Home Blog Page 327

மதுபான கடைகள் முற்றிலும் க்ளோஸ்.. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

0

Gov Holiday: நமது தமிழகத்திற்கு அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ஒன்று தான் டாஸ்மாக். கிட்டத்தட்ட பண்டிகை சமயங்களில் 600 கோடிக்கும் மேல் வருவாய் வந்துவிடும். அதேபோல வருடத்தில் தேர்தல் சமயத்தை தவிர்த்து கிட்டத்தட்ட குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, வள்ளலார் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுப்பு அளிக்கப்படும். அதேபோல இம்முறை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர். மகாவீர் ஜெயந்தியானது இம்மாதம் பத்தாம் தேதி வர உள்ளது.

அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்த ஒரு டாஸ்மாக் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் பார் எதுவும் செயல்படக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது ரீதியான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என்றும் கூறியுள்ளனர். மகாவீர் ஜெயந்தியை  “டிரை டே” வாக அனுசரிக்கப்பட்டு விடுப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு ஏதேனும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதேபோல பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் பார் வசதி உள்ளிட்டவைகளில் எது செயல்பட்டாலும் கட்டாயம் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். அந்த வகையில் வரும் ஏப்ரல் பத்தாம் தேதியில் தமிழகத்தில் எந்த ஒரு டாஸ்மாக் மற்றும் பார்களும் இயங்காது. மேற்கொண்டு அந்த நாளை டிரை டேவாக அனுசரிக்கவும்படும்.

தமிழக பாஜக மாநில தலைவர் இனி நான் இல்லை- அண்ணாமலை உறுதி!!

0

BJP Annamalai: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்க போவதில்லை என்ற தகவல் உலாவி வந்த நிலையில் இன்று அவரே அதனை உறுதி செய்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவருக்கான போட்டி நடைபெறும் அதில் நான் இல்லை, அது நடைபெற்ற முடிந்த பிறகு விரிவாக பேசுவோம். அதேபோல இவர்தான் அடுத்த தலைவர் என்று நான் யாரையும் கை காட்டவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இவர் இப்படி கூறுகையில் கட்டாயம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி என்பது தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தவுடன் “அது கிடக்குது வெங்காய பதவி” என கோபமாக சாடி பேசியிருந்தார். அப்போதிலிருந்தே இவருக்கும் பாஜகவுக்கும் இருந்த விரிசல் அம்பலமானது. தற்சமயம் இதனை அவரே உறுதிப்படுத்தி கூறியுள்ளார். மேற்கொண்டு பாஜகவில் இவருக்கு மாற்று பதவி எதுவாக இருக்கும் என்பது குறித்து தான் அடுத்த கேள்வியாக உள்ளது.

அதுமட்டுமின்றி இது குறித்த பேச்சுவார்த்தை அவர்களுக்குள் நடந்து முடிந்து விட்டது என்றும் கூறுகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம் இவருக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அரசல் புரசலான தகவல்கள் கசிந்துள்ளது. இனி வரும் நாட்களில் அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் பாஜக வேறு யாருடனெல்லாம் கூட்டணி வைக்கப் போகிறது என்ற அறிவிப்பை வெளியிடும். அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைய முட்டுக் கட்டையாக இருந்தது அண்ணாமலை தான். தற்போது அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் பட்சத்தில் மீண்டும் கூட்டணி கட்டாயம் இணைந்துவிடும்.

மகன் உயிரோடு இருப்பதாக நம்பும் பாரதிராஜா!.. அழுது புலம்பும் இயக்குனர் இமயம்!…

0

தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, காதல், கோபம், வக்கிரம், சாதி பிரச்சனை என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இவர். இவர் வந்த பின்னர்தான் கிராமத்து மக்களின் வாழ்வியலே பலருக்கும் புரிந்தது. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கி பாரதிராஜா தொடந்து பல திரைப்படங்களையும் இயக்கினார்.

கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜக்கள், முதல் மரியாதை என தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது 85 வயது ஆகிவிட்டதால் முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அந்தநிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு அவரின் மகன் மனோஜ் மாரடைப்பில் இறந்து போனார்.

manoj

தாஜ்மகால் திரைப்படம் மூலம் மனோஜை நடிகராக்கினார் பாரதிராஜா. அதன்பின் 25 படங்கள் வரை நடித்தும் மனோஜால் முன்னணி ஹீரோவாக மாற முடியவில்லை. இந்த வருத்தம் மனோஜுக்கும், பாரதிராஜாவுக்கும் பல வருடங்களாகவே இருந்தது. ஒருபக்கம், மனோஜ், பாரதிராஜா மற்றும் அவரின் மனைவி என மூவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

