Home Blog Page 326

இறங்கி அடிக்கும் ஏகே!.. நிஜமாவே இது வேற லெவல்!.. குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ!…

0

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் குட் பேட் அக்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், இப்போது குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன் வந்த டீசரை பார்த்தவர்களுக்கு இது குடும்பத்துடன் போய் பார்க்கும்படியான படமாக இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை மனதில் வைத்தே டீசர் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வரும் டிரெய்லரில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்கிற உணர்வை ஏற்படுத்தும் செண்டிமெண்ட் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், இந்த டிரெய்லரிலும் ஆக்சன் காட்சிகளே அதிகம் இடம் பெற்றிருக்கிறது. மேலும், தீனா, பில்லா, மங்காத்தா என எல்லா லுக்கிலும் வருகிறார் அஜித்குமார். மொத்தத்தில் டிரெய்லர் செம மாஸாக அமைந்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் நிலையை ஜாஹிர் கானிடம் உளறிய ரோஹித்.. வெளியான ஆடியோவால் உண்டான சர்ச்சை!!

0

IPL: ஐபிஎல் இன் 16 வது லீக் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோத உள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் ஒரு முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் மும்பை இந்தியன்ஸ் யின் முன்னாள் பயிற்சியாளரான ஜாகிர் கானுடன் ரோகித் சர்மா பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்பொழுது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

அப்படி இருக்கையில் இவர்கள் பேசிய வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் ரோகித் ஷர்மாவின் ஆடியோ சரியாக கேட்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அதன் ஆடியோவின் நுணுக்கத்தை அறிந்து அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை மாற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அதில், நான் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறேன், இப்போது செய்ய வேண்டியது என்பது எதுவும் கிடையாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை குறித்து பகிர்ந்ததாக கூறுகின்றனர். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ள நிலையில் நட்சத்திர வீரராக இருக்கும் ரோகித் சர்மா தனது ஆட்ட நிலையில் இருந்து சற்று விலகியே உள்ளார். இதற்கு முக்கிய காரணம் கேப்டன் பதவி இல்லாதது என கூறுகின்றனர்.

மேற்கொண்டு இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அதனை நீக்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா சரியான ஆட்டத்தை களம் காணாமல் விட்டால் கட்டாயம் அணியிலிருந்து நீக்கம் செய்யக்கூடும் எனக் கூறுகின்றனர்.

17 வயதில் சிந்து சமவெளி.. அந்த படத்தை என் அப்பவே பார்த்தார்!! அமலாபால் ஓபன் டாக்!!

0

Cinema: மைனா படத்தின் மூலம் அமலா பால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானாலும், அதற்கு முன் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் மகன் வெளியே சென்று படிக்கவே மாமனாருடன் தொடர்பு வைத்துக்கொள்வது போலவும் அவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற திரைக்கதை இருந்திருக்கும். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு பல விதங்களில் இன்னல்கள் ஏற்பட்டுள்ளது என தற்சமயம் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் சிந்து சமவெளி படம் நடித்த பொழுது எனக்கு 17 வயது மட்டும் தான். அந்த படத்தை எனது அப்பா பார்த்து மிகவும் வருத்தப்பட்டார். இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நடித்து கொடுத்தேன். அவ்வாறு நடித்ததால் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய அளவில் ஹிட்டான மைனா பட புரோமோஷனுக்கு கூட இதனால் என்னால் போக முடியவில்லை. அச்சமயம் பெரிய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எனக்கு போன் செய்து ஆதரவு அளித்தார்கள்.

மேற்கொண்டு அந்த சிந்து சமவெளி படத்தினால் சென்னைக்கு கூட வரமுடியாத சூழல் உண்டானது. அதனை முறியடித்து பல வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நற்பெயர் பெற்றேன். இப்பொழுது தான் புரிந்து கொண்டேன் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே என்று, இதனால் ஒரு நடிகைக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டும் என்பது எனக்கு இந்த சம்பவத்தின் மூலம் புரிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

லக்னோ VS மும்பை இந்தியன்ஸ்.. ரிஷப் பண்ட்-க்கு வழங்கிய லாஸ்ட் ஜான்ஸ்!! கேப்டன் பதவிக்கு வந்த கெடு!!

