Home Blog Page 5623

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

0

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய 4 மாவட்டங்களில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவாய்ப்புள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே

0

ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது திரைத்துறையில் தவிர்க்கமுடியாத ஒன்று. சமூக வலைத்தளங்களில் நடிகர் அல்லது நடிகைகளின் ரசிகர்கள் எதாவது ஒரு காரணத்திற்காக சண்டை போட்டுக்கொள்வார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பதிவை பார்த்த சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்(Hack) ஆகிவிட்டது என்று கூறினார். பிறகு சற்று நேரம் கழித்து தொழில்நுட்ப குழு உதவியுடன் கணக்கை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து நீக்கிவிட்டதாக பூஜா ஹெக்டே தெரிவித்தார். இருந்தும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவிட்டார். அப்பதிவின் கமெண்டுகளில்(comments) சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.
அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

We support PoojaHegde என்று பூஜா ஹெக்டேவிற்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை(Hashtag) பதிவிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமந்தா இவ்வாறு பேசி இருப்பது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனைவரும் கூறி வருகின்றனர்.

மேலும் டீவிட்டரில் ஒருவர், பெண்கள் எப்போதும் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என ட்விட்டரில் பதிவிடும் சின்மயி, பூஜா தவறு செய்தாரா என தெரியாமலேயே, மற்றொரு பெண்ணை இவ்வளவு ஏளனமாக பேசுவது சரியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யார் மீது தவறு என உறுதிப்படுத்தாமல் இப்படி குழுவாக சேர்ந்து மோசமாக பேசுகிறீர்கள். பெண்ணியம் பற்றி பேசும் நீங்கள் அதில் இதை எதில் சேர்ப்பீர்கள் என ஒருவர் கேட்டுள்ளார்.
மேலும் பலரும் சமந்தா மற்றும் சின்மயி ஆகியோரை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

மூன்று சந்தானங்களுடன் யோகிபாபு – வைரலாகும் டிக்கிலோணா போஸ்டர்கள்

0

மூன்று கதாபாத்திரங்களாக சந்தானம் மற்றும் யோகி பாபுடன் டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர் வெளிவந்தது.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக தன் புது பயணத்தை தொடங்கினார் சந்தானம். அவரது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்ற படம் உருவாகிவரும் நிலையில் அதில் சந்தானம் முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களாக நடித்துள்ளார். நேற்று முன்தினம் இந்த படத்தின் முதல் பார்வை(First Look) போஸ்டரை வெளியிபட்டது படக்குழு. அதில் சந்தானம் மூன்று விதமான கதாபாத்திரங்களில் இருப்பதாக காட்டப்பட்டது. ஒரு கதாபாத்திரம் கதாநாயகனாகவும், ஒன்று காமெடியனாகவும் மற்றும் மற்றொன்று வில்லன் என மூன்று விதமாக சித்தரித்திருந்தது அப்போஸ்டரில்‌.

அது மட்டுமின்றி நேற்று இரண்டாவது போஸ்டர் வெளிவந்தது. அதில் சந்தானம் பி.கே திரைப்பட அமீர் கான் போல் உடை எதுவும் இல்லாமல் இரண்டு நான்-ஸ்டிக் பாத்திரங்களை கொண்டு உடலை மறைத்துக்கொண்டு இருப்பது போல காட்டப்பட்டிருந்தது.

மேலும் ‘சொன்னது போலவே
முழு லுக் இதோ’ என சந்தானம் இந்த நிர்வாண கோலம் பற்றி நக்கலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இரண்டாவது போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டிக்கிலோனா படத்தின் முன்றாவது போஸ்டர் வெளியிட்டது அப்படக்குழு. அந்த போஸ்டரில் சந்தானத்துடன் நடிகர் யோகி பாபுவும் இருந்தது திரைரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியது.

சந்தானம் மட்டும் இருந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அவரோடு தற்போது யோகி பாபுவும் இருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.
சந்தானத்தின் முந்தைய படமான டகால்டி படத்திலும் யோகி பாபு நடித்து இருந்தாலும் பெரிய அளவில் படம் ஓடாததால். இந்த முறை கூடும் கூட்டணியாவது வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் இப்படத்திற்காக.

இதைப்பற்றி ட்விட்டரில் தயாரிப்பு நிறுவனம் ‘மூன்று சந்தானம் = அதிகம் trouble. மூன்று சந்தானம் + யோகி பாபு = சொல்லவே வேணாம்’ என தெரிவித்துள்ளது.

கார்த்திக் யோகி இயக்கி உள்ள இப்படத்திற்கு டிக்கிலோனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அனகா, ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ராஜேந்திரன், என பலரும் இதில் நடித்து உள்ளனர்.