மகன் மனோஜின் மரணம் பாரதிராஜாவை ரொம்பவே பாதித்திருக்கிறது. சமீபத்தில் கூட வீட்டின் மாடியில் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பாரதிராஜாவுக்கு அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடிய படியே பழைய பசுமையான நினைவுகளை நியாபகப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பாரதிராஜாவின் தற்போதையை நிலை பற்றி அவரின் தம்பி ஜெயராஜ் பேசியிருக்கிறார். அண்ணன்தான் ரொம்ப மோசமான நிலையில் இருக்காரு. பிள்ளை மேல அப்படி உசுர வைத்திருந்தார். சில நேரங்களில் மனோஜ் உயிரோடு இருக்கான் எனவும் அவருக்கு தோணுது. திடீர்னு மனோஜ கூப்பிடு என சொல்லுகிறார். வரவங்க கிட்ட சொல்லி சொல்லி அழுது அழுது ஒரு மாதிரி ஆயிட்டாரு. மற்றவர்களை சுலபமாக சமாதானம் செய்துவிடலாம். ஆனால், அவரை சமாதனப்படுத்துவதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கு.
எப்ப பாத்தாலும் மனோஜோட போட்டோவை பார்த்து அழுதுக்கிட்டே இருக்காரு’ என சொல்லியிருக்கிறார்.

பறவை காய்ச்சல் அபாயம் .. கோழிக்கறி சாப்பிட்டு 2 வயது குழந்தை பலி!! பெற்றோர்களே அலர்ட்!!

0

Andhra: பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் செய்து தான் வருகிறது. கடந்த மாதம் கூட ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் விகிதம் அதிகரித்து வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் வரும் வாகனங்கள் உள்ளிட்டவைகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் ஆந்திராவை சேர்ந்த இரண்டு வயது குழந்தை பறவைக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.

பறவை காய்ச்சல் நேரடியாக கோழிகள் மற்றும் அதன் முட்டைகளிலிருந்து பரவுகிறதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. அதாவது நாம் வாங்கி செல்லும் கோழிக்கறியை சமைக்காமல் நேரடியாக சாப்பிடும் பட்சத்தில் பறவை காய்ச்சல் வைரஸானது நம்மை  தாக்கக்கூடும். அதுவே 70 வது டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைக்கும் போது பறவைக்காய்ச்சல் வைரஸானது அழிந்துவிடும். மேற்கொண்டு அதிலிருந்து எந்த ஒரு பாதிப்பும் நமக்கு ஏற்படாது.

ஆனால் அந்த இரண்டு வயது குழந்தையின் பெற்றோர் கோழி கறி வாங்கி வந்ததும், பச்சை  கரியாகவே ஒரு துண்டு கொடுத்துள்ளனர் இதன் மூலம் குழந்தைக்கு காய்ச்சல் பேதி உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குணமாகாத நிலையில் மேற்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பச்சைக் கரியை அப்படியே சமைக்காமல் அந்த குழந்தையிடம் கொடுத்தது தான் முக்கிய காரணம். அதுவே சமைத்து சாப்பிட்ட அந்த குடும்பத்தாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 அதனால் பொதுமக்கள் யாரும் கறியை சமைக்காமலோ  அல்லது அரைவேக்காட்டிலோ சாப்பிட வேண்டாம். அதேபோல அதன் முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடலாம் அதற்கு மாறாக ஆம்லெட், ஆப் பாயில், கலக்கி போன்றவற்றை சாப்பிடுவதால் இந்த தொற்றால் பாதிப்பை சந்திக்க கூடும்.

இந்த 1 முறை மட்டும் விடுங்கள்.. ஜான்ஸ் கேட்ட EPS மற்றும் OPS!! பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!

0

ADMK: ராமேஸ்வரம் பாம்பன் பலமானது கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது 545 கோடியில் மீண்டும் புதுப்பித்துள்ளனர். இதனை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம்,  முடித்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த பாலம் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி வரும் 6 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவரை சந்திக்க ஆளும் கட்சி எனத் தொடங்கி பலரும் கடிதம் கொடுத்துள்ளனர். முதலில் தன் கட்சியை சேர்ந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