0

IPL: ஐபிஎல் கிரிக்கெட்டின் 18வது சீசன் நடைபெற்று வருகிறது. அதில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோத உள்ளனர். முன்னத ஐபிஎல் தொடர்களில் கிட்டத்தட்ட ஆறு முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், ஒரு முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இம்முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு களம் காண முடியவில்லை. முதலில் போட்டியிட்ட டெல்லி, இரண்டாவதாக பஞ்சாப் உள்ளிட்டவர்களிடம் தோல்வி சந்தித்தது.

ஹைதராபாத்தை மட்டும் எதிர்த்து போராடி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. ஆனால் பஞ்சாப் பிடம் சொந்த மண்ணிலேயே லக்னோ தோற்றதால் பலரும் எதிர் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக கேப்டன் ரிஷப் பண்ட் சரியில்லை, ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டி மிகப்பெரிய தோல்வி எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தோல்வி அடைந்த அடுத்த கனமே விளையாட்டு மைதானத்தில் லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளருக்கும் ரிஷப் பண்ட்-டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இது ரீதியான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் தீயாக ஷேர் ஆகிறது. இதை வைத்துதான் கட்டாயம் ரிஷப் பண்ட் இனி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக முடியாது எனக் கூறி வருகின்றனர். அதேபோல கடந்த இரண்டு போட்டிகளிலும் 17 ரங்கலிலேயே வெளியேறி உள்ளார். மேற்கொண்டு இவர் தலைமை பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் தனது திறமையை வெளிக் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இன்று நடைபெற போகும் மும்பை இந்தியன்ஸ் உடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் தோல்வி அடைந்தால் கட்டாயம் ரிஷப் பண்ட் பல விமர்சனங்களுக்கு ஆளாக கூடுவார் எனக் கூறுகின்றனர்.

2025ல் இதுவரை வெளியான படங்களின் வசூல் நிலவரம்!. முதலிடத்தில் டிராகன்!..

0

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களிலும் சினிமா எடுப்பது என்பது முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. இந்த தொழிலில் கோடிகளை அள்ளியவர்களும் இருக்கிறார்கள். கோடிகளை விட்டு தெருவில் நின்றவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் சினிமா என்பதும் சூதாட்டம்தான்.

கோலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அவை எல்லாமே வெற்றி பெறுவது இல்லை. 2024ம் வருடம் வருடம் தமிழ் சினிமாவில் உருவான படங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிக்கும் மேல். ஆனால், அதில் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது.

அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். குறிப்பாக மலையாளத்தில் சிறப்பான, ரசிக்க வைக்கும் திரைப்படங்களை இயக்குகிறார்கள். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. ஆந்திராவை பொறுத்தவரை அங்குள்ள ரசிகர்கள் சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. படம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கொடுப்பார்கள்.

ஒரு படத்தில் நஷ்டம் என்றால் அடுத்த படத்தில் லாபம் எடுப்போம் என்கிற நம்பிக்கையில்தான் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களை எடுத்து வருகிறார்கள். எப்படியாவது லாபத்தை எடுத்துவிட வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து படங்களை தயாரிப்பாளர் எடுத்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், 2026ல் வெளியான 72 படங்களில் மதகஜராஜா, டிராகன், குடும்பஸ்தன் போன்ற சில படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்திருக்கிறது. வசூலை பொறுத்தவரை 152 கோடி வசூல் செய்து டிராகன் படம் முதலிடத்தில் இருக்கிறது. விடாமுயற்சி படம் 138 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்திலும், மதகஜராஜா 63 கோடி வசூல் செய்து 3ம் இடத்திலும் இருக்கிறது.

அமெரிக்க அமைச்சரவையிலிருந்து எலான் மஸ்க் அதிரடி நீக்கம்.. ட்ரம்ப் எடுக்கப்போகும் திடீர் முடிவு!!

