Home Blog Page 5648

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசிடம் இது குறித்து கருத்து கேட்டார். 10ம் வகுப்பு பெரும்பாலான வேலைகளுக்கு அடிப்படைத் தகுதி என்பதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்து அட்டவணையை வெளியிட்டார் செங்கோட்டையன். கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்திலிருக்கும் இந்த நிலையில் இந்த தேர்வை தற்போது நடத்துவது அவசியமா என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அரசின் தேர்வு அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள வழக்கில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 61 பேர் இந்த நோய் பரவல் தாக்கி இறந்துள்ளனர். 8 ஆயிரத்து 718 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 1- ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், நோய் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று மாணவர்களிடையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வருகிற ஜூன் 1ம் ந்தேதி நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வரவுள்ளது. இதனால் 10ம் வகுப்பு பொது தேர்வு மீண்டும் தள்ளி போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் இந்தியாவில் 12.50 கோடி பேர் வேலையிழப்பு!

கொரோனாவால் முடங்கியுள்ள இந்திய பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்யும் பொருட்டு இந்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவியை அறிவித்துள்ள நிலையில், இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில்,கடந்த ஏப்ரலில், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, CMIE அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா பரவலைத் தடுக்க மார்ச், 25ல் பிறப்பித்த ஊரடங்கு நடவடிக்கையால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களில், கடைகள், உணவகங்களில் பணியாற்றுவோர், சிறு வணிகர்கள், கூலி வேலை செய்வோரின் எண்ணிக்கை, பெருமளவு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மே 3ம் தேதி நிலவரப்படி, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 27.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2017 ஜூலை – 2018 ஜூன் மாதத்தில் 6.1 சதவீதமாக இருந்தது.

இது 45 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். வேலையிலுள்ளவர் மற்றும் வேலையில்லாதோரை உள்ளடக்கிய தொழிலாளர் பங்களிப்பு விகிதம், ஏப்ரல் 21 நிலவரப்படி 35.4 சதவீதமாக இருந்தது. வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்ததால், மே, 3ல் 36.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு, 39.60 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவாகும்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு, மேலும் 11.40 கோடி குறைந்து, 28.20 கோடியாக சரிவடைந்துள்ளது: என கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

ஊரடங்கால் மலேரியா, காசநோய் இறப்புகள் அதிகரிக்கும் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகத்தின் பார்வை முழுவதும் கொரோனா நோய் மீது மட்டுமே உள்ளது.

இதனால் கொரோனா நோய்க்கு மட்டுமே முன்னுரிமை அளித்து உலக நாடுகள் சிகிச்சையளித்து வருகின்றன. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு ஊரடங்கும் காசநோய் உள்ளவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் இதனால் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

காசநோய் தடுப்பு அமைப்பு, இம்பீரியல் கல்லூரி, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை போன்ற சில நிறுவனங்கள் இணைந்து மாதிரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் “இந்தியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டும் ஒவ்வொரு மாத ஊரடங்கிற்கும் சுமார் 2020 முதல் 2025 வரை கூடுதலாக 40,685 பேர் காசநோயால் இறப்பார்கள்.

3 மாத ஊரடங்கால், 2021-ல் உலகளவில் காசநோய் தொற்று மற்றும் இறப்பு விகிதத்தில் 5 முதல் 8 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருப்போம். 2020 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் காசநோயாளிகள் எண்ணிக்கை சுமார் 65 லட்சம் வரை கூடியிருக்கும். இறப்பு எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்து இருக்கும்.

2025-க்குள் காசநோய் இல்லா இந்தியா என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகளால் முன்னுரிமையை மாற்றக்கூடும். எனக் கூறியுள்ளனர்.