இவர்களின் லிஸ்ட் அவுடானது இன்று டெல்லி வெளியிடும் எனக் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆளும் கட்சியான ஸ்டாலின் தொகுதி வரையறை குறித்து  பேசுவதற்காக சந்திக்க வேண்டுமென  கடிதம் எழுதி உள்ளார். இந்த வரிசையில் தோழமை கட்சியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மோடியை சந்திக்க வேண்டுமென  கேட்டுள்ளனர். மேற்கொண்டு தினகரன், சசிகலா ஆகியோரும் இவர்களைப் போன்று மோடியுடன் சந்திக்க எங்களுக்கும் நேரம் ஒதுக்கங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக பாஜக கூட்டணியுடன் அதிமுக இணையப் போவதால் எடப்பாடிக்கு மோடியை சந்திக்கும் அனுமதி கிடைத்துவிட்டதாம், கூடுதலாக ஓபிஎஸ் -சும் சந்திக்க வரலாம் என்ற உத்தரவு மேலிடத்திலிருந்து வந்துவிட்டது. இவர்கள் இருவரையும் சந்தித்து மீண்டும் அதிமுக கட்சி ஒருசேர பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளது. அதேபோல மோடி வரும் அந்நாளில்  கூட அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து விட்டதை அறிவிக்கலாம் எனக் கூறுகின்றனர். இதன் நடுவே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் மோடியை சந்திக்க வேண்டும் என கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்கள் பாஜகவுடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

விஜய் நடிக்கும் ஜனநாயகன் கமல் எழுதிய கதையா?!.. என்னப்பா சொல்றீங்க!….

0

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில்தான், இப்படம் பற்றி பல முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. படம் உருவான போது இப்படம் தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொன்னார்கள். அந்த படத்தில் ஸ்ரீலீலா நடித்த கதாபாத்திரத்தில்தான் மமிதா பைஜூ நடிப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

jananayagan

கமலுன் ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் உருவாகவிருந்தது. ஒரு வருடத்திற்கு மேல் இப்படத்தின் வேலைகள் நடந்து வந்தது. கமல் ஏற்கனவே எழுதிய ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற கதையைத்தான் படமாக எடுக்கவிருந்தனர். ஆனால், கமல் என்ன நினைத்தாரே ‘நீங்கள் வேறு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள். நம்முடைய படம் தாமதமாகும்’ என ஹெச்.வினோத்திடம் சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான் விஜயிடம் கதை சொல்லி ஜனநாயகன் படம் டேக் ஆப் ஆனது.

கமல் எடுக்க ஆசைப்பட்ட தலைவன் இருக்கிறான் கதையைத்தான் அவர் விஜய்க்காக விட்டு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில் அது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பான கதை. தம்பி விஜய் இதில் நடிக்கட்டும் என கமலே வினோத்திடம் சொன்னாராம். விஜய்க்காக சில மாற்றங்களை செய்துள்ளனர். மேலும், படத்தில் பல அதிரடி அரசியல் வசனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஜனநாயகன் படம் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

பெண்களுக்கு குஷியோ குஷி!! இனி 1000 இல்லை ரூ 1200.. அரசு அதிரடி அறிவிப்பு!!

0

TN Gov: தமிழக அரசு ஏழை எளிய மக்கள் என தொடங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகள் வரை அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி இனி வரும் நாட்களில் கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், திருமணமாகாத நபர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, என அனைவருக்கும் இனி ஆயிரம் ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மேற்கொண்டு இந்த வரிசையில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் பேருக்கும் ரூ 1200 வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது ரீதியாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், தற்பொழுது வழங்கி வந்த உதவித்தொகையானது 1200 ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 50,000 பேருக்கு புதிதாக வழங்கப்படும். மேற்கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். இல்லையென்றால் அதிகாரப்பூர்வ தளமான Tamil Nadu e- Governance agency என்ற இணையம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்யலாம்.

அதேபோல மகளிர் உரிமை தொகை பெறும் நபர்களுக்கு இந்த திட்டமானது செல்லுபடியாகாது. மேற்கொண்டு கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் முதியோர் உதவி தொகை திட்டமானது யாருக்கும் வழங்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அதனை சரி பார்க்கவே ஓய்வூதியம் திட்டம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். அதேபோல ஓய்வூதிய திட்டம் பெறுபவர்களின் விண்ணப்பங்களை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்த பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பெரும் பரபரப்பு .. ஆதவ் அர்ஜுனா திடீர் டெல்லி பயணம்.. கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை!!