0

Donald Trump: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பொருளாதார ரீதியாக பல நாடுகளுக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு வலது சாரியை எதிர்த்து பல பயன் தரும் அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறார். அந்த வகையில், எங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்கும் மதிப்பு எந்த அளவில் வரி வசூல் செய்கிறீர்களோ அதே போல நாங்களும் செய்வோம் என்ற எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அந்த வரிசை பட்டியலில் இந்தியாவும் இருந்தது.

தற்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான விதியை 26 சதவீதமாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல பல்வேறு புதிய அறிவிப்புக்களும் அவ்வ போது வெளியாகிறது. இப்படி இருக்கையில் ட்ரம் தலைமையில் உள்ள நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் வெளியேறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

எலான் மஸ்க் அரசின் செயல் திறன் துறைக்கு நிர்வாகியாக ட்ரம்ப் நியமனம் செய்திருந்தார். இவர் பதவி வகித்ததும் அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் லாபமடைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இவர் இந்த அரசாங்க வேலையை பார்த்து வந்தால் கட்டாயம் இவர் தொழில் சார்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால் அமைச்சரவையிலிருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியாக தற்பொழுது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் ட்ரம்ப் இது ரீதியாக தனது இணைக்கமாக உள்ளவர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் எலான் மஸ்க் இல்லையென்றால் யார் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றும் ஆராய்ந்து வருகிறாராம்.

தாவெக சார்பில் போராட்டம்!. ஆனால், விஜய் வீட்டில் ஓய்வு!.. இது சரியா வருமா?….

0

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின் அந்த படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம் எனவும் சொல்லப்பட்டது. இந்த படத்தை முடித்தபின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் பேசினார்கள்.

இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று அவரின் நிர்வாகிகள் முன்பு திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள். விஜய் வீட்டிலிருந்தே அரசியல் செய்து வருகிறார். பனையூர் அரசியல்வாதி.. திமுகவை வாரிசு அரசியல் என விமர்சிக்கும் விஜய் சினிமா வாரிசு இல்லையா?.. அவரின் அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவுக்கு வந்தவர்தானே விஜய் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

bussy anand
bussy anand

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

தவெகெ சார்பில் பனையூரில் நடந்த போராட்டட்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார். ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு இன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதேநேரம், ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்தவுடன் விஜய் ஊர் உராக சுற்றுப்பயணம் செய்து விஜய் மக்களை சந்திப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

என்னையும் என் கணவரையும் வாழவே விட மாற்றங்க.. பகீர் புகார்!! கோர்ட் படியேறிய ஹன்சிகா!!

0

Cinema: தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து துறைகளிலும் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் சோஹையிலுடன் திருமணம் நடைபெற்றது. சினிமா திரைப்பட வாய்ப்புகள் குறையவே இவர் திருமணம் செய்து கொண்டார். அதிலும் தனது தோழியின் கணவரை தான் இவர் மனம் முடித்தார்.

பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், பல வெப் சீரீஸ் களிலும் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது அவரது தம்பியின் மனைவி மும்பையில் உள்ள அம்பாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது கணவருடன் வாழ விடாமல் ஹன்சிகா மற்றும் அவரது அம்மா என்னை துன்புறுத்துவதாக அவரது தம்பி மனைவி நான்சி ஜேம்ஸ் கூறியுள்ளார். இது ரீதியான வழக்கானது நீதிமன்றத்தில் இன்று அமர்வுக்கு வந்தது.

அதில் ஹன்சிகா சார்பாக, முன்னதாகவே எனது தம்பிக்கும் தம்பி மனைவியான நான்சி ஜேம்ஸுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. மேற்கொண்டு எப்படி நாங்கள் துன்புறுத்த முடியும்??  என்று கேள்வி கேட்டு தம்பி மனைவி தங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது ரீதியாக விசாரணை செய்த நீதிபதிகள் இது குறித்து முறையான பதிலளிக்க வேண்டும் என்று மும்பை அம்பாலி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அது மட்டுமின்றி ஹன்சிகாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடும் என்பதால் கூடிய விரைவிலேயே இந்த வழக்கை முடிக்க பார்ப்பார் என்றும் கூறுகின்றனர்.

