Home Blog Page 5625

இந்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமா?

இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைவதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மே 4 முதல் 28 வரை மொத்தம் 25 நாட்கள் வரை அக்னிநட்சத்திரம் நீடிக்கும். கோடை வெயில் சுட்டெறிக்கும் சூழலில் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த மாதம் மே நான்காம் தேதி ஆரம்பித்த அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழ்நாட்டில் வெயில் படிப்படியாக உயர்ந்தது. பல இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத்(Faranheit) தாண்டி சுட்டெரித்தது.

இந்நிலையில் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.

கரூர், வேலூர், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பம் பதிவானது. இதனையடுத்து சேலம், பாளையங்கோட்டை, திருச்சி, திருப்பத்துர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரியும், ஈரோட்டில் 104 டிகிரியும் வெப்பம் நிலவியது.

மதுரை -101
தருமபுரி -101
நாகை -100,

பரங்கிப்பேட்டை -100 என பல இடங்களில் வெயில் நேற்று சதமடித்தது.

இவ்வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும் இதே போன்று வெயிலின் தாக்கம் நீடித்தால் புவி வெப்பமயமாகி நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை மக்கள் சந்திக்க நேரிடும் என புவியியல் வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

விபத்து நேரத்தில் லாக் செய்துள்ள போனிலிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி?

0

ஒவ்வொருவரும் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் மொபைலில் லாக் செய்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் விபத்தில் சிக்கும் போது அவர்களுடைய உறவினர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பாஸ்வேர்டு போட்டு போனை லாக் செய்து வைத்திருப்பவர்கள் கீழ்கண்டவாறு செய்தால் அவசர நேரத்தில் அவர்களது உறவினர்களுக்கு சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

Phone இல் பாஸ்வோர்ட் போட்டு வைத்திருப்பவர்கள் இதற்காக கட்டாயமாக செய்ய வேண்டியவை.

இதன் மூலமாக போன் லாக் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் விபத்தில் சிக்கி இருக்கும் போது அவர்களது போனிலிருந்து பெற்றோர்,உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனிலிருந்து சுலபமாக தகவல் தெரிவிக்கலாம்.

இதற்காக உங்கள் போனில் உள்ள contact -ல் group என்ற option இருக்கும் அதை open செய்து அதில் ICE Emergency Contact -ல் உங்கள் பெற்றோர் சகோதரர் நண்பர்கள் உள்ளிட்டோரின் நெருக்கமானவர்களின் எண்களை சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

அவசர தேவையின் போது உங்கள் போன் லாக்கில் இருக்கும்போது, Lock -ன் கீழே Emergency Calls ஐ கிளிக் செய்தால் நீங்கள் சேவ் செய்து வைத்திருக்கும் எண்கள்
வரும். அந்த எண்ணிற்கு அந்த போனிலிருந்து கால் செய்ய முடியும்.

இதை தெரிந்து வைப்பதுடன் உங்கள் போனிலும் இதை போல பதிவு செய்து வையுங்கள் ஆபத்து காலங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும்.

திருமண ஆடம்பர செலவுகளை குறைக்கும் ஊரடங்கு திருமணங்கள் – பொதுமக்கள் ஆதரவு

திருமண செலவுகளை குறைக்கவா ? இந்த ஊரடங்கு திருமணங்கள்

கொரானா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இப்பொதுமுடக்கத்தின் போது மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க திருமண சுப நிகழ்ச்சிகளுக்கு மணமக்களுடன் சில பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்து.

இதனால் தமிழ்நாட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பல மணமக்களுக்கு எளிமையான முறையில் வீடுகளிலும், கோவில்களிலும் ஒரு சில நபர்கள் மட்டும் கலந்துக்கொள்ள திருமணம் நடக்கிறது. திருமணம் கலந்து கொள்ள முடியாதோர் வீடியோ அழைப்பில் (Video call)லில் திருமணத்தை பார்த்துவிட்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

எளிமையான முறையில் நடக்கும் இத்திருமணங்களை வரவேற்றாலும், பெண் அல்லது பிள்ளை வீட்டார் திருமண செலவை குறைக்கவும், கல்யாண செலவுகள் பற்றின உறவினர்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கவுமே இப்படி எளிமையாக திருமணத்தை நடத்தி தப்பித்துக்கொள்கின்றனர் என ஒரு சில தரப்பினர் கூறியுள்ளனர்.

