ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog Page 5

சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு எகிறும் வாய்ப்புகள்.. அவங்கள வெச்சி தான் வெற்றி உறுதி செய்யப்படும்!!

0

DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி விட வேண்டுமென்று, திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அறிந்த திமுக அவர்களுக்கு இலவச பஸ், நியாய விலை கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், புதுமை பெண் திட்டம்  போன்ற சலுகைகளை அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது.

இதெல்லாம் போதாது என்று நினைத்த திமுக தலைமை, தற்போது 234 தொகுதிகளிலும் பாதியளவு பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்தந்த தொகுதியில் யார் மக்கள் செல்வாக்கு மிக்கவர், அனைவராலும் அறியப்பட்டவர் என்ற தகவலை திமுக சேகரித்து வருகிறது. இதன் மூலம் அவர்கள் அந்த தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். இந்த வியூகத்தை விஜய் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் கரூர் சம்பவம் காரணமாக விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் முடங்கி இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திமுக இதற்காக ஒரு குழுவை அமைத்து சரியாக செயல்பட்டு வருவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் அதிமுக இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். திமுகவின் வியூகம் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் இணையும் தேசிய கட்சி.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

0

ADMK TVK CONGRESS: வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் இணைந்து அடுத்ததாக வேறு எந்த கட்சியை கூட்டணி சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர். இதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜந் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றோர் இபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்ப்பது தான் இவர்களின் ஒரே குறிக்கோள். அதற்கு காரணம் அதிமுக முன்பு போல இல்லாமல் வலிமையற்று உள்ளது. பாஜகவாலும் அதிமுகவை மட்டும் வைத்து கொண்டு தமிழகத்தில் காலூன்ற முடியாது. மேலும், இவர்கள் மூவரின் ஒரே எதிர் திமுக தான். இதனால் பாஜக-அதிமுக இந்த திட்டத்தை தீட்டியது. ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணியில் சேர யோசிக்கிறார்.

இதனை தொடர்ந்து இபிஎஸ்யிடம் இரண்டு முறை போனில் பேசிய விஜய் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க கூறியதாகவும், இந்த கூட்டணியில் இபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும், தவெக, காங்கிரஸை விட அதிமுகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தால் தவெக அதிமுக கூட்டணியில் சேராது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு அதிமுக தரப்பு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அன்புமணியிடம் டிலிங் போட்ட ராமதாஸ்.. இது கூட நல்ல இருக்கே.. ரிசல்ட் தேர்தலில் தான் தெரியுமாம்!!

0

PMK: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே 8 மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கிய நிலையில், அது இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ராமதாஸின் எந்த முடிவையும் ஏற்காத அன்புமணியை ராமதாஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக கூறிய ராமதாஸ் தரப்பு, அன்புமணி மீது கட்சியின் முகவரியை  மாற்றியதாகவும்  புகார் அளித்திருந்தது.

இதனை தொடர்ந்து பாமக இரண்டு பிரிவாக பிரிந்திருந்தது. பாமக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வந்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ்  படிக்காத மாடு  பையன் கூட இப்படி  பேச மாட்டான் என்று கடுமையாக தனது வாதத்தை முன் வைத்திருந்தார். இதன் பிறகு பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ராமதாஸ் சமீப காலமாக திமுகவிற்கு சாதகமாக பேசி வருவதால் அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றும், அன்புமணி அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த கூட்டணி கிட்ட தட்ட உறுதியான சமயத்தில், ராமதாஸ் அன்புமணியிடம் ஒரு டிலிங்கை செய்திருக்கிறாராம். அது என்னவென்றால், யார் அமைத்திருக்கும் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில்  வெற்றி பெறுகிறதோ அவருக்கு தான் பாமக சொந்தம் என்பதாகும். அதாவது அதிமுக வென்றால் அன்புமணிக்கு கட்சி சொந்தம், அதுவே திமுக வென்றால் ராமதாசுக்கு கட்சி சொந்தம். தோற்றவர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலிருக்கும் தானாக விலக வேண்டுமென்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அன்புமணி என்ன பதில் கூறுவார் என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க  வேண்டும். 