2026 யில் பாஜக நாம் தமிழர் கூட்டணி கன்பார்ம்.. NEET கண்டன பொதுக் கூட்டத்திற்கு NO சொன்ன சீமான்!!

0

NTK BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனை எதிர்க்கும் வகையில் தமிழக அரசானது அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்தி இதற்கு கண்டனம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் சீமான் கலந்து கொள்ளவில்லை. அதேபோல சமீபத்தில் கூட சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்படி கலந்து கொண்டு வெளியே சென்ற சீமானின் கையை அண்ணாமலை இறுக்கமாக பிடித்து, அண்ணா விட்றாதீங்க எனக் கூறியது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் இதில் கட்டாயம் கலந்துகொள்ள மாட்டேன் என சீமான் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். இது குறித்த அறிவிப்பை அவர் மதுரையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பாஜக விற்கு எதிராக கண்டனங்கள் எழுப்பும் போதெல்லாம் சீமான் பின்வாங்கவே செய்கிறார். இவர்கள் மறைமுக கூட்டணியில் உள்ளனர் என்றும் பேச்சுவார்த்தை அடிப்படுகிறது. அதனால்தான் பாஜக ரீதியாக எழுப்பும் எந்த ஒரு கண்டன கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் பட்சத்தில் இவர்கள் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட்டு கேட்கும் முறையே எங்களுக்கும் வேண்டாம், அதேபோல கூட்டணியில் எலியாய் இருப்பதை விட சிங்கமாய் கர்ஜித்து தனித்து செத்து போவது மேல். ஆனால் நான் சிங்கமும் இல்லை நான் புலி, சுதந்திரமாக வேட்டையாடி நான் நினைத்த காரியத்தை சாதிப்பேன் என்று இவர் கூறியுள்ளார்.

பதில் சொல்ல தெரியாமல் ட்ரோலில் சிக்கிய புஸ்ஸி ஆனந்த்!.. வீடியோ செம வைரல்!…

0

Tvk Bussy Anand: தவெக முதல் மாநாடு, தவெக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாகவே அரசியல் பேசினார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், விஜய் இன்னும் களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.

ஒருபக்கம், விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற தொகுதியில் வெற்றி பெற்றதால் அவருக்கு பெயர். அதன்பின் விஜயின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார். இப்போது விஜய்க்கு ஆல் இன் ஆலாக மாறிவிட்டார். விஜயை யார் சந்திக்க வேண்டும்? யாருக்கு அனுமதி என்பதை கூட அவர்தான் முடிவு செய்கிறார். அதேநேரம், செய்தியாளர்கள் இவரிடம் எதாவது கேட்டால் ‘எல்லாம் தலைவர் சொல்லுவார்’ என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்.

இந்நிலையில், சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், சென்னையில் நடந்த போராட்டத்தில் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார். அப்போது ‘இந்த மசோதாவில் நீங்கள் எதிர்க்கும் விஷயம் என்ன?. ஒன்று சொல்லுங்கள்’ என கேட்க புஸ்ஸி ஆனந்தோ ‘இது முஸ்லீம்களுக்கு எதிரான சட்டம். அவர்களின் சொத்துக்களை பாஜக அரசு பிடுங்க நினைக்கிறது’ என சமாளித்தார்.

அப்போதும் விடாத ஒரு பத்திரிக்கையாளர் ‘ஒரு நல்ல காரணம் சொல்லுங்க’ என கேட்க அதற்கும் ‘அவங்க எல்லாத்தையும் வேலிட் காரணத்தோடதான் செய்யுறாங்களா?.. இஸ்லாமியர்களுக்கு தலைவரும், தவெகவும் எப்போதும் துணை நிற்கும்’ என பேசி அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதைத்தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் வீடியோ மிம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.