பெரும்பாலும் ஒரு ஆண் வெளியில் கிளம்பி செல்வதாக இருந்தால் அதிகபட்சம் 10 நிமிடங்களில் கிளம்பி சென்று விடுவார்கள். ஆனால் பெண்களோ, லிப்ஸ்டிக், ஐலைநனர், ஹேர் ஸ்ப்ரே என அழகு சாதன பொருட்களை கொண்டு குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கழித்து தான் கிளம்புவார்கள்.
ஆனால் இதெல்லாம் கொரோனா ஊரடங்கு அறிவிப்பதற்கு முன். தற்போது நிலைமை தலைகீழாக்கியுள்ளது. பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே முடங்கி பெண்கள் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கூட வீட்டிலிருந்து வேலை செய்து வருவதால் அவ்வளவாக வெளியில் தலைகாட்டுவதில்லை. அப்படி வெளியில் செல்ல நேரிட்டாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டியிருக்கிறது.
இதனால் உலக அளவில் லிப்ஸ்டிக், ஐலைனர் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களின் விற்பனை சரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
அதனால் 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து இந்த தேர்வுகளை மீண்டும் மே மாதம் நடத்த CBSE திட்டமிட்டிருந்தது. ஆனால், மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் நடத்துவது தொடர்பாகCBSE கடந்த தேதியை 15ம் தேதி சிப்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் CBSE தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை CBSE எச்சரித்துள்ளது. CBSE அதிகாரி என்ற போர்வையில் சிலர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பாடங்களில் கூடுதல் மதிப்பெண் பெற்று தர உதவி செய்வதாக அணுகுவதாக தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும், அப்படிபட்ட மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் CBSE தெரிவித்துள்ளது.
அதுபோன்று யாரேனும் அணுகினால் அவர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் CBSE வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா நோய்ப் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 4ம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 10ம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
கொரோனா உச்சம் பெற்றுள்ள இந்நிலையில் இந்த தேர்வு அவசியமா என்ற கேள்வியை பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எழுப்பி வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை மற்றும் தேர்வுத் துறை பொதுத் தேர்வை நடத்த மும்முரமாக வேலை செய்து வருகிறது.
இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் விதிகளை அரசு வெளியிட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம் வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும். மாணவர் விடுதிகளை வரும் 11 ம் தேதி முதல் தேர்வுநாள் முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.
சீனாவில் ‘பேட் உமன்’ என அழைக்கப்படுபவர் ஷி ஜெங்லி. இவர் வவ்வால்களிலிருந்து பரவும் நோய்த் தொற்று குறித்து நிறைய ஆய்வுகள் செய்துள்ளதால் இவரை இவ்வாறு சீன மக்கள் அழைக்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் துவங்கிய போது இவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இதனால் இவர் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் CGTN எனும் அரசு தொலைக்காட்சியில் தோன்றியவர், கொரோனாவை விட கொடிய நோய்த் தொற்றுகள் வரும் காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நேர்காணலில் கூறிய முக்கிய தகவல்களை இங்கு தொகுத்தளித்துள்ளோம்.
“நாங்கள் கண்டுபிடித்த கொரோனா நோய்த் தொற்றை விட இன்னும் அதிக ஆபத்தான நோய்த் தொற்றுகள் உள்ளன என்றும் எச்சரித்தார். புதிய தொற்று நோய்களிலிருந்து மனிதர்களைப்பாதுகாக்க விரும்பினால், காட்டு விலங்குகளால் பரப்பப்படும் பல நோய்த் தொற்றுகளைப் பற்றி அறிந்துகொண்டு ஆரம்ப எச்சரிக்கைகளை கொடுக்க நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும். தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா நோய் தொற்று என்பது வெறும் ஒரு சிறிய துளி மட்டுமே, இதை விட சக்தி வாய்ந்த பல நோய் தொற்றுகள் நம்மை வருங்காலத்தில் தாக்க வாய்ப்புள்ளது.
Shi Zhengli
இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். நோய்த் தொற்று பரவலை அறிவியல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது.நோய்த் தொற்றுகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும், மேலும் ஒத்துழைக்க வேண்டும்.
தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவல் போன்று அடுத்த தொற்று நோய் பரவலால் மனித இனம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நாம் விரும்பினால், இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்பப்படும் இந்த அறியப்படாத நோய்த் தொற்றுகளைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும். இதுபோன்ற விலங்குகள் தொடர்பில் நாம் ஆய்வு செய்ய தவறினால், கொரோனா நோய்த் தொற்று பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது.
இருப்பினும், இயற்கையில் பல வகையான வவ்வால்கள் மற்றும் பிற வன விலங்குகள் இருப்பதால் , அவை பல வகை நோய்த் தொற்றுகள் பரப்ப வாய்ப்புள்ளது என்பதால், எங்கள் ஆராய்ச்சியைத் தொடரும் என்று ஷி ஜெங்லி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 5 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்குத் தற்காலிகமாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலா் தீ ரஜ்குமாா் அவர்கள் வெளியிட்ட விவரம் என்னவெனில்
பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 5 பேர்க்கு தற்காலிக பணி உயர்வு அடிப்படையில் பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணவேணி அவர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரியாகவும், சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.மதன்குமாா் அவர்களுக்கு ராணிப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரியாகவும், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி அவர்களுக்கு தேனி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பதவி உயா்வில் தற்காலிகமாக பணியிடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது
அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி அவர்களுக்கும் லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.அறிவழகன் அவர்களுக்கும் தொடக்கக் கல்வி துணை இயக்குநா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர இருவா் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆா்.பூபதி ஆசிரியா் தேர்வு வாரியத் துணை இயக்குநராகவும், அந்தப் பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் அவர்கள் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா் என அதில் அவர் கூறப்பட்டு உள்ளார்.