பொதுவாக “வீட்டைக் கட்டி பார், கல்யாணம் செய்து பார்” என்ற பழமொழிக்கேற்ப தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யலாம் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும்பொழுது அதில் உள்ள ஆனந்தம் தெரியாமல் கல்யாண செலவு என்கிற பாரம் தெரிகிறது. கல்யாணம் முடிந்த பிறகும் அந்த பாரத்தை சுமக்கும் நிலையால் நிம்மதி இழந்து மறுபடியும் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ஆனால் இவ்வாறு எளிமையாக நடக்கும் திருமணத்தினால் பெற்றவர்களும் மணமக்களும் கல்யாண சுமையை உடைத்து ஆனந்தம் கொள்கின்றனர்.

உறவினர் வாய்ச்சொல்லுக்கு பயப்படாமல் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்காக நடைபெறும் எளிய திருமணங்கள் வரவேற்கத்தக்கது எனவும் வருங்காலங்களில் இல்லற நிம்மதியை கெடுக்கும் ஆடம்பர செலவுகளை தவிர்த்து எளிமையான முறையில் திருமணங்கள் நடக்கவேண்டும் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் தவறினாலும் சரி தங்கள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த காத்திருப்போம் எனவும் ஒரு சில மணமக்கள் உள்ளனர்.

பெண் பார்க்கும் வேளையில் இப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு காலம் முழுவதும் தங்களுக்கு கல்யாணம் நடைபெறாதா ? கனவாக போகிவிடுமா ? என்ற கவலையுடனும் 90களில் பிறந்த முரட்டு சிங்கிள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பகுதியை தங்கள் நாட்டுடன் இனைத்து வரைபடம் வெளியிட்ட நேபாளம்!

0

இந்தியாவின் உத்தராகண்ட் எல்லையில் உள்ள சிறிய நாடு நேபாள். மிக சிறிய நாடான நேபாளம் சமீபத்தில் வெளியிட்ட தங்கள் நாட்டின் வரைபடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இணைத்து தங்களது பகுதி என்று வெளியிட்டது.

மாற்றம் செய்த இந்த நாட்டு வரைபடத்து ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர தீர்மானித்திருந்தனர். இதற்கு இந்தியா தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைக்கு இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள பொவதில்லை என அறிவித்துள்ள நேபாள பிரதமர் கே.பி. ஒலி, எதிர்க்கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் உருவானதன் பின்னணி என்ன?

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக் – தர்சுலா இடையிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையை கடந்த மே 8 ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு நடைபெற்றவுடன் நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ராவுக்கு நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி எதிர்ப்பு தெரிவித்து சம்மன் அனுப்பி இருந்தார்.

கலாபானி இந்தியாவிற்க்கு சொந்தமான பகுதி. ஆனால் அதனை நேபாளம் தன்னுடையது என கூறி வருகிறது. இந்தப் பகுதி சீனாவின் திபெத் பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வழியை வர்த்தகத்திற்கு சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த வழி மூலம் கைலாஷ், மானசரோவர் செல்வதற்கும் யாத்திரிகர்கள் பயன்படுத்துகின்றனர். கைலாஷ், மானசரோவர் செல்லவே இந்த சாலையை இந்தியா அமைத்துள்ளது.

இதனால் தான் தற்போது தேவையில்லாமல் நேபளம் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.

பாஜகவில் அடுத்ததாக இணையபோகும் திமுக பிரமுகர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்

0

சமீபத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

திடீரென்று திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர் பாஜகவில் இணைந்தது பற்றி விசாரித்த போது பாஜக சார்பாக இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இதற்கு முன்பு வகித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவியை துரைசாமிக்கு வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும், மேலும் இது குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் நட்டாவிடம் அவர் பேசியிருப்பதாகவும் சொல்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்த துரைசாமியைத் தொடர்ந்து திமுகவிலிருந்து இன்னும் சில முக்கியத் பிரமுகர்கள் கமலாலயம் நோக்கி வருவார்கள் எனவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

dmk

கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைவது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக தலைமை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பது உறுதியாகிறது. பாஜகவின் இந்தச் செயலால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

புல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

0

கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வாகனம் வெடிகுண்டு தாக்குதல் போல, நேற்று நடந்த மற்றொரு தாக்குதல் திட்டத்தை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியை ஒட்டிய புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தினர் சென்ற வாகனத்தின் மீது வெடிமருந்து நிரப்பிய தீவிரவாதிகளின் வாகனம் மோதியதில் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர், மேலும் அந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவத்தினர் அழித்தனர். இந்நிலையில் இதேபோன்ற மற்றொரு தாக்குதல் திட்டத்தை தற்போது இந்திய ராணுவத்தினர் இன்று அதிரடியாக முறியடித்துள்ளனர். 