திமுக தலைமை சரியாக செயலாற்றுகிறது.. அதிமுக-தவெக கூட்டணி அவசியம்.. சர்ச்சையை ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

0

ADMK DMK TVK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது, அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாகியுள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக, தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்ற வலியுறுத்தலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது இதன் முதற்கட்டமாக பேசப்பட்டது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், தமிழக வெற்றிக்  கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுப்பவர் தான் நல்ல தலைவர் என்று கூறிய அவர், பவன் கல்யாண் எடுத்த அரசியல் முடிவை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை சரியாக செயல்படுவதாகவும், ஆனால் வைகோ சரியான முடிவு எடுக்காததால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்தார். அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் சேர வேண்டும் என்று நேரடியாக அழைப்பை விடுத்தார். இது அதிமுக தன் அரசியல் பலம் குறைந்ததால், தமிழக வெற்றிக்  கழகத்தை நம்பி தேர்தலில் களம் காண முயற்சிக்கிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கூட்டணிக்கான எடப்பாடியின் முனைப்பே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

திராவிட சிந்தனையில் சலிப்பு.. மாற்றம் தேவை.. விஜய்யின் கோஷம் மக்களின் மனதில் ஒலிக்கிறது!!

0

TVK: தமிழக அரசியலில் சமீபகாலமாக உருவாகி வரும் புதிய சக்தி நடிகர் விஜய்யின் தவெக. இவரை சுற்றி தான் அரசியல் களமே சுழன்று கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவருக்கான ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது. கரூர் சம்பவம் நடந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை. இதுவரை திமுக, அதிமுக என இரு முனைகளில் சிக்கியிருந்த திராவிட வாக்காளர்களில் ஒரு பகுதி, இப்போது மாற்றத்தை விரும்புவர்களாக மாறியுள்ளனர்.

அவர்கள் விஜய் பக்கம் திரும்பி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பிரிவினர், திராவிட சித்தாந்தத்தை நேரடியாக எதிர்க்காதவர்களாக இருந்தாலும், தற்போது அதன் செயல்முறையிலும், அரசியல் நடைமுறையிலும் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு விஜய் ஒரு மாற்று சக்தியாக மாறி வருகிறார். விஜய் தனது உரைகளில் மாற்றம் தேவை என்ற கோஷத்தை முன்னிறுத்தி, பழைய அரசியல் கலாச்சாரத்திலிருந்து விலகிய ஒரு புதிய அரசியலை வலியுறுத்தி வருகிறார்.

இதுவே மாற்றத்தை நாடும் திராவிட வட்டாரத்தினரிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. விஜய்யின் இந்த வருகை திமுகவிற்கு மட்டுமல்லாது அதிமுகவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் இது ஒரு நீண்ட பயணம் என்றும், திராவிட சிந்தனையைப் பின்பற்றிய வாக்காளர்களை முற்றிலும் மாற்றுவது எளிதல்ல என்றும் கூறுகின்றனர்.  இருப்பினும், விஜய்யின் அரசியல் எழுச்சி தமிழகத்தின் அடுத்த கட்ட அரசியலை நிர்ணயிக்கக் கூடிய முக்கியக் காரணியாக மாறும் என கூறப்படுகிறது. 

விஜய் தனியே சென்றால் அது அரசியல் தற்கொலை.. கூட்டணி குறித்து தன்னுரிமை கழகத் தலைவர் எச்சரிக்கை!!

0

TTK TVK: தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றி பல முக்கியமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் இணையும் வாய்ப்பு, அதுவும் பாஜகவின்றி உருவாகும் புதிய கூட்டணி குறித்து அவர் வலுவான ஆதரவை தெரிவித்துள்ளார். கரூர் துயரச் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது சரியான முடிவாகும்.

மத்திய அரசு சிபிஐ மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்பு இருந்தாலும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் நடப்பதால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்ற நம்பிக்கை அவருக்குண்டு. அதே நேரத்தில், பாஜக மற்றும் விஜய் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அமித்ஷா இரண்டு முறை விஜய்யுடன் தொலைபேசியில் பேசியதாகவும், விஜய்யை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

ஆனால், விஜய் தற்போது பேசாமல் தன்னை விலக்கி வைத்திருப்பதாகவும், அதேவேளை அவர் அதிமுகவோடு இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். விஜய், பாஜகவுடன் இணைந்தால் அவரது பிம்பம் உடைந்து விடும். ஆனால், பாஜகவை கடந்து எடப்பாடியுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அது தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். அவரது கணிப்புப்படி, பாஜக கூட்டணியில் இருந்தால் அதிமுக சுமார் 5 சதவீத வாக்குகளை இழக்கும்.