இதற்கு முன்பு மாநகரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி டிக்கிலோனா படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்

ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் என ரசிகர்களை கவரும் வகையில் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

டிக்கிலோனா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் அதனால் ரசிகர்களின் மத்தியில் பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று போஸ்டர்களும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பு ஊரடங்கு முடிந்தபிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மள மளவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கை நோக்கி தமிழகம்

அதிகரிக்கும் கொரானா பாதிப்பு. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த நாட்களில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றுடன் தமிழகத்தில் கொரானா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20246 ஆக உயர்ந்துள்ளது.
இன்றுமட்டும் சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 11362 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் கொரானா பரவலைச் சார்ந்தே பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில் குணமடைந்து வெளியே அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டிஸ்சார்ஜ்(Discharge) எண்ணிக்கை 11,000ஐ எட்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதை நேரத்தில் பலி எண்ணிக்கை
தமிழகத்தில் 8776 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 9 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் என அனைவராலும் பேசப்படுகிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்ய நினைத்தது கொரானா நோயாளிகளை அச்சம் கொள்ளவைத்தது‌.

தி நகர் ரங்கநாதன் தெருவில் அதிரடியாக அனைத்து கடைகளையும் மூடிய மாநகராட்சி

சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு எப்போதுமே பரபரப்புடன் இருக்கும் தெரு. சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன் என பிரபலமான ஜவுளி கடைகள் அமைந்திருக்கும் இந்த தெருவில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் இங்கு வந்து செல்வார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ல்டச்சத்தை தாண்டும்.

அப்படிபட்ட இடம் கொரோனா ஊரடங்கினால் சுமார் 50 நாட்களுக்கு மேலாக மூடி கிடந்தது. இதனால் இந்த ஒரு தெருவை நம்பி பிழைப்பை நடத்தும் ஆயிரக் கணக்கான மக்கள் சரியான வருமானமின்றி தவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுபாட்டுகளுடன் சிறிய கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து ரங்கநாதன் தெருவில் பெரிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் இங்கு ஆய்வை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் என கொரோனா பாதுகாப்பு விதிகள் எதையும் பின்பற்றாததையடுத்து அனைத்து அனைத்து கடைகளையும் உடனடியாக மூட அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து சுமார் 150 கடைகளும் மூடப்பட்டன.

இனி வாட்சாப் மூலம் சமயல் சிலிண்டர் புக் செய்யலாம் – வழிமுறை என்ன தெரியுமா?

மக்களுக்கு எளிதாக் சேவை செய்யும் வகையில் எண்ணை நிறுவனங்கள் பல வசதிகளை செய்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன், IVR உட்பட பல்வேறு வழிகளில் மக்கள் சமயல் சிலிண்டர்கள் முன் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் மூலம் இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிலிருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலிண்டர் வினியோகம் செய்தவுடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பும். அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றி இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்

  • கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து கேஸ் பதிவு செய்யு, REFILL என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்கு வந்துவிடும்.
  • கேஸ் இணைப்பில் பதிவு செய்யப் படாத அலைபேசி எண்ணிலிருந்து பதிவு செய்யம், REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID> என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்க்கு வந்துவிடும்.
  • உங்கள் கேஸ் பதிவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள
    STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்> என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் தற்போதைய நிலை குறித்த தகவல் உங்கள் வாட்ஸப்பிற்க்கு வந்துவிடும்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி – ஆஸ்திரேலியா இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு

0

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் வரிசையாக ரத்து செய்யப்பட்டு வந்த நிலையில் பல அணிகளுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகள் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொண்டன.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் ஆட இருந்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆட இந்தியா முன்பே திட்டமிட்டு இருந்தது.

கொரோனா பாதிப்புகளுக்கிடையே நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்ல இந்தியா சம்மதம் கூறியதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு வெளியிட்டுள்ள கிரிக்கெட் அட்டவணையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்த அட்டவணையின்படி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கள் அக்டோபரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் தொடங்கி ஜனவரி வரையும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரியிலும் நடைபெற உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள டி20 தொடர் அட்டவணையில்
முதல் டி20 போட்டி அக்டோபர் 11 அன்று பிரிஸ்பேனிலும்
இரண்டாவது டி20 போட்டி அக்டோபர் 14 ளில் கேன்பர்ராவிலும்
மூன்றாவது டி20 போட்டி அக்டோபர் 17 அன்று அடிலெய்டிலும் நடக்க உள்ளது.இதற்கிடையில் ஆப்கானிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் ஒரு டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.

அதற்கிடையே ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது. அந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த்தில் நடைபெற உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் அட்டவணை :

முதல் டெஸ்ட் – டிசம்பர் 3 முதல் 7 வரை – பிரிஸ்பேன்

இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 11 முதல் 15 வரை – அடிலெய்டு

மூன்றாவது டெஸ்ட் – டிசம்பர் 26 முதல் 30 வரை – மெல்போர்ன்

நான்காவது டெஸ்ட் – ஜனவரி 3 முதல் 7 வரை – மெல்போர்ன்

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ள ஒரு நாள் போட்டித் தொடர் அட்டவணை :

முதல் ஒருநாள் போட்டி – ஜனவரி 12 – பெர்த்

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 15 – மெல்போர்ன்

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜனவரி 17 – சிட்னி

கொரோனா – இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு

0

உலக கொரானா பாதிப்பில் முதல் பத்து இடங்களில் இந்தியா – இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இரண்டாமிடம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பில் உலகநாடுகளின் மத்தியில் 9-வது இடத்தை பிடித்தது. இந்தியா.

