சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 44 லட்சத்து 38 ஆயிரத்து 371 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 15 லட்சத்து 46 ஆயிரத்து 811 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.
இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 78,003 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,549 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 26,235 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):
மகாராஷ்டிரா – 25,922/975 டெல்லி – 7,998/106 குஜராத் – 9,267/566 தமிழ்நாடு – 9,227/64 தெலுங்கானா – 1,367/34 கேரளா – 534/04 ராஜஸ்தான் – 4,328/121 உத்தரபிரதேசம் – 3,729/83 ஆந்திர பிரதேசம் – 2,137/47 கர்நாடகா – 959/33 மத்திய பிரதேசம் – 4,173/232 ஜம்மு & காஷ்மீர் – 971/11 மேற்கு வங்கம் – 2,290/207 பஞ்சாப் – 1,924/32 ஹரியானா – 793/11 பீகார் – 940/07 அசாம் – 80/02 சண்டிகர் -187/03 உத்தர்கண்ட் – 72/01 லடாக் – 43/0 அந்தமான் & நிக்கோபார் -33/0 சத்தீஸ்கர் – 59/01 கோவா – 07/0 இமாச்சல பிரதேசம் – 66/02 ஒடிசா – 538/03 பாண்டிச்சேரி – 13/01 மணிப்பூர் – 02/0 ஜார்க்கண்ட் – 173/03 மிசோரம் – 01/0 அருணாச்சலப் பிரதேசம் – 1/0 திரிபுரா – 155/0 நாகாலாந்து – 01/0/01 மேகாலயா – 13/01 தாத்ரா நகர் ஹாவலி – 01/0
தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 64 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 2,176 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);
இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
முழு கடனையும் அடைத்து விடுகிறேன் – இந்தியாவிடம் சரணடைந்த விஜய் மல்லையா
இந்தியாவில் முன்னணி தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. மதுபான ஆலை, விமான நிறுவனம், தொலைக்காட்சி, ஐபிஎல் கிரிக்கட் அணி என பல தொழில்களை நடத்தி வந்த அவர், பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் அளவிற்க்கு பெற்றிருந்தார். அந்த கடனைத் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடினார்.
இதனையடுத்து அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்த அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, அவர் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் பெற்ற முழு கடனையும் 100 சதவீதம் திருப்பி செலுத்தி விடுகிறேன் என்றும் தனகுக் எதிரான அனைத்து வழக்குகளை முடித்துவிடுங்கள் என்று மத்திய அரசிடம் விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்தற்காக நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கேற்றார் போல் ரூபாய் நோட்டுக்களை அச்சிடலாம். ஆனால் என்னை போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீத கடனை வங்கிகளிடம் திருப்பி செலுத்துகிறேன் என பல முறை கோரிக்கை விடுத்தும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. நான் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் செலுத்தி விடுகிறேன். நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும், கைவிடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இனி தப்பிக்க முடியாது என்று புரிந்து கொண்ட விஜய் மல்லையா இந்திய அரசிடம் சரணடைந்துள்ளதே அவரின் இந்த கோரிக்கை காட்டுவதாக அனைவரும் கருதுகின்றனர். அவரின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்குமா?
டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் வழக்கமாக குடிக்கும் நபர்கள் பெரும்பாலும் அந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடந்த வாரம் ஊரடங்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழுமையான மதுவிலக்கு கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக ஆர்வலர்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. ஆனால், மதுக்கடைகளை திறந்த அடுத்த சில நாட்களில் இந்த நிபந்தனைகளை மீறியதால், தமிழகம் முழுவதும் 41 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் மூட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இது குறித்த பிரதான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதி மன்றம் இன்றைக்கு தள்ளி வைத்திருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வராத நிலையில், மதுக்கடைகளை திறக்க தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் மக்கள் உயிர் தான் முக்கியமே தவிர வருமானம் அல்ல என டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம், பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் சீர்குலைந்தால் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இவ்வாறு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மது பழக்கமும் ஒரு கொடிய நோய் என்றும் ஏழை – எளிய மக்கள், தங்களின் வருமானத்தில் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றி கொள்ளாமல் மது அருந்த அதிகமாக செலவழிப்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மதுக்கடைகளை மூட வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்க டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகள் எதுவும் மதிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம், டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 500 டோக்கன் நடைமுறையை பின்பற்றவுள்ளதாகவும்,மேலும் மதுபான விற்பனை தொடர்பான நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு அளித்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது என்றும் தமிழக அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தேவையான மென்பொருள் மற்றும் செயலியை வழங்க தயாராக இருப்பதாக ஹிப் பார் என்ற நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் தமிழக அரசுத்தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
டாஸ்மாக் பதில்மனுவில், 12 கடைகளில் மட்டும் தான் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 170 கோடி ரூபாய் எப்படி வசூல் எப்படி வந்தது என்பன உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும் முழுமையான மதுவிலக்கை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரர்களும் அக்கோரிக்கையை எழுப்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.
தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வரும் நிலையில், தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி கூறப்பட்டுள்ளது.
ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
இந்த செய்தி மக்களுக்கு ஆறுதலாகவும் மற்ற மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் – திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள்:
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர்.
வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் 7 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர். அந்த 7 நாட்களுக்கு பின்னர் பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்தால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்படுவர். இல்லையெனில் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். தொற்று இல்லையெனில், 7 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர். 7 நாட்களுக்கு பின்னர் அடுத்த பரிசோதனை செய்யப்படும் அதில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தால், அவரவர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட திட்டங்களை அறிவித்த நிர்மலா சீதாராமன் – விவசாயிகள் உட்பட பலருக்கு சலுகை
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தாததையடுத்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதை மீட்கும் பொருட்டு ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பாரத பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை காணொளி காட்சி மூலம் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக சில திட்டங்களை அறிவித்திருந்தார்.
சுயசார்பு திட்டம் என கூறப்படும் இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டங்களை இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் “12 ஆயிரம் சுய உதவி குழு மூலம் 3 கோடி மாஸ்க், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு உதவ, புதிதாக 7,200 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் புறங்களில் வீடற்றவர்கள் தங்க வைக்கும் முகாம்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முகாம் அமைக்கவும், உணவு வழங்கவும், மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் மே 13 வரை 14.62 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தை விட நடப்பு மே மாதத்தில் 40 சதவீதம் – 50 சதவீதம் வரை கூடுதலான மக்கள் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் எங்கு சென்று வேலை செய்தாலும் நலத்திட்டங்களைப் பெறும் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சொந்த ஊர் வந்தவர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணி நடக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பயன்படுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதம் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 8 கோடி பேர் பயனடைவார்கள்.இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடை இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும்.
மலிவு விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வட்டி மானியம் ஒராண்டுக்கு தொடரும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த திட்டம் மேலும் ஓராண்டு மார்ச் 21 வரை நீட்டிக்கப்படுகிறது.” என்றார்.
இன்று அவர் அறிவித்த திட்ட அம்சங்கள்
வீட்டுவசதி துறையை மேம்படுத்த 70 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மலிவு விலை வீட்டுக்கு வட்டி மானியம் அளிப்பதால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பயனடைவாவர்கள். இதனால், இரும்பு, சிமென்ட், போக்குவரத்து துறை தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகும்.
பயிர்க்கடன் வழங்கும் ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க நபார்டு வங்கி மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம்2.5 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
பயிர்க்கடன் வழங்கும் ஊரக வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி அவசர கால நிதி அளிக்கப்படும்.
வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் வேலைவாயப்பை உருவாக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, அவர்களின் பொருளாதாரம் பலம்பெறும்
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
அனைத்து தொழில் நிறுவனங்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. உரியப் பாதுகாப்பு வசதிகளுடன் பெண்களை இரவுப் பணியில் அனுமதிக்கலாம்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டடங்கள், அரசு – தனியார் பங்களிப்புடன் மலிவு வாடகை குடியிருப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக்கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி
குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி வழங்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் தற்போது ஒரு கி.மீ.,க்கு ரூ.1.60 இருக்கும் கட்டணம் ரூ.3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்பதாலும், சுங்கச்சாவடி கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், ஆம்னி பேருந்துகள் இயக்க நெறிமுறைகளை அரசு, அளித்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர்.
எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் மாவட்ட கலக்டரான மலர் விழி.
அதன்படி கீழ்க்கண்ட விதிகளை அமல்படுத்தியுள்ளார்:
தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுமதி அட்டை வழங்கப்படும்.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். 15 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதி அட்டையைப் பயன்படுத்தி வெளியில் வரலாம்.
நகராட்சி வார்டு எண்.1 முதல் 11 வரை உள்ளவர்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும். நகராட்சி வார்டு எண். 12 முதல் 22 வரை உள்ளவர்களுக்கு நீல நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும்.
நகராட்சி வார்டு எண். 23 முதல் 33 வரை உள்ளவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் அட்டை வழங்கப்படும். அவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே வெளியில் வரவேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்குத் தொழிற்சாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் செல்ல அனுமதி கிடையாது.
பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்
நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் சென்னை தவிர்த்துப் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க உயர்நீதி மன்றம் சில விதிமுறைகளை விதித்திருந்தது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உயர்நீதி மன்ற விதிகள் மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த உயர்நீதி மன்றம் உடனடியாக டாஸ்மாக கடைகளை மூட உத்தரவிட்டது. ஆன்லைனில் மதுபானங்களை விற்க அரசுக்கு அறிவுறுத்தியது.
டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 12 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதியின் முழு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று நீதிமன்றம் 8ஆம் தேதி உத்தரவிடப்பட்டதற்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் அளவிற்கு 16% கடைகள் தான் உள்ளன. சென்னையில் மட்டும் தான் இந்த பெரும்பாலான கடைகள் அமைந்திருக்கின்றன.
5,378 கடைகளில் 850 கடைகளில் மட்டும் தான் இந்த வசதி இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து விட்டது. கொரோனா ஊரடங்கால் இந்த பணியை தொடர முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறனர்.
சமூக இடைவெளி இல்லாமல் மதுக்கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக காவல்துறை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் 12 கடைகளை கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி திறக்கவில்லை என்றும் டாஸ்மாக் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற கணக்கில் டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு உத்தரவிற்க்கு உட்பட்டுத்தான் மதுக்கடைகள் கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தி,
இந்திய அணியில் ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கங்குலி இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உண்டு. இவர்களை நம்பி தான் இந்திய அணியே இருக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் எதிரணிக்கு பயம் உண்டாகும் அளவிற்கு ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.
இந்திய அணியின் சிறந்த ஜோடி சச்சின் மற்றும் கங்குலி. ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சச்சின் தனது வெளியிட்ட ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு.
நமது சிறப்பான ஆட்டங்களை நினைவுபடுத்துகிறது ‘தாதா’. கங்குலி அவர் அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில், புதிய பந்துகள், ஆஹா… எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது ஜோடியில் எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ‘கவர் டிரைவ்’ முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும். இன்னும் எவ்வளவு ரன்கள் நாம் எடுத்திருப்போம்,’ என சொல்லுங்கள்,’ என கேட்டார்.
இதற்கு உடனடியாக பதில் கூறிய கங்குலி. அவர் அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில், புதிய பந்துகள், ஆஹா… எப்படியும் 4,000 ரன்கள் இன்னும் அதிகமாக நமது ஜோடியில் எடுத்திருப்போம். போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ‘கவர் டிரைவ்’ முறையில் பந்துகள் பவுண்டரிக்கு பறப்பது போல தெரிகிறது. 50 ஓவர்களும் இப்படித் தான் நடந்திருக்கும் என்று கூறினார். ஐசிசி இந்த வெளியீடு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.