தெற்கு காஷ்மீரின் ராஜ்போரா நகரில் உள்ள ராணுவ முகாமிற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையிலான வாகனம் ஒன்று வந்துள்ளது. ஏற்கனவே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே இந்திய ராணுவத்திற்கு கிடைத்த உளவுத்துறை அறிக்கையின்படி தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் எனஇ இந்திய இராணுவத்தினர் முன்னெச்சரிக்கையாக இருந்தனர்.

இந்நிலையில் தான் இந்திய ராணுவ வீரர்கள் சந்தேகத்திற்குரிய அந்த காரை சுற்றிவளைத்து அதில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வாகனத்திலிருந்த நபர் தப்பியோடிய நிலையில், அந்த காரை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

https://twitter.com/ANI/status/1265869848132718593

பிறகு நடைபெற்ற சோதனையில் அந்த வாகனத்தில் சுமார் 40 கிலோ வெடிமருந்து இருப்பது இந்திய இராணுவத்தினரால் கண்டறியப்பட்டுள்ளது. பிடிபட்ட அந்த வாகன எண்ணானது, ஸ்கூட்டர் ஒன்றின் எண் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்தேகத்திற்குரிய அந்த காரை இந்திய ராணுவ வீரர்கள் நெருங்கியதும், அதிலிருந்த அந்த தீவிரவாதி தப்பி ஓடி விட்டான் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வாகனம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வெடி வைத்து அழிக்கப்பட்டது. 

தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்

0

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார்.

இதற்கிடையே கடந்த மே மாதம் 6-ஆம் தேதி இரவு மனைவியை பார்ப்பதற்காக சூரஜ் அஞ்சல் பகுதிக்கு சென்றார். அன்று இரவு மனைவியின் வீட்டில் தங்கினார்.

அன்று இரவின் போது மறுபடியும் உத்ராவை பாம்பு கடித்து மயங்கிய நிலையில் இருந்தார்‌. உத்ரா இருந்த அறையில் இருந்த பாம்பும் அடித்துக்கொல்லப்பட்டது.

உயிருக்கு போராடிய நிலையில் உத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உத்ராவின் சாவில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். உத்ரா இறந்த பின்பு அவரது கணவர் சூரஜின் நடவடிக்கையில் சில மாற்றத்தை போலீஸார் கவனித்தனர்.

இதையடுத்து சூரஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சூரஜ் வரதட்சணைக்காக அவர் மீது பாம்பை ஏவி விட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

சமீபத்தில் நூதன கொலைகள் கேரளாவில் நடக்கின்றன. சூப்பில்(Soup) சைனடு வைத்து ஒரு குடும்பத்தையே கொன்ற பெண்ணின் கொடூர செயல் கேரளா மாநிலத்தை உலுக்கியதை போல, விஷப்பாம்பை ஏவி மனைவியை கொலை செய்த கணவனின் செயலும் தற்போது அம்மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு – போனஸ் மதிப்பெண்கள் அறிவித்த தேர்வுகள் இயக்கம்

கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. தேர்வு நிறைவடைந்த சில நாட்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் விடைத் தாள் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்ற நிலை நீடித்தது. ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் விடைத் தாள் திருத்தும் பணியை அரசு தேர்வுகள் இயக்கம் துவங்கியது.

அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருக்கும் சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த விடைத் தாள் திருத்தும் மையங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

தேர்வு வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களில் 12 பேர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் நாளுக்கு நாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையின் முக்கிய மண்டலங்களிலும் கொரானா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக சென்னையின் முக்கிய நகரமான அண்ணா நகரில் இன்றுடன் கொரானா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது அங்கு வசிப்பவர்களுக்கு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சென்னையின் தூங்கா நகரான கோடம்பாக்கத்தில் 1559 பேரும் , திரு.வி.க நகரில் 1325 பேரும் , அதிகபட்சமாக வடசென்னையின் முக்கிய நகரான ராயபுரத்தில் 2252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலை நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தலைமை செவிலியர் உட்பட 8 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ராமதாஸ் கூறிய காரணம்! ஒப்பு கொண்ட மருத்துவ குழு