கொரானா தொற்றால் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 175 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,65,799 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா நாடுகள் உள்ள நிலையில் இந்தியா முதல் பத்து இடங்களில் இடம்பெற்றதால் இந்திய மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் கொரானா பாதிப்பில் முதல் இடத்தை பிடித்துள்ளது.மேலும் பலி எண்ணிக்கையிலும் முதல் இடத்தை பிடித்திருக்கும் மாநிலமாக மகாராஷ்ட்ரா உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா தொற்றினால் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடிக்குமென்ற அபாயம் உருவாகிறது.இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று கலந்தாலோசிச்க உள்ளார்.

கொரோனாவை வைத்து அரசியல் செய்யும் ட்ரம்ப்

0

மே-29 இன்றுடன் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரந்துள்ளது. இதனால் உலகில் முதல் முறையாக லட்சம் பேரை பறிகொடுத்து கொரானா பலி எண்ணிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளது அமெரிக்கா. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 775 பேர் கொரானா தொற்றால் பலியாகிருக்கின்றனர்.

இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன, எவ்வாறு புதைக்கப்பட்டன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை.

இதனால் வெளிநாட்டவரை தன் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒரு துருப்புச்சீட்டாக கொரானாத் தொற்றை பயன்படுத்துகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் என பிற நாட்டவரால் விமர்சிக்கப்படுகிறது

மேலும் இந்த இக்கட்டான காலத்தில் H1B விசா காலத்தை நீட்டிக்காமல், அமெரிக்காவில் பணிபுரியும் பிறநாட்டவரை உடனடியாக வெளியேற அறிவிப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

H1B விசா ரத்து செய்யப்பட்டால் இரண்டு லட்சம் வெளிநாட்டவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவர். அவற்றுள் ஒரு பாதி அங்கிருக்கும் பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆட்சியைக் கைப்பிடித்திலிருந்து மக்களின் அதிருப்தியை மட்டும் சம்பாதித்த ஒரே அமெரிக்க பிரதமர் டிரம்ப் என அந்நாட்டு மக்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அங்கு பணிபுரியும் பிறநாட்டவர்களை வேலையிலிருந்து நீக்குவதன் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தன் நாட்டவர் மட்டுமே தன்னாட்டில் இருக்க வேண்டுமென்றும் வெளிநாட்டவர்கள் மீது எதிர்ப்புணர்வை கிளப்பி விட்டு அரசியல் கொண்டிருந்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பிடிக்க கொரானா என்கிற கேடயத்தை உபயோகித்து சீனா வைரஸ்களை பரப்பும் நாடு குற்றம் சாட்டியும், தன் நாட்டு மக்களுக்காக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்திற்காக இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்தும் என அமெரிக்க மக்களுக்காக எதையும் செய்ய தயாரென்று மக்களிடம் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி அரசியல் செய்துகொண்டிருக்கிறார் டிரம்ப்.

” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

0

கொரோனா பொதுமுடக்கத்தினால் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் ( 2D Entertainment ) தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைமில் (Amazon Prime ) இன்று ரிலீஸ் ஆகியது.

மே 29ம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு படம் அமேசானில் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் முழு படமும் லீக் செய்யப்பட்டது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
பொதுமுடக்கத்தினால் தமிழ் புது படங்கள் எதுவும் வெளிவராமல் உள்ள நிலையில், OTT தளத்தில் வெளியாகவிருந்த முதல் தமிழ் படமும் இப்படி தமிழ்ராக்கர்ஸால் பாதிப்பை சந்தித்துள்ளது அப்பட குழுவினருக்கு கவலையளித்தது.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த பொன்மகள் வந்தாள் படம் கொரோனா பாதிப்பினால் வெளியாகாமல் போனது. அதனால் அந்த படத்தை நேரடியாக OTTயில் ரிலீஸ் செய்ய 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவெடுத்தது. இந்த திடீர் செயலலாலல் தியேட்டர்கள் பாதிக்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் OTT ரிலீஸில் உறுதியாக இருந்து வந்தார் சூர்யா. இனி சூர்யா – ஜோதிகா தரப்பு படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் இனி நீங்கள் தயாரிக்கும் மற்றும் நடிக்கும் படங்களை OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என தியேட்டர் உரிமையாளார்கள் எச்சரித்ததுள்ளனர்.

2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பொன்மகம் வந்தாள் திரைப்படத்தினை ஜே.ஜெ பிரெட்ரிக் ( J.J Fredic) என்பவர் இயக்கியுள்ளார். தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிர்த்தரப்பு வக்கீலாக ஆர். பார்த்திபனும் மேலும் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போன்ற பல பிரபல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இப்படத்தினை அமேசான் ப்ரைமில் ( Amazon Prime ) பார்த்துவிட்டு படம் மனதை உருக்கும் உணர்வுகள் நிறைந்த படம் என பலரும் சமூக வலைதளங்களில் படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

பெரிய வியாபார நோக்கில் பார்க்காமல், பொதுமுடக்கத்தில், வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களிடம் படத்தினை சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என பலரால் பாராட்டப்படுகிறது.