0

TVK : தமிழக அரசியலானது சற்று பரபரப்பான சூழலில் உள்ளது, ஒவ்வொரு கட்சி சேர்ந்த நிர்வாகியும் டெல்லிக்கு சென்று வந்தாலே அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி உண்டாகிறது. குறிப்பாக கூட்டணியிலேயே இணைய மாட்டோம் என்று கூறி வந்த அதிமுகவானது தற்சமயம் பாஜகவுடன் இணக்கமாக தயாராகி விட்டது. இதற்கு பின்னணியில் பல தகவல்கள் வந்தாலும் இது ரீதியாக இம்மாதம் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் கூட்டணியானது தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் பெரிய அடியாக இருக்கும். திமுக போன்ற ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டுமென்றால் அரசியல் கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அப்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற மனக்கணக்கில் தான் விஜய் இருந்துள்ளார். ஆனால் விஜய் போட்ட கண்டிஷன்கள் எதுவும் ஒத்துப்போகாத நிலையில் எடப்பாடி மீண்டும் பாஜகவே கெதி என சென்றுள்ளார்.

இதனால் செய்வதறியாத விஜய், அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். அதேபோல தவெக வின் தேர்தல் வியூக அமைப்பாளராக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் செயல்பட உள்ளது. இதனால் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை செய்ய டெல்லிக்கு சென்று பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளார். இவர்கள் சந்திப்பிற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகமானது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் எனக் கூறுகின்றனர். அதிமுக கூட்டணி போல் பலமான கூட்டணியை உருவாக்க ஆலோசனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடிவேலு ஒரு கோடி வாங்கிட்டு நடிக்க மாட்டேங்குறாரு!. புலம்பும் பிரபல நடிகர்!…

0

Vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு பல திரைப்படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ரசிகர்கள் இவருக்கு வைகைப்புயல் என்கிற பட்டமெல்லாம் கொடுத்தார்கள். பெரும்பாலும் கிராமத்து கதைகளில் அதிகம் நடித்திருக்கிறார். ஏனெனில், மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அந்த பாஷையை அழகாக பேசி திரையில் ஸ்கோர் செய்தார்.

கவுண்டமணி ரிட்டயர்ட் ஆகிவிடவே அவரின் இடத்திற்கு சந்தானம் வந்தார். ஆனால், வடிவேலு தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 10 படங்கள் வெளியானால் அதில் 5 படங்களில் வடிவேலு இருந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர், கிரி, தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எனவே, கதாநாயகர்களை விட வடிவேலுவுக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள்.

வடிவேலுவுக்காகவே படங்களை பார்க்கும் ரசிகர்களும் அதிகரித்தார்கள். ஆனால், ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கினார் வடிவேலு. அப்படி அவர் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான படங்கள் ஓடவில்லை. அதோடு 24ம் புலிகேசி படத்தில் நடித்தபோது இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு படத்திலிருந்து விலகினார். இதனால் வடிவேல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது.

எனவே, 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு. அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்த படமும் ஓடவில்லை. தற்போது மீண்டும் பழைய மாதிரி காமெடி வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் என்கிற படத்திலும் கலக்கி இருக்கிறார்.

radhakrishnan

இந்நிலையில், எல்லாம் அவன் செயல், அழகர் மலை, புலி வேஷம், அவன் இவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஆர்.கே என அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் பேசும்போது ‘என்னுடைய படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவுக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்தேன். இப்போது வரை அந்த பணம் அவரிடம்தான் இருக்கிறது. ஆனால், என்னுடன் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. என்னுடைய படத்தில் அவர் காமெடி நடிகனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது’ என பேசியிருக்கிறார்.

வீர தீர சூரன் படத்துக்கு நான் பட்ட கஷ்டம்!.. விக்ரம் வெளியிட்ட வீடியோ!…

0

Veera dheera sooran: நடிகர் விக்ரம் நடித்து கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம்தான் வீர தீர சூரன். சேதுபதி மற்றும் சித்த போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதன்பின் பேசி தீர்க்கப்பட்டு மாலை 5 மணிக்கே தியேட்டர்களில் வெளியானது. எனவே, முதல்நாள் வசூல் பாதிக்கப்பட்டது. தற்போது படம் வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் 50 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ஒரு ராவான, வித்தியாசமான ஆக்சன் படத்தை கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டே வீர தீரன் படத்தில் அவ்வளவு உழைப்பை போட்டோம். படத்தை பார்த்த சிலர் படம் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பெரிய ஹிட் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், சில பிரச்சனைகளால் படத்தை 4 வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக்கூடாது என நீதிமன்றம் சொன்னது. இந்த படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தோன்றியது. சரி சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து படம் வெளியானது.

ஒருபடம் சொன்னபடி வெளியாகவில்லை எனில் அவ்வளவுதான். அதுவும் ரிலீஸ் தேதி அன்று முதல் 2 காட்சிகள் வெளியாகவில்லை. எனவே, என்ன ஆகுமோ என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகிறார்கள். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்தோம் என்றெல்லாம் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. படம் பார்க்காதவர்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)