உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார். மிகப்பெரிய பண தேவையில் இருந்த டி ராஜேந்திரன் அவர்கள் வேறு வழி இன்றி அந்த திரைப்படத்திற்கு தானே கதாநாயகனாகவும் இயக்குனராகவும தயாரிப்பாளராகவும் மாறி மிகப்பெரிய பிளாக் மாஸ்டர் திரைப்படமாக திரைப்படத்தை கொடுத்தார்.

 

அந்த திரைப்படம் தான் உயிருள்ளவரை 1983 ஆம் ஆண்டு வெளியானது திரைப்படத்தோடு நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் வெளியானது ஆனால் அவருடைய துடிக்கும் கரங்கள் படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை ஆனால் உயிருள்ளவரை உஷா திரைப்படமானது தமிழில் மட்டும் வெற்றி தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் விமான டிக்கெட் பெறுவதற்கான ட்ரிக்ஸ்!! உடனே டிரை பண்ணி பாருங்க!!

அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யக் கூடியவர்கள் மற்றும் விமானத்தில் குறைந்த விலையில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான சுத வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் 5,000 ரூபாய் மதிப்பு இருக்கக்கூடிய டிக்கெட்டை வெறும் 799 ரூபாய்க்கு முன்பதிவு செய்த பெற்றுக் கொள்ள முடியும்.

 

விமான பயணத்தின் டிக்கெட் விலையை குறைப்பதற்கான வழிமுறைகள் :-

 

✓ செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் விற்கப்படாத டிக்கெட்டுகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

✓ பொதுவாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுது 21 முதல் 31 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தால் 799 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டை பெற முடியும்.

 

✓ செவ்வாய் புதன் மற்றும் சனி போன்ற கிழமைகளில் விமான டிக்கெட் விலை முன்பதிவு செய்யும் பொழுது மலிவானதாக கிடைக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவு வணிக பயணிகள் விமானத்தில் பயணிப்பதால் விலைகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ Google flights, Skyscanner, Hopper போன்ற விமான டிக்கெட் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது கட்டணம் விலை குறைவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

 

✓ Ixigo, Paytm travel, easy my trip ஒன்று முன்பதிவு தளங்களை முதல் முறை பயன்படுத்தக்கூடிய பயணிகளுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரை தள்ளுபடி பூக்கள் வழங்கப்படும்.

 

விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் தங்களுடைய விமான பயணத்திற்கான டிக்கெட்டை மூன்று வாரங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்வதோடு இந்த சலுகைகளை பயன்படுத்துவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும்.

இந்த காரணத்திற்காகத்தான் ராஜகுமாரனை திருமணம் செய்தேன்!! பல ஆண்டுகளுக்குப் பின் தேவயானி கூறிய உண்மை!!

90களில் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வளம் வந்த நடிகை தேவயானி அவர்கள் திடீரென குடும்ப வாழ்க்கையில் நுழைந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விளக்கினார். அவருடைய திருமணமானது ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

சினிமா துறையை விட்டு விலகினாலும் சின்ன துறையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானி அவர்கள் அமீபத்தில் நிழற்குடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நிலையில் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து நடிகை தேவயானி வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

தன்னுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து தேவயானி பேசியிருப்பதாவது :-

 

சூரியவம்சம் திரைப்படத்தின் போது தான் தனக்கும் ராஜகுமாரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அப்பொழுதே இருவரும் நண்பர்களாக மாறிவிட்டதாகவும் நடிகை தேவயானி தெரிவித்து இருக்கிறார். சூரியவம்சம் திரைப்படத்தின் உதவி இயக்குனராக ராஜகுமார் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் அவருடைய நீ வருவாய் என திரைப்படத்தில் நடிப்பதற்காக கேட்ட பொழுது அவர் மீது தனக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டதாகவும் அது மட்டுமல்லாது பலரும் அவர் குறித்து பாசிட்டிவாக தெரிவித்ததாகவும் அவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது நேர்மையாக இருக்கிறார். உண்மையான அன்பை கொடுக்கிறார். இதைத்தவிர தனக்கு தன்னுடைய வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்பதற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டதாக நடிகை தேவயானி தெரிவித்து இருக்கிறார்.

 

மேலும் அவர் சிறந்த மனிதர் மட்டுமல்லாது தற்பொழுது நல்ல அப்பாவாகவும் இருக்கிறார் என்றும் இந்த திரைப்படம் கூட பிள்ளைகள் குறித்து பார்வை பெற்றோரிடத்தில் எப்படி இருக்கிறது என்பதை பேசுகிறது என்றும் நிழற்குடை திரைப்படத்தை குறித்து நடிகை தேவயானி பேசி இருக்கிறார்.

ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி 4 நாள் வசூல் எவ்வளவு?!.. வாங்க பார்ப்போம்!..

கடந்த மே 1ம் தேதி இரண்டு நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது. ஒன்று சூர்யாவின் ரெட்ரோ. அடுத்து சசிக்குமார் நடிப்பில் உருவான டூரிட்ஸ் ஃபேமிலி. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.

ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவில் 43 கோடியும், இந்திய அளவில் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்து புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கியுள்ள டூரிஸ்ட் படமும் 1ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து முறைகேடாக படகில் தப்பில் சென்னை வந்தும் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையை இப்படம் பேசுகிறது. சிரிப்பும், எமோஷனலும் கலந்த படமாக டூரிஸ்ட் ஃபேலிமிலி உருவாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படம் வெளியாகி 4 நாட்களில் இந்தியாவில் 10 கோடியும், வெளிநாடுகளில் 2.31 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 16 கோடி என சொல்லப்படும் நிலையில் கண்டிப்பாக இப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தையே கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

சிலிண்டருக்கு மாற்றாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்!! 1.49 லட்சம் பேர் பதிவு!!

2032 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெற 1.49 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரிகள் தருவதற்கு லட்சம் பேர் பதிவு செய்து இருப்பதாகவும் பிரபல என்னை நிறுவன அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

 

இதுவரை வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய மூலப் பொருளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுவதாகவும் பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பால் கிடைக்கக்கூடிய மூலப் பொருளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுவதாகவும் பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு இந்த குழாய் வழித்தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் சமையலறிவாயு சிலிண்டரை விட விலை குறைவாக இந்த இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் இதனை மத்திய அரசு அனுமதி உடன் தான் வழங்கி வருவதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய இன்னொரு துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல் என் ஜி எனப்படக்கூடிய திரவ நிலை இயற்கை எரிவாயு முனையும் ஒன்றினை அமைத்திருப்பதாகவும் இதற்கு வெளிநாடுகளில் இருந்து எரிவாயு எடுத்து வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 2.30 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும் 2,625 பி என் ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகிக்க 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசன் தற்பொழுது வரை அனுமதி வழங்கி இருப்பதாகவும் இந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவினை பூமிக்கு அடியில் பைப்லைன் அமைத்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனுடைய முதற்கட்டமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் நாகை மாவட்டங்களில் கேஸ் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று வாடிக்கையாளர்களை அணுகி குழாய் வழித்தடத்தில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான அனுமதியை பெற்று வருவதாகவும் தற்பொழுது வரை இதற்கு 1.47 லட்சம் வீடுகளில் மக்கள் குழாய் வழித்தடம் மூலமாக இயற்கை எரிவாயு வினை பெறுவதற்கான பதிவினை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

 

அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களை தாங்களாகவே உருவாக்கிக் கொள்வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் ஆவணம் உருவாக்கிய பின்பு ஆவணத்திற்குரிய அரசு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பெண் நாள் நேரத்தை முடிவு செய்து ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து ஆஜராகி வழக்கம் போல் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 

தமிழக அரசினுடைய பத்திர பதிவுத்துறையில் லஞ்சம் அதிகமாக பொருளுவதால் பத்திர பதிவு செய்ய நினைப்பவர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திப்பதாகவும் பத்திரப்பதிவுத்துறையில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுத்துருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் 1975 ஆம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950 ஆம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களை எளிதாக அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

✓ https://tnreginet.gov.in

 

பத்திரபதிவு துறையோடு திருமண பதிவு நடைமுறையும் தற்பொழுது எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் நேரடியாகவே விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரையில் நிலம் வீடு போன்ற சொத்துக்களை பதிவு செய்ய பத்திர எழுத்தாளர்கள் வகைகள் மூலமே ஆவணங்கள் பதிவு செய்யும் நிலை தற்பொழுது முற்றிலுமாக மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பத்திர பதிவு செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய ஆவணங்களின் வகை குறிப்பாக விற்பனை ஆவணம் தான செட்டில்மெண்ட் பாகப்பிரிவினை போன்றவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதனை தொடர்ந்து விற்பவர் பெயர் வாங்குபவர் பெயர் நிலம் அமைந்திருக்கக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகம் கிராமம் சர்வே எண் நிலத்தின் அளவு போன்றவற்றை பதிவு செய்தால் ஆவணம் உருவாக்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு படித்தாலே அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது.

 

இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

 

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 31ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலும் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலை வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவு தாருங்கள் அனைவருமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பட முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த திட்டத்தின் கீழ் பயன்பட நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் போதும் என்றும் பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்த மார்ச் 31 2025-ம் தேதி முதல் ஓராண்டு நிறைவடைந்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான வயது வரம்பு இதர பிரிவினர் என்றால் 40 வயது என்றும் பழங்குடியின பிரிவினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ஆனது ஒரு ஆண்டுக்கு 72,000 மிகாமல் இருக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் உடைய உச்சவரம்பு வயது வரம்பு இது போன்ற எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதி இல்லை என்றும் பயந்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது படித்துக் கொண்டிருக்கக் கூடியவராக இருக்கக் கூடாது என்றும் இந்த தகுதிகளை உள்ளடக்கிய பதிவு தாருங்கள் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.