ஆனால் பாஜகவை கழித்துவிட்டால், 12 சதவீத எதிர்ப்பு வாக்குகள் அவர்களிடம் திரும்பும். அந்த வாக்குகள் தான் வெற்றிக்கு காரணமாகும் என்றும், எடப்பாடியும் விஜய்யும் சேர்ந்து சென்றால் உறுதியான வெற்றி என்று அவர் வலியுறுத்தினார். அத்துடன், விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது அவருக்கு அரசியல் தற்கொலை எனவும், ஸ்டாலின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால், தற்காலிக நன்மை, தீமைகளைக் குறித்து யோசிக்காமல், வலிமையான கூட்டணியை உருவாக்க வேண்டும், என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

விஜய் செய்த தவறு இது தான்.. கரூர் விபத்து இவர்களால் நிகழ்ந்தது.. உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. ஆறாவதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்திற்கு காரணம் தவெகவின் அறியாமை என்றும், திமுகவின் சதி என்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாநில அரசு கையிலிருந்து சிபிஐ கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பை  அளித்து வந்தனர். கரூர் சம்பவத்தின் மூலம் விஜய்க்கு மக்களின் ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில் அவருக்கான ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது.

அதற்கு பதிலாக ஆளுங்கட்சி மீதும், தவெகவின் இரண்டாம் கட்ட தொண்டர்கள் மீதும் அவர்களின் கோம் திரும்பியது. விஜய் மீது சில  தவறுகள்  இருந்தாலும், அரசு மீது மக்கள் வெறுப்பை காட்டுகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்திருந்த நிலையில், தற்போது மூத்த பத்திரிகையாளர் பிஸ்மியும் அதனையே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், கரூர் விபத்து தொடர்பாக மக்கள் மனதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

குடும்பத்தினரை பறி கொடுத்தவர்களே விஜய் மீது எந்த தவறையும் கூறவில்லை. நெருக்கடியான இடத்தை ஒதுக்கி விஜய்யை சிக்கலில் மாட்டி விடுகிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. இதனால் பாமர மக்களுக்கு விஜய் மீது கரிசனம் தான் ஏற்படும் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கரூர் வந்தடைவதற்கு 7 மணி நேரம் தாமதமாகும் என்று விஜய் முன் கூட்டியே அறிந்திருப்பார்.

அந்த தகவலை அவர் அப்போதே இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் இது தான் அவர் செய்த பெரிய தவறு என்றும் பிஸ்மி சுட்டி காட்டினார். மேலும் அனுபவமில்லாத இரண்டாம்  கட்ட தலைவர்களால் தான் இந்த தவறு நடந்திருக்கிறது. இதற்கு முழு பொறுப்பையும் விஜய் தான் ஏற்க வேண்டுமென்று சொல்வது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.

ஆட்சியை தீர்மானிக்கும் சிறிய கட்சிகள்.. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காலம் மாறி விட்டது.. வெளியான கருத்து கணிப்பு!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருவது திமுகவும், அதிமுகவும் தான். ஒரு காலத்தில், சிறிய கட்சிகளின் துணை இல்லாமலேயே இவ்விரண்டு கட்சிகளும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கும் நிலையாக இருந்தது. ஆனால் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலை சிறந்த அரசியல் தலைவர்கள் மறைந்த பிறகு, தமிழக அரசியலே திக்குமுக்காடி கொண்டிருக்கிறது.

புதிதாக உதயமாகியுள்ள கட்சிகளை கண்டு அஞ்சுவதும், எதிர்கட்சிகள் அதனுடன் கூட்டணி அமைக்க போராடுவதும் நடந்த வண்ணம் உள்ளது. முன்பு இருந்தது போல தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காலம் மாறிவிட்டது என்று கருத்து கணிப்பு கூறுகிறது. தேமுதிக, பாமக போன்ற மூன்றாம் நிலை கட்சிகள் மட்டுமல்லாது சிறிய கட்சிகளாக அறியப்பட்டு வரும் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனால் தான் ஆளுங்கட்சியான திமுக, விசிக, மதிமுக போன்ற கட்சிகளை கூட்டணி தந்திரத்தை பயன்படுத்தி தன்னுடனே வைத்துள்ளது. மேலும் அதிமுகவும், சிறிய கட்சிகளையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க போராடி வருகிறது. ஆக மொத்தம் சிறிய கட்சிகளோ அல்லது கூட்டணியோ இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த திராவிட கட்சிகள் அதற்கான பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. 