மற்றொரு ஆய்வில் கொரோனா நோய்த்தொற்று மலேரியா இறப்புகளை இரட்டிப்பாக்கும் என்றும், ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையில் 6 மாத இடையூறு ஏற்பட்டால் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 50 லட்சத்திற்கு அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்காசிய இயக்குனரான பூனம் சிங் “கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், அத்தியாவசிய சுகாதார சேவைகள் தொடர்ந்து இயங்குவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் தொற்றுநோய் பரவலின் போது சுகாதார அமைப்புகள் அதனை சமாளிக்க திக்குமுக்காடிப் போனதால் தடுப்பூசியால் தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்த நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மேலும் சில ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

0

நமது இந்திய நாட்டை பாதுகாக்கும் நமது வீரர்களுக்கு மேலும் சில பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் இவர்களுக்கு தற்போது அதிகமாக கொரோனா வைரஸ் தாக்க தொடங்கி விட்டது.

நமக்காக எல்லையை பாதுகாக்கும் நமது ராணுவ வீரரர்களையும் பாதித்தால் எதிர்காலம் கேள்வி குறிதான். கோரோனா பாதிப்பு அடுத்த வுகானாக மாறும் அளவிற்கு இந்தியா சென்றுகொண்டு இருக்கிறது.

நமது நாட்டில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அண்டை நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இதுவரை சுமார் 250-க்கும் அதிகமான (பி.எஸ்.எப்.) வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா?

0

கோரானா தடுப்பூசி தகவல்கள் – ஹேக்கர்களை கொண்டு திருட முயலும் சீனா?

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ துவங்கிய கொரோனா தொற்றினால், உலகம் பேரிடரை சந்தித்து வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலுள்ள நிலையில் கொரோனா வைரசை ‘சைனீஸ் வைரஸ்’ என்றே அமெரிக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொரோனாவிற்க்காக தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள நிபுணர்கள் முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகளின், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான தகவல்கள் சேகரித்து வைத்துள்ள சர்வர்களை (Servers) சீனா மாணவர்களை வைத்து ஹேக் செய்ய முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதுவரையிலும், ஹேக்கர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் இது தொடர்பாக, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்கா தொடர்ந்து இது போன்ற ஆதாரமில்லாமல் முன் வைக்கும் குற்றச்சாட்டை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 43 லட்சத்து 42 ஆயிரத்து 565 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 15 லட்சத்து 46 ஆயிரத்து 811 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 74,281 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 2,415 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 24,386 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 24,427/921
டெல்லி – 7,639/86
குஜராத் – 8,903/537
தமிழ்நாடு – 8,718/61
தெலுங்கானா – 1,326/32
கேரளா – 524/04
ராஜஸ்தான் – 4,126/117
உத்தரபிரதேசம் – 3,664/82
ஆந்திர பிரதேசம் – 2,090/46
கர்நாடகா – 925/31
மத்திய பிரதேசம் – 3,986/225
ஜம்மு & காஷ்மீர் – 934/10
மேற்கு வங்கம் – 2,173/198
பஞ்சாப் – 1,914/32
ஹரியானா – 780/11
பீகார் – 831/06
அசாம் – 65/02
சண்டிகர் -187/03
உத்தர்கண்ட் – 69/01
லடாக் – 42/0
அந்தமான் & நிக்கோபார் -33/0
சத்தீஸ்கர் – 59/01
கோவா – 07/0
இமாச்சல பிரதேசம் – 65/02
ஒடிசா – 437/03
பாண்டிச்சேரி – 13/0
மணிப்பூர் – 02/0
ஜார்க்கண்ட் – 172/03
மிசோரம் – 01/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0
திரிபுரா – 154/0
நாகாலாந்து – 01/0/01
மேகாலயா – 13/01
தாத்ரா நகர் ஹாவலி – 01/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 61 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 2,134 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(நோய் தொற்று ஏற்பட்டவர்கள் / இறந்தவர்கள்);

இந்தியாவில் கொரோனா தொற்று 75 ஆயிரத்தை நெருங்குகிறது : ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதிய உச்சம்..!!

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.

தற்போது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து 15 சிறப்பு ரயில்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.

வரும் 17ம் தேதியுடன் மூன்றாவது ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், ரயில் சேவை வழக்கம் போல் தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் ஜூன் 30 வரை பயணிகள் ரயிலை இயக்கப் போவதில்லை என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஜூன் 30 வரை ரயில்களில் முன்பதிவு செய்த அனைவருக்கும் முழு கட்டணத்தையும் திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்தவர்களுக்குத் தானாகவே பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டு, பணம் திரும்ப அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது இயக்கப்பட்டுவரும் 15 சிறப்பு ரயில்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்காக இயக்கப்படும் ‘ஷார்மிக்’ ரயில் சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

0

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிறுவனம் BRICS (பிரிக்ஸ்).