0

சென்னையில் கொரோனா பதிப்பானது தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணம் குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனையில் மருத்துவ குழுவினர் இந்த காரணத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் “சென்னையில் கட்டுப்படாத கொரோனா: சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அரசுத் தரப்பில் புதிய, புதிய உத்திகள் கடைபிடிக்கப் பட்டாலும் கூட, கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையாததைப் பார்க்கும் போது, தலைநகர் சென்னையில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை என்னவாகுமோ? என்ற அச்சம் வாட்டுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 12,203 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டில் 888 பேர், காஞ்சிபுரத்தில் 330 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 825 பேர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 14,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது 77% ஆகும். சென்னையில் ஏப்ரல் இறுதியில் 906 பேர் மட்டும் தான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றுடன் முடிவடைந்த 27 நாட்களில் 11,297 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 92% நடப்பு மே மாதத்தில் தான் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், சென்னையை கொரோனா வைரஸ் எவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறது என்பதற்கு இப்புள்ளி விவரங்களே சாட்சி.

கோயம்பேட்டில் கொரோனா தொற்று கடந்த மாத இறுதியில் தான் வேகமாக பரவத் தொடங்கியது. அதன்பின் இம்மாத தொடக்கத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது, புதிய யுத்திகள் வகுக்கப்பட்டது, நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கொரோனா குறையவில்லை. அண்மையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு இ.ஆ.ப. அதிகாரி, ஒரு காவல்துறை உயரதிகாரி அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் புதிய பொறுப்பு அதிகாரிகளும் இணைந்து இரவு, பகலாக பாடுபட்டு, புதிய உத்திகளைக் கடைபிடித்தாலும் அதற்கான பயன் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது.

சென்னையில் அதிக அளவில் சோதனைகள் செய்யப்படுவதால் தான் பாதிப்பு அதிகமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால், அது ஓரளவுக்குத் தான் உண்மை; கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது தான் இந்த நிலைக்கு காரணம் என்று மே 18-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். அதை முதலமைச்சருடன் நேற்று முன்நாள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ வல்லுனர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ‘‘ சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 5 விழுக்காட்டினர், அதாவது ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டால், அவர்கள் அனைவரையும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்குள் சோதனை செய்து கண்டுபிடித்து, தனிமைப் படுத்தினால் மட்டும் தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சென்னையில் இப்போது அதிக எண்ணிக்கையில் சோதனை நடத்தப்பட்டாலும் கூட, அது போதுமனதல்ல. இப்போதைய வேகத்தில் சோதனை நடத்தினால், ஒரு லட்சம் பேரையும் கண்டுபிடிக்க மாதக்கணக்கில் ஆகும். அதற்குள் அந்த ஒரு லட்சம் பேரிடமிருந்து இன்னும் பல லட்சம் பேருக்கு கொரோனா பரவி விடும் ஆபத்து உள்ளது.

கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும், குறைந்தபட்சம் இறப்பு விகிதம் 0.7% என்று வைத்துக் கொண்டாலும் கூட 1400 பேர் உயிரிழப்பார்கள் என்பது வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இதை எச்சரிக்கையாகக் கொண்டு செயல்படாவிட்டால் விபரீதங்களை தவிர்க்க முடியாது.

சென்னையில் கொரோனா சோதனைகளை அதிகரிப்பது சாத்தியமானது தான். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 42 அரசு ஆய்வகங்கள், 28 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 70 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் தினமும் சராசரியாக 30 ஆயிரம் சோதனைகள் செய்ய முடியும். ஆனால், நேற்று 11,231 சோதனைகள் தான் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மே 4-ஆம் தேதி 50 ஆய்வகங்கள் மட்டுமே இருந்த போது செய்யப்பட்ட 12,863 சோதனைகளை விட 14.53% குறைவாகும். இது போதாது.

மற்றொருபுறம் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்படும் ஒத்துழைப்பும் போதுமானதல்ல. கொரோனாவை விரட்ட மக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று 22 முறை அறிக்கைகள் வாயிலாகவும், 25-க்கும் மேற்பட்ட முறை டுவிட்டர்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், மக்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும். ஆனால், சென்னையில் 40% மக்கள் முகக் கவசம் அணிவதில்லை; சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சென்னையிலிருந்து கொரோனா நோயை விரட்ட முடியும்.

அணை உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறும் போது, அதை தடுப்பதற்கான பணிகள் தண்ணீர் பாயும் வேகத்தை விட விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல், சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான பணிகள், நோய் பரவுவதை விட அதிக வேகத்தில் நடைபெற வேண்டும். இதை உணர்ந்து சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளின் எண்ணிக்கையை இரு மடங்காகவோ, வாய்ப்பிருந்தால் அதை விட கூடுதலாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும், மீண்டும் சென்னை மாநகர மக்களை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்து, முகக்கவசம் அணிதல், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.