திமுகவை விட தவெகவை அதிகம் தாக்கும் நாதக .. தவெகவிற்கும் நாதவிற்கும் தான் போட்டி.. களமிறங்கிய சீமான்!! 

0

NTK TVK: சட்டமன்றத் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திமுக, அதிமுக தான். ஆனால் தற்போது அவற்றை மிஞ்சும் அளவிற்கு அசுர வேகத்தை எட்டியுள்ளது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி. கட்சி தொடங்கியது முதலே திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் செயலை பார்த்தால் நாதகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்பது போல உள்ளது.

நாம்  தமிழர் கட்சி தொடக்கத்திலிருந்தே தனித்து நின்று தான் தேர்தலை எதிர்கொள்கிறது. அதன் பிரதான எதிரி திமுக தான் என்றும் கூறிவருகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே நாதகவின் செயல்பாடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து நகர்வும் விஜய்யை நோக்கியே உள்ளது. திமுக, அதிமுகவிற்கு பிறகு மூன்றாவது சக்தியாக உருவெடுத்து வரும் நாதகவிற்கு விஜய்யின் வருகை  மிக பெரிய சவாலாக உள்ளது. விஜய் தனது அரசியல் எதிரி திமுக தான் என்று கூறியுள்ளார்.

ஆனால் திமுகவை விட நாதக தான் விஜய் மீது அதிக கவனம் செலுத்துவதாகவும், விஜயின் அடுத்த நகர்வுகளை உற்று நோக்குவதாகவும் தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சமூக ஊடங்ககளில் கூட நாதகவை சேர்ந்தவர்கள் விஜய் மீதான விமர்சனத்தை அதிகம் முன்வைத்து வருகின்றனர்.  ஏற்கனவே விஜய் மீது திமுகவிற்கு பயம் வந்து விட்டதாக சிலர் கூறி வர, நாதகவும் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது விஜய்யின் வளர்ச்சியை மேன்மேலும், தீவிரப்படுத்தியுள்ளது. 

மாபெரும் கட்சியில் இணையும் ராமதாஸ்.. அன்புமணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய முடிவு.. கட்சி யாருக்கு.. தீர்மானிக்க போகும் சட்டமன்ற தேர்தல்!!

0

PMK DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற  தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கபட்டு வரும் நிலையில், பாமக தன்னுடைய தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கடந்த 8 மாதங்களாகவே தந்தைக்கும், மகனுக்கும் இடையில் தலைமை போட்டி நிலவி வருகிறது. இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.

ஆனால் தேர்தல் ஆணையமோ கட்சியின் தலைவர் மற்றும் தலைவர் பதவிக்கு உறுதியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமுற்ற ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக சவால் விட்டார். இதனை தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, ராமதாசை காண பல்வேறு தலைவர்களும் வந்து சென்றனர். அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் சென்றார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருத்துவர் ஐயாவை சந்திப்பதற்கு முன் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று கூறினார். இது திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கான தொடக்க புள்ளியாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இபிஎஸ் ராமதாஸை சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினார். இது குறித்து இபிஎஸ்யிடம் கேட்ட  போது அதை பற்றியெல்லாம் வெளிப்படையாகக் கூற முடியாது என்று கூறி முடித்தார். அதிமுக அன்புமணியிடம் கூட்டணிக்கு சம்மதம் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில்  ராமதாஸின் நிலைப்பாடு என்ன வென்று தெரியாமல் இருந்தது.

இதன் காரணமாக பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் ராமதாஸ், திமுக கூட்டணியுடன் இணைய சில நிபந்தனைகளுடன் ஒப்பு கொண்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ராமதாஸின் இந்த முடிவு அன்புமணிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.  இவர்கள் இருவரின் கூட்டணி முடிவை பொறுத்து தான் பாமக யாருக்கு சொந்தம் என்பது முடிவாகும் என்றும் சொல்லப்படுகிறது.