2012ம் ஆண்டு இந்தியா BRICS சார்பில் வளர்ச்சி வங்கியை உருவாக்க முன் மொழிந்தது. அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உருவானது. தற்போது அது புதிய வளர்ச்ஸ்க் வங்கி என்று அழைக்கப்படுகிறது. .சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தலைவராக, KV காமத் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, வங்கிக் கடனை வழங்கி வருகிறது (பிரிக்ஸ்).

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது பிரிக்ஸ்.

இது குறித்து, ப்ரிக்ஸ் வங்கியின் துணைத் தலைவர், ஜியான் ஜு “கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில், அவசர உதவி கடன் திட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவுக்கு,கொரோனா பரவல் தடுப்பு, நிவாரணம், சமூக, பொருளாதார திட்டங்களுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

0

பேஸ்புக்கால் மன நலம் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் – இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு

2004ம் ஆண்டு நண்பர்களால் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக். அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியடையும் என அதை நிறுவியவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். உலக அளவில் கிட்டத்தட்ட சுமார் 2.5 பில்லியின் பயனர்களை பேஸ்புக் தற்போது கொண்டுள்ளது.

இதனால் பயனர்கள் பதிவிடும் பதிவுகளை தனிக்கை செய்ய பேஸ்புக் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இவர்கள் கொலை, வன்முறை, பாலியல் பலாத்காரம் ஆகிய செய்திகள், படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது மனநலப் பாதிப்புக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளான பணியாளர் ஒருவர் கலிஃபோர்னியா நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் இந்த பணியை மேற்கொண்டவர்கள், மேற்கொள்பவர்கள் என சுமார் 11 ஆயிரத்து 250 பேருக்கு 52 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 392 கோடி ரூபாய்க்கு சமம்.

இதனால் ஒவ்வொருவருக்கும் 75ஆயிரம் ரூபாய் முதல் நாலரை லட்ச ரூபாய் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கவும் பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு

0

சீனாவில் இரண்டாவது இன்னிங்க்சை துவக்கிய கொரோனா? – அதிர்ச்சியில் அரசு

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் தான் முதன் முதலாக கொரோனா தொற்று தோன்றியது. அரசு சுதாரிப்பதற்குள் அதன் பரவல் அதிகரிக்க அந்த நகரையே லாக்டவுன் செய்தது சீன அரசு. அதற்குள் கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவியது.

கிட்டத்தட்ட மூன்று மாத போராட்டத்திற்குப் பின் தாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக தெரிவித்த சீன அரசு, அந்நகரில் கொரோனா சிகிச்சை எடுத்து வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு சீனா திரும்பி வருகிறது.

இந்நிலையில் சீனாவின் வடகிழக்கு நகரமான ஜிலினில் செவ்வாயன்று ஆறு புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த வாரம், அருகிலுள்ள ஷுலானில் 11 உள்ளூர் வழக்குகள் பதிவாகியுள்ளன, இவை அனைத்தும் ஒரு உள்ளூர் சலவை பெண்மணியுடன் தொடர்பு பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான சீன அரசு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த புதிய பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இது குறித்து ஜிலின் துணை மேயரான காய் டோங்பிங் “தற்போதைய கொரோனா நிலைமை மிகவும் சிக்கலானது மற்றும் கடுமையானது, மேலும் வைரஸ் மேலும் பரவும் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, ஜிலின் நகர்ப்புறத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வட கொரியா மற்றும் ரஷ்யாவின் எல்லையான ஜிலின் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஜிலின் ஆகும். அங்கு இப்போது பயணிகளுக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிரடியாக வுகான் மாகானதில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா கண்டறியும் சோதனை நடத்தத் துவங்கியுள்ளது சீனா. தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் இது இரண்டாவது அலையோ என்ற அச்சத்திலிருக்கிறது சீனா.