கொரோனா நோய் பரவல் தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கர்நாடாக மாநிலத்தில் தற்போது 2418 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். வரும் 31ம் தேதியுடன் நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கொரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கார்நாடாகாவிற்க்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட எந்த போக்குவரத்தின் வாயிலாகவும் கரநாடாகாவிற்க்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கடந்த 201 7ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவு தேர்வு மருத்து படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படுகிறது.
பொதுவாக மே மாதத்தில் நடத்தப்படும் இத்தேர்வுகள் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் ஜூலை மாதம் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை நீட் தேர்வுக்காக இந்த ஆண்டு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி இனையதளம் வாயிலாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஜூன் 15-ம் தேதி முதல் துவங்கப்படவிருக்கும் இந்த பயிற்சியை நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இனையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தினந்தோறும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் பயிற்சி பெற விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், http://app.eboxcolleges.com/neetregister என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில் மாணவர்கள் பெயர், மின்னஞ்சல், பள்ளி முகவரி, மாவட்டம் ஆகியவற்றோடு நீட் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் இன்று வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறது.
பெரும்பாலானோர் இந்த போது முடக்கத்தையும் மீறி அவசியமின்றி வெளியே சுற்றியதால் மார்ச் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை அதாவது மே 28 ஆம் தேதி வரை 5.08 லட்சம் வழக்குகள் மூலம் 5.42 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் விதிகளை கடைபிடிக்காத பல வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு அபராதம் விதித்தும் நூதன தண்டனை அளித்தும் எச்சரித்து காவல்த் துறையினர் அனுப்பினர்.
நேற்றுவரை அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 8.36 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய ராணுவம் குறித்து தவறான தகவலை பரப்பிய சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக சீனா இந்திய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்தும் அதற்கு பாஜக தலைமையிலான மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனம் செய்யும் வகையில் திருமாவளவன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில்,டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலேஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடுசிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்துபண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’எனபதாகை பிடிக்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் GoBack என்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு இருக்கும் ஒரு படத்தையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பதாகை போலி என்றும்,மோடி மீதுள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்த இவரை கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
H Raja vs Thirumavalavan-News4 Tamil Online Tamil News
இது குறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் https://t.co/WDddmpT5VO
சமீபத்தில் திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று ஹச் ராஜா கோரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் தொழிலாளர்கள், அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து கவலையடைந்தனர்.அதே நேரத்தில் காதலர்களோ எப்பொழுது ஊரடங்கு முடியும் காதலியை சந்திக்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் காத்திருத்தலை தாண்டி கொரோனாவை சற்றும் பொருட்படுத்தாமல் காதலில் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக காதலனும் கேரளா காதலியும்.
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம் செல்வராணி இவர்களின் மகன் பிரதீப். இவர் கேரளாவின் கோட்டயத்தில் பணியாற்றி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காயத்ரி என்ற பெண்ணை காதலித்து சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் காதலித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெற்றவர்களால் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார் பிரதீப்.
ஊரடங்கு முடிந்து கேரளாவிற்கு சென்று விடலாம் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் தனது காதலியை பார்க்க முடியாமல் தவித்து வந்தார் பிரதீப். இந்நிலையில் பிரதீப்பும் காயத்திரியும் கைப்பேசி மூலமாக தங்கள் தவிப்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். கேரளாவில் உள்ள கோட்டயத்தில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானித்து பிரதீப், திருமணத்திற்காக கேரளா செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தபோது பிரதீப்பிற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை.
மேலும் தமிழக எல்லைப் பகுதியான குமுளி சோதனைச் சாவடி வரை சென்று அங்கிருந்த கேரள அதிகாரிகளிடம் எவ்வளவோ எடுத்துக் கூறி முறையிட்டும் அவர்கள் கேரளாவிற்குள் செல்ல அனுமதி தரவில்லை. இந்நிலையில் வேறு வழியில்லாமல் காயத்ரிக்கு அழைப்பு விடுத்து உடனடியாக தமிழக – கேரள சோதனைச் சாவடிக்கு வரும்படி தெரிவித்தார்.
தனக்காக காத்திருக்கும் காதலனுக்காக காயத்ரி மணப்பெண்ணா தன்னை அலங்கரித்து குமுளி சோதனைச் சாவடிக்கு வந்தார். இருவரும் சோதனைச்சாவடி அருகிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். இவர்களின் உண்மை காதலை புரிந்து கொண்ட அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த சிறிய மாரியம்மன் கோயிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து மணமகனின் பெற்றோர் உட்பட சிலரை மட்டும் அழைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணம் முடித்து வைத்தனர்.
பிறகு மணமக்களை ஆசீர்வதித்து மணமகளை கேரளாவிற்கும், மணமகனை தமிழகத்திற்கும் அனுப்பி வைத்தனர். கொரோனா என்கிற வில்லனை மீறி காதலர்கள் வெற்றிப்பெற்ற செய்தி, ஊரடங்கினால் நேரில் சந்திக்கமுடியாமல் தவிக்கும் உண்மை காதலர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.